ரிஷப ராசிக்கு தங்கத்தை குவிக்கும் யோகம்.. எடுத்த காரியத்தில் வெற்றி.. அதிர்ஷ்டமோ அதிர்ஷ்டம்
வைகாசி மாத ராசி பலன்: சித்திரை மாதம் நிறைவடைந்து வைகாசி மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்றால் சூரியன் மேஷத்தில் இருக்கும். வைகாசி மாதத்தில் சூரியன் ரிஷபத்திற்கு வரும். 15.5.2025 முதல் 14.06.2025 வரையிலான வைகாசி மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். கிரகங்களின் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த இடமாற்றம் ஒரு சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும்.

தமிழ்ப் புத்தாண்டின் முதல் மாதமான சித்திரை மாதம் நிறைவடைந்து வைகாசி மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்றால் சூரியன் மேஷத்தில் இருக்கும். வைகாசி மாதத்தில் சூரியன் ரிஷபத்திற்கு வரும். 15.5.2025 முதல் 14.06.2025 வரையிலான வைகாசி மாதத்தில் குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
அந்த வகையில், இந்த வைகாசி மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் யோக பலத்தை அதிகமாகப் பெற தினந்தோறும் அனுமன் வழிபாடு செய்வது நல்ல பலன்களைத் தரும். நரம்பு, தலை, கண், முதுகு தண்டுவடம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அரசாங்க விரோத காரியங்களில் ஈடுபடுபவர்களிடம் நிழல் கூட படாமல் இருப்பது நல்லது. தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
எடுத்த காரியத்தில் ஜெயம் ஏற்படும். உத்தியோகத்தில் காணப்பட்டிருந்த சிக்கலில் மேலதிகாரிகளுடன் தர்க்கம் செய்யக்கூடாது. அரசுத் துறை அரசியல்வாதிகள் அதீத கவனமாக இருக்க வேண்டும். பழைய கடன்களை அடைப்பதற்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். மருத்துவமனையில் இருந்து வீட்டிற்குத் திரும்பும் சூழல் ஏற்படும்.
மரண பயம் படிப்படியாக நீங்குவதை படிப்படியாக பார்க்கலாம். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியாக நல்ல விஷயங்கள் கைகூடக் கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். ஏற்றமும், அனுகூலமும், நம்பிக்கையும் ஏற்படக்கூடிய அதிஅற்புதம், சந்தோஷம், பலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். இழுபறியாக இருந்த நிலைமைகள் அனைத்தும் படிப்படியாக மாறுவது கண்கூடாகப் பார்க்கலாம்.
உத்தியோகத்தில் செல்வாக்கு கூடுவது கண்கூடாகப் பார்த்தாலும், கையெழுத்துப் போடுவதற்கு முன்பாக படித்துப் பார்த்துவிட்டு கையெழுத்து போடுவது நல்லது. யாருக்கும் ஜாமீன் கொடுக்காமல் இருப்பது நல்லது. இல்லையெனில் அதன் மூலம் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. எந்தவொரு வேலையை எடுத்தாலும் சுறுசுறுப்புடன் செய்து முடிக்கும் காலகட்டமாக இருக்கும். கடன்கள் அனைத்தும் தீரும் காலகட்டமாக இருக்கும்.
உடல்நலனில் உள்ள சிறு சிறு பிரச்சனைகளும் உரிய மருத்துவ சிகிச்சை மூலம் சரிசெய்து கொள்வதற்கான காலகட்டமாக இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு ஏற்படுவதற்காந வாய்ப்புள்ளது. மொத்தத்தில் இந்த வைகாசி மாதம் அனுகூலமான பலன்களைத் தரக்கூடிய மாதமாக இருக்கும். தங்க நகைகள் வாங்கக்கூடிய அதிர்ஷ்டமான நேரமாக இருக்கும். சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். பொருளாதாரம் முன்னேற்றமடையும்.
-
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications