சுக்கிரன் பெயர்ச்சி: சிம்ம ராசிக்கு பிரச்சனைகளுக்கு எண்டு கார்டு.. இனி அதிர்ஷ்டம், குஷி மட்டும்தான்
சுக்கிரன் பெயர்ச்சி: 2025 வருடம் சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய அனைத்து முக்கிய பெயர்ச்சிகளும் நடந்துவிட்டன. ஆனாலும் இந்த வருடம் இன்னும் சில கிரகங்களின் பெயர்ச்சி உள்ளது. அந்த வகையில் இன்று மே 30 ஆம் தேதி சுக்கிரன் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்.
பொதுவாக சுக்கிரன் செல்வம் மற்றும் செழிப்புக்கு அதிபதியாவார். திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு அதிபதியாகவும் சுக்கிரன் இருக்கிறார். அதனால் அவரை களத்திர காரகன் என்றும் கூறுவார்கள். வண்டி, வாகனம், தொழில் கூட்டாளிகள் உள்ளிட்ட சுக வாழ்க்கைக்கும் சுக்கிரன் முக்கியமானவர். நவ கிரகங்களில் சுக்கிரனை அசுரன் என்று அழைப்பார்கள்.

சுக்கிரன் பெயர்ச்சி
நண்பன் ஸ்தானத்தை நிர்ணயிப்பதிலும் சுக்கிரனின் அமைப்பு மிகவும் முக்கியமானது. கலை, அழகு, ஜவுளி உள்ளிட்ட துறைகளுக்கும் சுக்கிரன் அதிபதியாக இருக்கிறார். அதனால் அவரின் பெயர்ச்சி முக்கியமானது. தற்போது சுக்கிரன் மீனம் ராசியில் உச்சமாக உள்ளார். அவர் வருகிற மே 31 ஆம் தேதி (வைகாசி 16) மேஷம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அங்கு அவர் ஜூன் 29 ஆம் தேதி வரை இருப்பார்.
சுமார் 30 நாட்கள் அவரின் தாக்கம் கடுமையாக இருக்கும். இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தக் கட்டுரையில் காணாலாம்.
சிம்ம ராசி பலன்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இதுவரை சுக்கிர பகவான் 8 ஆம் இடம் எனும் அஷ்ட ஸ்தானத்தில் மறைவிடத்தில் இருந்து வந்தார். தற்போது 9 ஆம் இடம் என்று சொல்லக்கூடிய பாக்கிய ஸ்தானத்தில் வந்து அமருவதால் சுக்கிரனால் பல்வேறு விதமான நன்மைகள் நடக்கப் போகிறது. கடந்த மூன்றரை மாதங்களாகவே சுக்கிர பகவான் 8 ஆம் இடத்தில் அமர்ந்து சில தொல்லைகளைக் கொடுத்து வந்தது. தற்போது அந்தப் பிரச்சனைகள் அனைத்தும் விலகப் போகின்றன.
சுக்கிரன் முயற்சி ஸ்தானத்தின் அதிபதி. தைரிய, வீரியத்தைக் கொடுக்கக் கூடியவர். தொழில் ஸ்தானத்துக்கு அதிபதியும் அதே சுக்கிரன் தான். கடந்த மூன்றரை மாதங்களாக சுக்கிர பகவான் 8 ஆம் இடத்தில் அமர்ந்து உங்கள் முயற்சிகளை குறைத்துக் கொண்டிருந்திருக்கும். மனம் எப்போதும் குழப்பத்துடனயே இருந்திருக்கும். தெளிவான முடிவெடுக்க முடியாத சில சந்தர்ப்ப சூழ்நிலைகளை தொழில் ரீதியாகவும், வேலை ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் ஏற்படுத்திக் கொண்டிருந்திருக்கும்.
