தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ரிஷப ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. சனியின் அருளால் கொட்டும் அதிர்ஷ்டம்
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி சித்திரை 1 ஆம் நாளான தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இந்தப் புத்தாண்டு மாற்றம் தரும் ஆண்டாக அமைய வேண்டும் என்பதே எல்லோருடைய எண்ணமுமாக இருக்கும். அந்த வகையில், தமிழ் புத்தாண்டில் மேஷம் ராசியினருக்கு கிடைக்கப் போகும் நன்மைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வம், பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் சுப பலன்களையும், அசுப பலன்களையும் ஏற்படுத்தும். ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கவுள்ளது. பிறக்கும் பராபவ தமிழ் புத்தாண்டு சனி மற்றும் குருவின் திரிகோண சேர்க்கையுடன் ஏற்பட்டுள்ளது.

இந்த கிரக நிலையானது 12 ராசிக்காரர்களுக்கும் பல நல்ல மாற்றங்களையும், சவால்களையும் கொண்டுவர உள்ளது. சில ராசிகளுக்கு யோக பலன்களையும், சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். அந்த வகையில் இந்த தமிழ் புத்தாண்டில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம் ராசி பலன் (Rishabam Rasi Palan)
ரிஷப ராசியினருக்கு சனி இந்த ஆண்டும், அடுத்த ஆண்டும் அற்புதமான இடமான 11 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். பெற்றோரின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். துர்க்கை வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். வயிறு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் உரிய மருத்துவ ஆலோசனை பெறுவது ஏற்றத்தைக் கொடுக்கும். ஜூன் மாதத்துக்குள் கடன்களை அடைத்துக் கொள்வது நன்மையைத் தரும்.
தொட்டது துலங்கும்
எதிரிகளிடம் சுமூகப் பேச்சுவார்த்தை, சமாதானம் போன்றவை செய்து கொள்வது நல்லது. ஜூன் மாதத்தில் இருந்து நிறைய விஷயங்களில் லாபம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். முதலீடுகள் வந்து சேரும். மற்றவர்களுக்கு பண உதவி செய்வீர்கள். பெரிய வெற்றிகளைப் பெறக்கூடிய யோகம் உண்டாகும். அரசியலில் வெற்றி பெறும் யோகம் உண்டு.
தன்னம்பிக்கை அதிகரிக்கும்
தைரியம், தன்னம்பிக்கை ஏற்படும். திருமணத் தடை, புத்திர சந்தானத் தடை நீங்கும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் ஏற்றம் பெறுவீர்கள். சொந்தக்காரர்களால் சிறு சிறு பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. கடல் கடந்து முதலீடு செய்வீர்கள். உங்களை ஏமாற்ற பார்ப்பதால் என்பதால் கவனம் தேவை. கூட இருப்பவர்களின் தவறுக்கு பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.
புதிய வாகன யோகம்
வண்டி சார்ந்த விஷயங்களில் மாற்றம் செய்வீர்கள். புதிய வண்டிகளை வாங்கி மகிழ்வீர்கள். துர்க்கை கவசம் படிப்பது ஏற்றத்தைத் தரும். பட்டீஸ்வரம் போன்ற பிரசித்தி பெற்ற துர்க்கை கோயில்களுக்குச் செல்வது நன்மை பயக்கும். குடும்பத்தில் காணப்பட்டிருந்த பிரச்சனைகல் பரிபூரணமாக நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.
பண வரவு
கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் காப்பாற்றக்கூடிய யோகம் உண்டாகும். ஏற்றமும், அனுகூலமும் ஏற்படும். தொழிலில் மட்டும் சிறு சிறு இடைஞ்சல்கள் வர வாய்ப்புள்ளது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு நன்றாக இருக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். மற்றவர்களை நம்பி ஏமாறாமல் இருப்பது நன்மை பயக்கும்.
-
Kanni Rasi Palan: சொல்லி அடிக்கும் கன்னி ராசி.. இந்த விஷயங்களில் கவனமாக இருங்க..! -
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications