For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருப்பதி ஏழுமலையான் தரிசனம்..செப்டம்பர் மாத கட்டண சேவை டிக்கெட் ஆன்லைனில் நாளை ரிலீஸ்

ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் மாதம் நடைபெறும் கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகள் நாளை மாலை நான்கு மணிக்கு ஆன்-லைனில் வெளியிடப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, கட்டண பிரம்மோற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை ஆகிய சேவைகளுக்கான டிக்கெட்டுகளை பக்தர்கள் வழக்கம் போல் 27ஆம் தேதி மாலை 4 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.

இந்தியாவில் உள்ள பணக்கார கோவில் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினசரியும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். பள்ளி, கல்லூரிகளில் விடுமுறை விடப்பட்டுள்ளதால் தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள் திருமலையில் குவிந்து வருகின்றனர்.

Tirupati Ezhumalayan temple September month Seva tickets will be released online tomorrow

தினசரியும் 4 கோடி ரூபாய் உண்டியில் வருமானம் கிடைக்கிறது. 20 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து செல்கின்றனர். அதிகாலை 3 மணி சுப்ரபாத சேவை முதல் மாலை 5.30 மணி வரை சகஸ்ர தீப அலங்கார சேவை வரை பல்வேறு சேவைகள் நடைபெறுகின்றன. சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதலபாத பத்மாராதனை போன்றவற்றுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு டிக்கெட் கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படும் குழுக்கள் முறையில் ஒதுக்கீடு செய்யப்படும்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 வரை சுப்ரபாத தரிசனம் நடக்கும். சுப்ரபாத பூஜையை அடுத்து, காலை 3.30 முதல் 3.45 வரை சன்னதியை திரை போட்டு மறைத்து, சுத்தி எனப்படும் தூய்மை செய்யும் பணி நடக்கும். காலை 3.45 மணிக்கு "தோமாலை சேவை" ஆரம்பமாகும். சன்னதிக்கு பூக்கூடை வந்தவுடன் அர்ச்சகர் சுவாமியின் மார்பில் இருக்கும் மகாலட்சுமிக்கு முதலில் பூச்சரத்தை சாத்துவார்.

ஏழுமலையான் கோயிலில் தோமாலை சேவை காலை 4.30 மணிக்கு நிறைவுபெறும். இதையடுத்து கொலுவு நிகழ்ச்சி 15 நிமிடங்கள் நடக்கும். பின்னர் சுவாமிக்கு மாலைகள் சாத்தப்படும். கொலுவு தரிசனத்தை அடுத்து சகஸ்ரநாம அர்ச்சனை நடக்கும்.

சகஸ்ரநாம அர்ச்சனை முடிந்து பூஜை நடத்தப்படும். இந்த பூஜைக்கு "அர்ச்சனாந்தர தரிசனம் என்று பெயர். இதை பார்க்க ஒரு நபருக்கு ரூ.200 கட்டணம். மூன்று மாதங் களுக்கு முன்பே பதிவு செய்துகொள்ள வேண்டும். காலை 5.30க்கு துவங்கும் இந்த பூஜை 6.30 மணி வரை நடக்கும். ஊஞ்சல் மண்டபத்தில் தினமும் மாலை 5.30 மணிக்கு சகஸ்ர தீப அலங்காரம் செய்யப்படும். அப்போது அன்னமயா சங்கீர்த்தனம் பாடப்படும்.

செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதல பாத பத்மாராதனை சேவை ஆகியவை உள்ளிட்ட சேவைகளுக்கான டிக்கெட்டுகளை பக்தர்கள் நாளை ஜூன் 27 ஆம் தேதி காலை 10:00 மணி முதல் 29 ஆம் தேதி காலை 10:00 மணி வரை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.

பின்னர் முன்பதிவு செய்த பக்தர்களில், சேவைகளில் கலந்து கொள்வதற்கான பக்தர்கள் கம்ப்யூட்டரில் நடத்தப்படும் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்ட பக்தர்களுக்கு அது பற்றிய தகவல் அவர்களுடைய செல்போனுக்கு செய்தியாக வந்து சேரும். பின்னர் பக்தர்கள் உரிய பணத்தை செலுத்தி ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.

English summary
Tirupati Ezhumalayan temple September month Seva tickets will be released online tomorrow Devotees can usually book tickets online for the wedding ceremony, swing service, fare prom and sakaskara Deepa decoration service at the Thirumalai Ezhumalayan Temple from 4 pm on the 27th as usual.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X