தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. நல்லவை நடக்கும் காலம்
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி சித்திரை 1 ஆம் நாளான தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இந்தப் புத்தாண்டு மாற்றம் தரும் ஆண்டாக அமைய வேண்டும் என்பதே எல்லோருடைய எண்ணமுமாக இருக்கும். அந்த வகையில், தமிழ் புத்தாண்டில் கடக ராசியினருக்கு கிடைக்கப் போகும் நன்மைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வம், பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் சுப பலன்களையும், அசுப பலன்களையும் ஏற்படுத்தும். ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கவுள்ளது. பிறக்கும் பராபவ தமிழ் புத்தாண்டு சனி மற்றும் குருவின் திரிகோண சேர்க்கையுடன் ஏற்பட்டுள்ளது.

இந்த கிரக நிலையானது 12 ராசிக்காரர்களுக்கும் பல நல்ல மாற்றங்களையும், சவால்களையும் கொண்டுவர உள்ளது. சில ராசிகளுக்கு யோக பலன்களையும், சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். அந்த வகையில் இந்த தமிழ் புத்தாண்டில் கடகம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கடகம் ராசி பலன் (Kadagam Rasi Palan)
கடக ராசியினருக்கு பிள்ளைகளின் படிப்பு, தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் அற்புதமான முன்னேற்றங்கள் ஏற்படும். திருமண யோகம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். துணை அமைப்பு, காதல் அமைப்பு ஏற்படும். மனைவியின் வாழ்க்கையில் இருந்த கஷ்டங்கள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். மனைவியின் வேலை, உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் ஏற்றம் ஏற்படும்.
ஆடை ஆபரண சேர்க்கை
கடக ராசியினரின் துணைக்கு ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். நிறைய நன்மைகள் ஏற்படும். 2027 ஆம் ஆண்டு இறுதி வரைக்கும் சனி 9 இல் இருப்பதால் நல்ல யோகமான காலகட்டமாக இருக்கும். ஐந்தாண்டுகளாக இருந்து வந்த மன கஷ்டங்கள் எல்லாம் நீங்கும். வாகனத்தில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உரிய விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது நல்லது.
ஆரோக்கியம்
வயிறு கெடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வயிறு தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை. இல்லையெனில் தேவையில்லாத மன அழுத்தம் ஏற்படும். யோக பலன்கள் அதிகளவில் உண்டாகும். சுப விரய பாக்கியம் உண்டாகும். 8 இல் இருக்கும் ராகு திடீர் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். கடல் கடந்து தொழில் தொடங்குவோருக்கு ஏற்றம் ஏற்படும். லாட்டரியில் திடீர் ஜாக்பாட் அடிக்கும்.
வண்டி வாங்கும் யோகம்
புதிய வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சந்தோஷமும், ஏற்றமும் ஏற்படும் நல்ல காலகட்டம். தொழில் புரட்சி, உத்தியோகப் புரட்சி, வியாபாரப் புரட்சி செய்யக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். 2 ஆம் இடத்தில் கேது இருப்பதால் வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். திட்டுவது, கத்துவதை தவிர்ப்பது நல்லது. கடக ராசி அரசியல்வாதிகளுக்கு மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும். அற்புதமான பதவிகள் கிடைக்கும் நல்ல காலகட்டம்.
ஏற்றம்
பொருளாதாரத்தில் ஏற்றம் ஏற்படும். பண வரவு நன்றாக இருக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டம். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் ஏற்றம் ஏற்படும். இதுவரை இருந்து வந்த தடை தாமதங்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். முன்னேற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும் என்பதால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது.
வழிபாடு
நவக்கிரகத்தில் இருக்கும் குரு வழிபாடு, மகான்கள் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். லிவர், கிட்னி செயல்பாடுகளில், இடது பக்க உறுப்புகள் தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை. கோளார் பதிகத்தை சொல்வது, கேட்பது ராகு கேது தோஷத்தில் இருந்து உங்களைப் பாதுகாக்கும். பெற்றோர், பெரியவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நன்மை பயக்கும். வியாழக்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவளிப்பது நன்மையைத் தரும்.
-
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா?












Click it and Unblock the Notifications