Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ் புத்தாண்டில் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. இந்த விஷயங்களில் ஜாக்கிரதை

Subscribe to Oneindia Tamil

தமிழ் புத்தாண்டு ராசி பலன்: வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி சித்திரை 1 ஆம் நாளான தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இந்தப் புத்தாண்டு மாற்றம் தரும் ஆண்டாக அமைய வேண்டும் என்பதே எல்லோருடைய எண்ணமுமாக இருக்கும். அந்த வகையில், தமிழ் புத்தாண்டில் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசியினர் யார், பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் சுப பலன்களையும், அசுப பலன்களையும் ஏற்படுத்தும். ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கவுள்ளது. பிறக்கும் பராபவ தமிழ் புத்தாண்டு சனி மற்றும் குருவின் திரிகோண சேர்க்கையுடன் ஏற்பட்டுள்ளது.

tamil-puthandu-rasi-palan-which-3-zodiac-signs-should-be-careful-during-this-tamil-puthandu

இந்த கிரக நிலையானது 12 ராசிக்காரர்களுக்கும் பல நல்ல மாற்றங்களையும், சவால்களையும் கொண்டுவர உள்ளது. சில ராசிகளுக்கு யோக பலன்களையும், சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். அந்த வகையில் இந்த தமிழ் புத்தாண்டில் அதிர்ஷ்டத்தை அள்ளும் 4 ராசியினர் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மேஷம் ராசி பலன் (Mesham Rasi Palan)

மேஷம் ராசியினருக்கு ஏழரை சனி நடந்து கொண்டிருப்பதால் தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும். நிறைய நன்மைகள் நடக்கும். சுபவிரயங்கள் அதிகரிக்கும். இதுவரை இருந்து வந்த பயம் எல்லாம் போகுமளவுக்கு நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். நல்ல நண்பர்கள் உங்களை சுற்றி இருப்பார்கள். கூட்டுத் தொழிலை ஆரம்பிக்கும் யோகம் உண்டு.

எங்கு சென்றாலும் எதையாவது யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். அந்த நிலைமைகள் எல்லாம் இந்த காலகட்டத்தில் நீங்கும். நிறைய பாசிட்டிவான விஷயங்கள் நடக்கும். நிறைய நன்மைகள் நடக்கும் காலகட்டம். இந்த ஆண்டை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நன்மை பயக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், வேலையில், படிப்பில் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும்.

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் ஏற்றம் பெறுவீர்கள். நிறைய நன்மைகள் கிடைக்கும் நல்ல ஆண்டாக உங்களுக்கு அமையும். நிறைய நன்மைகள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். வயிறு, அடிவயிறு, கழிவுகள், லிவர், கிட்னி, பாதம் வரை பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.

தனுசு ராசி பலன் (Dhanusu Rasi Palan)

தனுசு ராசியினருக்கு அர்த்தாஷ்டம சனி நடந்து கொண்டிருக்கிறது. உறவினர்களுடன் தகராறு இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. அவர்களுடைய ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. தினந்தோறும் உடற்பயிற்சியை தவறாமல் செய்து கொள்வது நன்மை. தனிமைப்படுத்திக் கொண்டு உங்களை வருத்திக் கொள்ள கூடாது. மனதிற்குப் பிடித்தவர்களை சந்திப்பது நன்மை.

வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டு. அசையும், அசையா பொருள் சேர்க்கை உண்டாகும். ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டை புதுப்பிப்பது, வீடு கட்டுவது, உங்களுக்குப் பிடித்த முதலீடுகளை செய்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் அடுத்தடுத்து நடக்கும். வார்த்தைக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். பண வரவு நன்றாக இருக்கும்.

திருமண யோகம்

திருமண யோகம் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குலதெய்வ வழிபாடு அற்புதமான ஏற்றத்தைக் கொடுக்கும். சுபவிரயங்கள் நடக்கும். வீட்டை புதுப்பிப்பது, இன்டீரியர் டெக்கரேட் செய்வது போன்ற சுபவிரயங்களைச் செய்வீர்கள். வாங்கிய பொருள்களையே வாங்குவதை தவிர்ப்பது நல்லது. நியாபக மறதி ஏற்படும்.

பழைய கடன்களை அடைக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் ஏற்றம் ஏற்படும். சனி இருப்பதால் தினந்தோறும் ஆயில் புல்லிங் செய்வது நன்மை. மூச்சுப் பயிற்சியை கடைப்பிடிக்க வேண்டும். திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். நல்லெண்ணெய், பசு நெய், திருநீறு, குங்குமம் வைத்து வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும்.

சிம்மம் ராசி பலன் (Simmam Rasi Palan)

சிம்மம் ராசியினருக்கு அஷ்டமசனி இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். டிசம்பர் வரைக்கும் கேது இருப்பதால் வண்டி வாகனத்தில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருப்பது நன்மை பயக்கும். 24 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாகனத்தில், தொழிலில், குடும்பத்தில் கவனமாக இருப்பது நல்லது. துணை சொல்வதைக் கேட்டு நடப்பது நல்லது. அவர்கள் உங்கள் நன்மைக்காகவே சொல்வார்கள் என்பதால் அதைக் கேட்பது நல்லது.

கடன் தீரும்

உறவுகள், நண்பர்கள் உங்களை உசுப்பேற்றுவதை நம்பாமல் இருப்பது நன்மை. குரு 12 இல் கடகத்தில் உச்சம் பெறுவதால் தாய் வழி உறவுகள், ரத்த பந்த உறவுகளில் மேன்மை ஏற்படும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். கடனை அடைப்பதற்கான முயற்சிகளில் ஏற்றம் பெறுவீர்கள். நிம்மதி ஏற்படும். முதலீடுகளை செய்து மகிழ்வீர்கள். இதுவரை இருந்து வந்த நோய் பாதிப்புகள் படிப்படியாக குணமடையும்.

ஆரோக்கியம்

நடக்க முடியாதவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டு குணமடைவீர்கள். நன்றாக நடக்கத் தொடங்குவீர்கள். எல்லா விதமான பிரச்சனைகளும் தீரும். நரம்பு, வயிறு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. மோர், மாதுளம்பழம் சாப்பிடுவது நன்மையைத் தரும். உணவு தொடர்பான விஷயங்களில் அக்கறை செலுத்துவது நல்லது. இரவு 7 மணிக்குள் உணவை முடித்துக் கொள்வது நல்லது.

பொறுமை அவசியம்

தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் மேலதிகாரிகளுக்கு ஆலோசனை கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. இணக்கமாகச் செல்ல வேண்டும். பொறுமையையும் நிதானத்தையும் கடைப்பிடிப்பது நல்லது. ஆரோக்கியம் பலப்படும். பண வரவு நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும்.

திட்டமிட்டு செய்யும் காரியங்களில் ஏற்றம் ஏற்படும். குடும்பத்தில் கோபப்படுவது, கத்துவதைத் தவிர்ப்பது நன்மையைத் தரும். சிம்ம ராசியினருக்கு திண்டிவனம் - பாண்டிச்சேரி செல்லும் வகையில் பஞ்சமுக ஆஞ்சநேயர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். மாத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை பைரவருக்கு தீபம் போடுவது நன்மையைத் தரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+