Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீர விநாயகா...வெற்றி விநாயகா - 12 ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய பிள்ளையார்கள்

கணபதியை வணங்கிட கவலைகள் பறந்திடும். வினைகள் தீர்ப்பவர் விநாயகர். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் எந்த விநாயகரை வழிபடுவது என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கவலைகளை போக்குபவன் கணேசன், விநாயகருக்கு பல பெயர்கள் உண்டு. ஆதி விநாயகர் தொடங்கி வித்யா கணபதி, வீர கணபதி, செல்வ கணபதி பல கணபதிகள் உள்ளனர். விநாயகர் வினைகள் தீர்ப்பவர். சங்கடங்களை தீர்ப்பவர் சங்கரன் மைந்தன். விநாயகரை வணங்கினால் தோஷங்கள் பறந்தோடும். மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்கள் எந்த விநாயகரை எப்படி வணங்குவது என்று பார்க்கலாம்.

விநாயகருக்கு பல வடிவங்கள் உண்டு. பல பெயர்கள் உண்டு. 108 கணபதிகள் உள்ளனர். இன்றைக்கு ராக்கெட் விநாயகர் முதல் அத்திவரதர் விநாயகர் வரை பல விநாயகர்கள் உள்ளனர்.

ஜாதகத்தில் உள்ள தோஷங்களைப் பொறுத்தும் ராகு கேது தோஷம், சனி தோஷம், செவ்வாய் தோஷம் கடன் பிரச்சினை உள்ளவர்கள் வணங்க வேண்டிய கணபதியை பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் வீரமானவர்கள். செவ்வாயை ராசி நாதனாகக் கொண்ட நீங்கள் உங்க மனசுக்கு பட்டதை சரியென்று சொல்வார்கள். மனோதைரியம் மிக்க நீங்கள் வீர கணபதியை வணங்க வெற்றிகள் தேடி வரும். சித்தி விநாயகரை ஒன்பது வாரங்கள் வணங்க காரியங்கள் சித்தியாகும்.

 ரிஷபம்

ரிஷபம்

சுக்கிரனை ஆதிக்க நாதனாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களே... அம்பிகையின் அருளுக்கு பாத்திரமானவர்கள். சந்திரன் உச்சம் பெறுவது உங்க ராசியில்தான். சங்கடங்கள் தீர சதுர்த்தி நாளில் மஞ்சள் ஆடை அணிந்து சங்கரன் மைந்தனை வணங்கலாம் நன்மைகள் கிடைக்கும். உங்களுக்கு ராஜ ராஜேஸ்வரி யோகம் கிடைக்க வேண்டும் எனில் கல்வி செல்வம் கிடைக்க ஸ்ரீ வித்யா கணபதியை வணங்கலாம்.

மிதுனம்

மிதுனம்

புதனை ராசி நாதனாகக் கொண்ட உங்களுக்கு திறமையும் அதிர்ஷ்டமும் வந்து சேரும். மறைமுக எதிர்ப்புகள் போட்டிகளை சமாளிக்க நீங்க லட்சுமி கணபதியை வணங்குங்கள். சகல செல்வமும், லட்சுமி காடாட்சமும் வீடு தேடி வரும்.

கடகம்

கடகம்

சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே, பல கலைகளுக்கு சொந்தக்காரர் நீங்கள். உங்களுக்கு கற்பனைத்திறன் அதிகம் இருக்கும். நீங்கள் வணங்க வேண்டிய கணபதி ஹேராம்ப கணபதி. இந்த கணபதியை வணங்க கவலைகள் பறந்தோடும் சந்தோஷம் அதிகரிக்கும்.

சிம்மம்

சிம்மம்

சூரியனை ராசி நாதனாகக் கொண்ட நீங்கள் தலைமைப்பண்புடையவர். உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகம் இருக்கும். ஸ்ரீவிஜய கணபதியை வணங்க உங்களுக்கு வெற்றி அதிகம் கிடைக்கும். ஒன்பது ஞாயிறுக்கிழமை சூரிய ஓரையில் விநாயகர் ஆலயம் சென்று சிதறுகாய் போட்டு விநாயகரை வழிபடலாம்.

கன்னி

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் புதனை ஆட்சி நாதனாகக் கொண்டவர்கள். காரியங்களில் வெற்றியும் புத்திசாலித்தனமும் கொண்ட நீங்கள் மோகன கணபதியை வணங்கலாம். வளர்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் கணபதியை வணங்க கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பாதிப்புகள் நீங்கி நன்மைகள் அதிகரிக்கும்.

 துலாம்

துலாம்

சுக்கிரனை ஆட்சி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, நீங்கள் லட்சியவாதிகள். வாழ்க்கையில் வெற்றிகள் மேன்மேலும் கிடைக்க திங்கட்கிழமைகளில் கணபதியை வணங்க சகல ஐஸ்வர்யமும் கிடைக்கும். உங்களுடைய லட்சியத்தில் வெற்றி பெற பஞ்சமுக விநாயகரை வீட்டில் வைத்து வணங்கலாம்.

விருச்சிகம்

விருச்சிகம்

செவ்வாயை ஆட்சி நாதனாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்கள் உற்சாகமானவர்கள். நினைத்ததை சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் நீங்கள் சக்தி கணபதியை வணங்க எண்ணற்ற சக்திகள் செல்வங்கள் தேடிவரும்.

தனுசு

தனுசு

குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட நீங்கள் நேர்மையானவர்கள். உங்களின் வெற்றி நிரந்தரமாக நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் சங்கடஹர கணபதியை வணங்க வேண்டும். ஏழரை சனியில் பாதிப்பில் இருந்து விடுபட தினசரியும் விநாயகரை வழிபடலாம் பாதிப்புகள் குறையும்.

மகரம்

மகரம்

சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட நீங்கள் உங்கள் ஆசையும் எண்ணமும் நிறைவேற யோக கணபதியை வணங்க வேண்டும். யோக கணபதியை வணங்க வெற்றிகள் தேடி வரும். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை நேரில் சென்று வணங்க நன்மைகள் நடைபெறும்.

கும்பம்

கும்பம்

சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட நீங்க புதிய புதிய விசயங்களை கற்றுக்கொள்வீர்கள். அருகம்புல்லால் விநாயகரை அர்ச்சனை செய்து வர நன்மைகள் நடைபெறும். சித்தி கணபதியை வழிபட சந்தோஷங்கள் அதிகரிக்கும். காரிய சித்தி உண்டாகும்.

மீனம்

மீனம்

குருபகவானை ராசி நாதனாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே, நீங்கள் வணங்க வேண்டிய கணபதி பால கணபதி. அரசமரத்தடி விநாயகரை சதுர்த்தி நாளில் வணங்க சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் சங்கடங்கள் தீரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+