புகழ் கிடைக்கும்
சுக்கிரப் பெயர்ச்சிக்குப் பின்னர் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். 3க்கு உரியவன் 9 ஆம் இடத்தில் இருப்பதால் நன்மைகளை அள்ளிக் கொடுப்பார். பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் செல்வதால் வியாபாரம், மனது, தன்னம்பிக்கை அதிகரிக்கும். கலைத் துறையில் இருக்கக்கூடிய சிம்ம ராசிக்காரர்களுக்கு பலவிதமான தொல்லைகள், பிரச்சனைகள் ஏற்பட்டுக் கொண்டிருந்திருக்கும். வேலைப் பளு, கஷ்டமான சூழ்நிலை போன்றவை எல்லாம் நீங்கும். மன மகிழ்ச்சி, புகழ் கிடைக்கும் அமைப்பு இனி உண்டாகும்.
மகிழ்ச்சி
வியாபாரம் பெருகும். வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள், சவால்கள் எல்லாம் நீங்கும். மே மாதத்திற்குப் பிறகு உங்கள் உழைப்புக்கேற்ப ஊழியம், உயர்வு, மகிழ்ச்சி உண்டாகும். புதிய புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். இதுவரை விற்பனை ஆகாத பொருள்கள் எல்லாம் விற்றுத்தீரும் யோகம் உண்டாகும். தொழில் ரீதியாக இருந்து வந்த பிரச்சனைகள், போட்டிகளில் இருந்தெல்லாம் விடுதலை பெறுவீர்கள். தொழிலில் மேன்மை உண்டாகும். புதிய புதிய உத்திகளைக் கையாண்டு வெற்றி காண்பீர்கள்.
தொழிலில் வெற்றி
வேலையில் சங்கடங்களை அனுபவித்து வந்தவர்களுக்கு அந்த நிலை எல்லாம் மாறி உங்களுடைய மதிப்பு அதிகரிக்கும். வேலையில் கெளரவத்தையும், புகழையும் பெறுவீர்கள். தொழிலினால் பாக்கியம், பெயர், புகழ், வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டாகும். வேலையில் சில பெண்களால் சந்தித்து வந்தவர்களுக்கு அதிலிருந்தும் விடுதலை பெறுவீர்கள்.
காதல் இனிக்கும்
காதலுக்குள் வலி வேதனையை அனுபவித்து வந்தவர்களுக்கு இனி காதல் உறவு இனிமையானதாக மாறும். கடந்த மூன்றரை மாதங்களாக குடும்பத்தில் இருந்து வந்த அலைச்சல்கள் எல்லாம் தீரும். மதிப்பு, மரியாதை உங்களுக்கு கிடைக்கும். செல்வாக்கு உயரும். மாமன் உறவுகள் இனிமையானதாக மாறும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் அனைத்தும் நீங்கும். கேது ராசியில் அமர்ந்திருப்பதால் ஞானம் பெறுவீர்கள். தெளிவான முடிவெடுப்பீர்கள்.
திருமண யோகம்
ஜூன் 12 முதல் 25 வரை சுக்கிரன் சொந்த நட்சத்திரத்தில் பயணிப்பதால் திருமணம் சார்ந்த விஷயங்கள், சுபகாரியங்கள் நடக்கும். புதிய உறவுகள் கிடைக்கும். காதல் கைகொடுக்கம், குழந்தை பாக்கியம் உண்டாகும். நினைத்து கொண்டிருக்கும் விஷயங்கள் எல்லாம் கட்டாயமாக நடக்கும். காதல் சந்தோஷம், மனமகிழ்ச்சி உண்டாகும்.
தொழில்
நல்ல பாக்கியம் கிடைக்கும் அமைப்பாக இருக்கும். பெண்கள், பெண்கள் சார்ந்த தொழில் நடத்துபவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். பிரிந்த கணவன், மனைவி ஒன்று சேர்வார்கள். காதல் மலரும். திருமண வரன் பாக்கியம் கிடைக்கும். அற்புதமான காலகட்டமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications