Rasi Palan This Week: சிம்ம ராசிக்கு அஷ்டம சனியிலும் அதிர்ஷ்டம்.. அதிசார குருவால் பணம் கொட்டும்
வார ராசி பலன்: அக்டோபர் 13 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 27 முதல் ஐப்பசி 2 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.
அந்த வகையில், அக்டோபர் 13 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 27 முதல் ஐப்பசி 2 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு அண்ணன், தம்பிக்குள் இருந்து வந்த வாக்குவாதங்கள் சரியாகும். இடம், வீடு, நிலம் விற்கும் யோகம் உண்டு. வெளியூர், வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். தேவையில்லாத வாக்குவாதம், பிரச்சனை, சண்டை போன்றவை நிவர்த்தியாகும். நிறைய பேருக்கு கையில் காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. மற்றவர்களிடம் சண்டை போடுவதை தவிர்ப்பது நல்லது.
அனுகூலம்
தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அனுகூலம் ஏற்படும். நம்பிக்கை, ஏற்றமும் உண்டாகும். இழுபறியாக இருந்த நிலைமைகள் கண்கூடாக மாறும். உத்தியோகம், வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். அனைத்து விஷயங்களிலும் லாபமும், சந்தோஷமும் ஏற்படும். உத்தியோகத்தில் எடுக்கும் முடிவுகளால் பாராட்டைப் பெறுவீர்கள்.
மன அழுத்தம் தீரும்
மன அழுத்தம் தீரக்கூடிய காலகட்டமாக இருக்கும். நிம்மதி ஏற்படும். வாகன அமைப்பில் மாற்றங்கள் ஏற்படும். பண வரவில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். தாய் வழி, தந்தை வழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். எல்லாவற்றையும் சமாளித்துக் கொள்ளலாம் என்கிற நிலை ஏற்படும். பழைய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். எல்லாவற்றையும் சமாளித்துக் கொள்ளலாம் என்கிற நிலை ஏற்படும்.
சுபவிரயம்
விரயங்கள் அதிமாக இருந்தாலும் அவை சுப விரயமாக இருக்கும். ஆச்சரியத்தக்க அனுகூலம் ஏற்படும். வண்டி, வாகனங்கள் இப்போது வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கிக் கொள்வது நல்லது. அஷ்டமத்தில் சனி இருந்தாலும், குரு அதிசாரத்தில் இருப்பதால், சனிக்கு குரு பார்வை கிடைப்பதால் மன அழுத்தங்கள் படிப்படியாக குறையும். உத்தியோக ரீதியாக அனுகூலங்கள் காணப்படும்.
வழிபாடு
குழப்பத்தை தவிர்க்க வேண்டும். மற்றவை எல்லாம் நல்லபடியாக நடக்கும். பகை, எரிச்சல் போன்றவற்றில் கவனம் தேவை. சிவபெருமான், விநாயகர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications