லக்கி பாஸ்கராக மாறும் மீனம்.. திடீர் அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் சுக்கிரன்.. தொட்டதெல்லாம் பொன்
சுக்கிரன் பெயர்ச்சி: ஜூன் 28 ஆம் தேதி சுக்கிரப் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த சுக்கிரப் பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் யோக பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டில் ஜூன் 28 ஆம் தேதி சுக்கிரப் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. சுக்கிரனே எல்லா மனித உயிர்களுக்கும் காதலுக்கும் காரணமாக இருப்பவர். காதலின் கிரகமாக கருதப்படும் சுக்கிர பகவான் ஜூன் 28 ஆம் தேதி மேஷத்தில் இருந்து ரிஷபத்துக்கு செல்கிறார். பொதுவாக சுக்கிரன் செல்வம் மற்றும் செழிப்புக்கு அதிபதியாவார்.

திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு அதிபதியாகவும் சுக்கிரன் இருக்கிறார். அதனால் அவரை களத்திர காரகன் என்றும் கூறுவார்கள். வண்டி, வாகனம், தொழில் கூட்டாளிகள் உள்ளிட்ட சுக வாழ்க்கைக்கும் சுக்கிரன் முக்கியமானவர். நவ கிரகங்களில் சுக்கிரனை அசுரன் என்று அழைப்பார்கள். அந்த வகையில், இந்த சுக்கிரப் பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மீனம் ராசி பலன்
குருவின் ஆதிக்கம் பெற்றவர்களாகவும், நல்லவர்களாகவும், ஆன்மீகத்தில் ஆர்வம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். தன ஸ்தானத்தில் இருந்த சுக்கிரன் 3 ஆம் இடம் எனும் முயற்சி ஸ்தானத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். 8க்கு உரியவரகாவும் சுக்கிரன் இருக்கிறார். 3 ஆம் இடத்தில் ஆட்சி பலத்தோடு சுக்கிரன் அமர்ந்திருக்கிறார். சுக்கிரன் உங்களுக்கு கெட்டவர்தான். ஆனாலும், சுக்கிரன் 3 ம் வீட்டில் அமருவதால் உங்களை வருத்திக் கொண்டிருந்த விஷயங்களில் இருந்து வெளியில் வரக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
தடைகள் நீங்கும்
நீங்கள் எடுத்த காரியங்களில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் தவிடுபொடியாகும் காலகட்டமாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். உங்கள் பிரச்சனைகளுக்கான மருத்துவர்கள் கிடைப்பார்கள். வலி, எதிர்ப்பு, பகை அனைத்தும் மாறும். வம்பு, வழக்கு, கோர்ட்டு விஷயங்கள் அனைத்தில் இருந்து விடுதலை பெறும் காலகட்டமாக இருக்கும். உங்களுடைய பிரச்சனைகள் அனைத்தும் நிவர்த்தியாகும் காலகட்டமாக இருக்கும்.
திடீர் அதிர்ஷ்டம்
8 ஆம் இடத்தில் சுக்கிரன் இருப்பதால் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் அனைத்தும் வந்து சேரும். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். பதவி உயர்வு, இடமாற்றம் உண்டாகும். திடீர் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். வெளிநாடு, வெளிமாநிலம், அந்நிய தேசத்துக்குப் பயணம் செய்யக்கூடிய பாக்கியம் கிடைக்கும்.
பயணம்
3 ஆம் இடம் என்பது தைரியம், வீரியம், சகோதரத்துவம். சகோதரர்களுடன் இணக்கம் ஏற்படும் காலகட்டமாக இருக்கும். தைரியமாக வீரியத்துடன் நீங்கள் நினைத்த காரியங்களை செயல்படுத்துவீர்கள். புதிய புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அதில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் சரியாகும். சிறு தூரப் பயணங்களைச் செய்வதற்கான வாய்ப்புகள் வரும்.
சொத்துகள் வாங்கும் யோகம்
நல்ல வியாபாரம் அதில் லாபம் உண்டாகும். திட்டங்களை வகுத்து தொழில், வியாபாரம் செய்வீர்கள். சுக்கிரன் பெண்களைக் குறிக்கக்கூடிய கிரகம். பெண்களுக்கு அருமையான காலகட்டமாக இருக்கும். சொகுசான வாழ்க்கை வாழ்வது, குடும்பத்துக்குத் தேவையானவற்றை செய்வது, வீட்டுக்கு தேவையான பொருள்களை வாங்குவது, வீடு வாங்குவது, வீட்டை அழகுப்படுத்துவது, நிலம் வாங்குவது போன்றவை உண்டாகும். புதிய வாகனங்கள், பழைய வாகனங்களை மாற்றும் யோகம் உண்டாகும்.
கடன் கிடைக்கும்
ஜூன் 29 முதல் ஜூலை மாதம் 8 ஆம் தேதி வரை சூரியனின் நட்சத்திரத்தில் சுக்கிரன் பயணிப்பதால் கேட்கும் இடங்களில் எல்லாம் கடன் கிடைக்கும். கடன் சார்ந்த விஷயங்களில் எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். அரசு சார்ந்த வேலைகளுக்கான தேர்வுகளை எழுதும் யோகம் உண்டாகும். தந்தையைப் பற்றி சிந்திப்பீர்கள். தந்தையின் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகளைத் தீர்க்கும் காலகட்டமாக இருக்கும்.
பாக்கியம்
ஜூலை 8 முதல் 25 ஆம் தேதி வரை சந்திரனின் நட்சத்திரத்தில் பயணிப்பதால் குழந்தைகளின் நலன், படிப்பு, வேலை, வெளிநாட்டில் படிக்கும் அமைப்பு, பூர்விகம் சார்ந்த விஷயங்கள், காதல் அமைப்பு பற்றிய சிந்தனைகள் ஏற்படும். ஜூலை 20 முதல் 25 ஆம் தேதி செவ்வாயின் நட்சத்திரத்தில் பயணிப்பதால் நல்ல பாக்கியங்கள் கிடைக்கும்.
அனுகூலம்
தன பாக்கியம் உண்டாகும். தொழிலில் மேன்மை ஏற்படும். தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். பட்டம், புகழ், பதவி கிடைக்கும். பணத்தைப் பற்றிய சிந்தனைகள், குடும்பத்தைப் பற்றிய எண்ண ஓட்டங்கள் ஏற்படும். கோயிலுக்குச் செல்வது, திருப்பணிகளைச் செய்வது, ஆன்மீகம் சார்ந்த எண்ணங்களைக் கொடுக்கும் காலகட்டமாக இருக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: பெண்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 4 ராசியினருக்கு கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி












Click it and Unblock the Notifications