தை மாத பலன்: மேஷ ராசிக்கு தொழிலில் நடக்கும் அற்புதம்.. அள்ளிக் கொடுக்கப் போகுது கிரகங்கள்

Subscribe to Oneindia Tamil

தை மாத ராசி பலன் 2026: புத்தாண்டில் 2026 ஆம் ஆண்டில் வரும் முதல் தமிழ் மாதம் தை பிறக்கவுள்ளது. தை மாதம் மகர மாதம் என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் மேஷம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.

மகர மாதம்

சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். மகர மாதம் என்றும் கூறப்படுகிறது. சூரியனின் தேர் பாதை தெற்கு திசையில் இருந்து வடக்கு திசைக்கு மாறும் காலம் தான் தை மாதம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது ஐதீகம். மகாபாரதத்தின் பிதாமகரான பீஷ்மர் தை மாதத்தில் தனது உயிர் போவதற்கு அம்பு படுக்கையில் காத்துக் கொண்டிருந்தாராம். அந்த அளவுக்கு சிறப்பு பெற்றது தை மாதம். தேவர்களின் உதயகாலம் தை மாதம்.

thai-matha-palan-what-kind-of-benefits-will-get-mesham-rasi-people-during-this-motnh

சூரியன் வழிபாட்டுக்கு உகந்த மாதமாக தை மாதம் உள்ளது. சூரியன் இல்லையென்றால் இந்த உலகமே இல்லை. தை மாதம் 1 ஆம் தேதியான ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினம் கேட்டை நட்சத்திரத்தில் விருச்சிக ராசியில் சித்த யோகத்தில் அமையக்கூடிய நாளே பொங்கல் பண்டிகை. இந்தப் பண்டிகையின் விசேஷமே சூரியன், விவசாயிகள், கால்நடைகளுக்கு நன்றி செலுத்துவதாகும்.

பொங்கல் வைக்க நல்ல நேரம்

பொங்கல் தினத்தன்று காலையில் நேரமாக எழுந்து குளித்து முடித்து புத்தாடை அணிந்து சுவாமி கும்பிட்டுவிட்டு, சூரிய பகவானை வழிபாடு செய்து கிழக்கு நோக்கி அமர்ந்து பொங்கல் சாப்பிட வேண்டும். தை மாதத்தில் பிரம்ம முகூர்த்தத்தில் பொங்கல் வைக்கலாம். காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் பொங்கல் வைத்து இறைவனை வழிபாடு செய்வது நன்மை பயக்கும். சுக்கிர ஓரை, புதன் ஓரையாக இருந்தாலும் குளிகை நேரத்தில் பொங்கல் வைப்பது விசேஷமாகும்.

மேஷம் தை மாத ராசி பலன் (Mesham)

மேஷம் ராசிக்காரர்களுக்கு தை மாதம் அற்புதமான காலகட்டமாக இருக்கும். உத்தியோகம், வியாபாரம், படிப்பு, தொழில் ரீதியாக அனைத்து முன்னேற்றங்களும் கிடைக்கும். மிகப்பெரிய சந்தோஷமும், ஏற்றமும் கிடைக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் முன்னேற்றம் இல்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு நல்லவை நடக்கும்.

தொழில்

சூரியன் 10 ஆம் வீட்டிற்கு வந்திருப்பதால் தை, மாசி மாதத்தில் தொழிலை நிலைப்படுத்திக் கொள்வது நல்லது. சோம்பலைத் தவிர்ப்பது ஏற்றத்தைத் தரும். குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பிள்ளைகள் விஷயத்தில் அதிகளவில் சந்தோஷமும், அக்கறையும் எடுத்துக் கொள்ள வேண்டும். பணத்தை வீண் விரயத்தை செய்யாமல் சேமிப்பு செய்ய வேண்டும்.

கவனம்

தனிப்பட்ட முறையில் நல்ல விஷயங்கள் நடக்கும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். துர்க்கை வழிபாடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும். வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகளில் கவனமாக இருக்க வேண்டும். செவ்வாய் உச்சமாகி இருப்பதால் நிலம், விவசாயம் சம்பந்தப்பட்ட விஷயங்களை செய்து முடிக்கக் கூடிய நல்ல காலகட்டம்.

முன்னேற்றம்

குலதெய்வ வழிபாடு, துர்க்கை வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாகனம், கெளரவம், சந்தோஷம் ஏற்படக்கூடிய நல்ல மாதமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+