Thulam Rasi Palan: துலாம் ராசிக்கு அடுத்தடுத்து அதிரடி மாற்றம்.. 100 சதவீதம் இதான் நடக்கும்
சூரிய கிரகண பலன்: 2025 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி இரவு 11 மணி 01 நிமிடத்தில் தொடங்கிய சூரிய கிரகணம் 12 மணி 22 நிமிடத்தில் நிறைவடைந்தது. சூரிய கிரகணம் தொடங்கி 40 நாட்களில் 12 ராசிக்காரர்களுக்கும் பல்வேறு விதமான மாற்றங்கள் நடக்கும். அந்த வகையில், துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
நடப்பு ஆண்டில் சூரிய கிரகணமானது செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி இரவில் உத்திர நட்சத்திரம், சிம்ம ராசியில் ஏற்பட்டுள்ளது. சூரியனும், கேதுவும் இந்த நேரத்தில் இணையக்கூடும். சூரியன் கேது இணையும்போது 3 ராசிகளுக்கு பாதிப்புகள் ஏற்படும். மேஷம், சிம்மம், தனுசு ஆகிய 3 ராசிக்காரர்களுக்கு சற்று அதிகமான பாதிப்புகள் ஏற்படும். இதைத் தவிர சிம்மத்திற்கு முன்னும் பின்னும் இருக்கக்கூடிய ராசிகளான கடகம், கன்னி ஆகிய ராசிகள் என மொத்தம் 5 ராசிகளுக்கு சூரிய கிரகணத்தின் பாதிப்புகள் ஏற்படும்.

அதேபோல, மிதுனம் ராசி அல்லது லக்கினக்காரர்களுக்கு நிறைய பிரச்சனைகள் தீரும். மீனம், விருச்சிகத்திற்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். 40 நாட்களுக்குள் நல்ல விஷயங்கள் நடக்கும். அந்த வகையில், வரும் 40 நாட்களுக்கு துலாம் ராசிக்காரர்களுக்கு ஏற்படப் போகும் மாற்றங்கள், நன்மைகள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு அல்லது லக்கினம் சார்ந்தவர்களுக்கு விரைய ஸ்தானத்தில் சூரிய கிரகணம் நடைபெற்றுள்ளது. காலபுருஷனின் 6 ஆம் வீடு. அதிக கடன், வட்டியில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்புள்ளது. வெளிநாட்டில் வாழ்வோருக்கு பாதிப்புகள் அதிகளவில் இருக்கும். தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு அதிகளவில் பாதிப்பு இருக்காது.
ஆரோக்கியம்
தாத்தா, பாட்டிகளுக்கு பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கும் சூழல் உண்டாகும். நெஞ்சில் சளி கோர்ப்பது, மறைமுகமான இடங்களில் பிரச்சனைகள் வருவது, எதிர்பார்க்கும் விஷயங்கள் நெகட்டிவாக நடப்பது போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. எதை முயற்சி செய்கிறீர்களோ அந்த விஷயங்கள் தள்ளிப்போய் நடக்கும்.
இடமாற்றம்
12 ஆம் இடம் என்பது முதுகு எலும்பின் கீழ் பகுதியில் பிரச்சனைகள் வருவது, கணுக்கால் பிரச்சனைகள் வரும். கட்டாய இடமாற்றம் உண்டாகும். ஊர் மாற்றம், நாடு மாற்றம் ஏற்படும் சூழல் உள்ளது. நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வரும் மாற்றங்களை பயன்படுத்திக் கொள்வது நல்லது. அந்த மாற்றங்கள் அனைத்தும் உங்களுக்கு நன்மையை ஏற்படுத்தும். இந்த காலகட்டத்தில் வரும் வாய்ப்புகள் உங்களுக்கு நல்ல வாய்ப்புகளாக இருக்கும். இதுவரை கிடைக்காத வாய்ப்பாக இருக்கும்.
முன்னேற்றம்
இடம் மாறுகிறோமே, வீடு மாறுகிறோமே என்று யோசிப்பதைத் தவிர்த்துவிட்டு பயன்படுத்திக் கொண்டால் அற்புமதமான முன்னேற்றத்தை ஏற்படுத்தும். விரையத்தில் இருக்கும் சூரியன் ஸ்தானம், சூரியன் சந்திரன் சேர்க்கை, அமாவாசை யோகத்தில், மாகளயபட்சத்தில் சூரியகிரகணம் நடைபெற்றுள்ளதால் நீங்கள் உங்கள் அதிகாரியை விட்டோ, அல்லது நீங்கள் உங்கள் அதிகாரியை விட்டோ செல்லும் வாய்ப்பு ஏற்படும்.
வழிபாடு
குறிப்பாக, எலும்பு தொடர்பான பிரச்சனைகள், சிறு சிறு விபத்துகள், வயிற்றில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அனந்தசயனன், பத்மநாபன், ரங்கநாதன் எனும் படுத்த நிலையில் இருக்கும் பெருமாள் கோயில்களுக்குச் சென்று தாமரை புஷ்பங்கள், செம்பு பாத்திரம், நெல், கோதுமை, ஒரு துண்டு வெல்லத்தை வைத்து சுவாமிக்கு தட்சணையாகக் கொடுத்து வழிபடுவது நல்ல அனுகூலத்தை ஏற்படுத்தும். ரகசியங்களை வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது.












Click it and Unblock the Notifications