தமிழ் புத்தாண்டு ராசி பலன்: கன்னி ராசிக்கு மே 14க்கு பிறகு மாறும் வாழ்க்கை.. தொட்டதெல்லாம் துலங்கும்
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி சித்திரை 1 ஆம் நாளான தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இந்தப் புத்தாண்டு மாற்றம் தரும் ஆண்டாக அமைய வேண்டும் என்பதே எல்லோருடைய எண்ணமுமாக இருக்கும். அந்த வகையில், தமிழ் புத்தாண்டில் கன்னி ராசியினருக்கு கிடைக்கப் போகும் நன்மைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வம், பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் சுப பலன்களையும், அசுப பலன்களையும் ஏற்படுத்தும். ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கவுள்ளது. பிறக்கும் பராபவ தமிழ் புத்தாண்டு சனி மற்றும் குருவின் திரிகோண சேர்க்கையுடன் ஏற்பட்டுள்ளது.

இந்த கிரக நிலையானது 12 ராசிக்காரர்களுக்கும் பல நல்ல மாற்றங்களையும், சவால்களையும் கொண்டுவர உள்ளது. சில ராசிகளுக்கு யோக பலன்களையும், சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். அந்த வகையில் இந்த தமிழ் புத்தாண்டில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கன்னி ராசி பலன் (Kanni Rasi Palan)
கன்னி ராசியினருக்கு ஜூன் மாதம் வரைக்கும் குடும்பத்தில் கோபப்படுவது, திட்டுவது, சண்டை சச்சரவுகளை ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது. இணக்கமாகச் செல்வது நல்லது. கோளார் பதிகத்தை சொல்லி வருவது தடைகளில் இருந்து உங்களைப் பாதுகாக்கும். உத்தியோகம், தொழில், வியாபாரம் நன்றாக இருக்கும். நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள்.
தொழிலில் யோகம்
வேற்று மொழி மனிதர்களால் அதிகளவிலான ஆதாயம் ஏற்படும். கடல் கடந்து வீடு வாசல், வண்டி வாகனம் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். கடல் கடந்து தொழிலை மேற்கொள்வீர்கள். திருமணத்தில் இருந்து வரும் பிரச்சனைகளில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். ஜூன் மாதத்திற்குப் பிறகு திருமணம் சார்ந்த விஷயங்களில் அனுகூலம் ஏற்படும். உறவுகளில் ஏற்றம் ஏற்படும். ஏற்கனவே திருமணத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கூட மறுமணம் செய்யக்கூடிய யோகம் உண்டாகும்.
யோக பலன்கள்
யோக பலத்தை அதிகளவில் பெறுவீர்கள். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் பெரிய ஏற்றத்தைப் பெறுவீர்கள். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். பதவி உயர்வு உண்டாகும். அரசு, அரசியலில் சிறிது இணக்கமாகச் சென்றால் பெரிதாக பேசப்படுவீர்கள். ஏற்றத்தை ஏற்படுத்திக் கொள்வது நல்லது.
கோபம் வேண்டாம்
உணர்ச்சிவசப்படாமல் இருக்கும் கன்னி ராசிக்கு பெரிய ஜெயம் ஏற்படும். நல்ல அனுகூலங்கள் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் ஜூன் மாதம் வரை கோபப்படாமல் இருப்பது நல்லது. நிறைய தெய்வ காரியங்களைச் செய்து மகிழ்வீர்கள். அபிராமி அந்தாதியில் இருக்கும் 40, 59 ,75 படிப்பது நன்மையைத் தரும். தெய்வ காரியங்களில் அதிகமாக ஈடுபடுவீர்கள். கோயில் திருப்பணிகள், அன்னாதனத்தை செய்வீர்கள்.
வழிபாடு
கலவையான பலன்களை பெறும் காலகட்டம். மே மாதம் 14 ஆம் தேதிக்குப் பிறகு அற்புதத்தை ஏற்படுத்தக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். எடுத்தெறிந்து பேசுவதை தவிர்ப்புத நல்லது. பெருமாள் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். அலர்ஜி, தோல், மயக்கம், கண், பல் சார்ந்த பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஹார்மோன் தொடர்பான குறைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications