Rasi Palan This Week: விருச்சிக ராசிக்கு அஷ்டமத்தில் குரு.. கோபத்தால் வரப்போகும் பெரும் ஆபத்து
வார ராசி பலன்: டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 29 முதல் மார்கழி 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம். தற்போது கார்த்திகை மாதம் முடிந்து இந்த மாதம் மார்கழி பிறக்கப் போகிறது. மார்கழி மாதம் பீடை மாதம் என்பார்கள். ஆனால், அப்படியல்ல மிகவும் உத்தமமான மாதமாகும்.
மார்கழி மாதத்தில் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் அகல்விளக்கு ஏற்றி வருவது உங்களுக்கு அற்புதமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 29 முதல் மார்கழி 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு எல்லா விஷயத்திலும் யோகமும், அனுகூலமும் ஏற்படும். வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வீண் வார்த்தைகள் பேசுவதை தவிர்ப்பது நல்லது. ரத்த பந்த உறவுகளில் மேன்மை ஏற்படும். சுபகாரிய அமைப்புகள் நடக்கும். தடைபட்டு வந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும் அற்புதமான காலகட்டம்.
அனுகூலம்
முன்னோக்கி செல்லும் காலகட்டம். இழுபறியாக இருந்த விஷயங்கள் பரிபூரணமாக நீங்கும். யோக பலத்தை அதிகமாகப் பெறும் அற்புதமான காலகட்டமாக இருக்கும். ஆற்றலும், அனுகூலமும் ஏற்படக்கூடிய அமைப்பு உள்ளது. மனதில் உள்ள பாரங்கள் குறையும். எல்லாவற்றையும் சமாளிக்கலாம் என்கிற நல்ல காலகட்டமாக இருக்கும்.
கோபத்தை தவிர்ப்பது நல்லது
இந்த வாரம் அருமையான நேரமாக இருக்கும். எந்த விஷயமாக இருந்தாலும் தேவையில்லாமல் சண்டை போடுவது, கோபப்படும் சூழல் ஏற்படும். இருக்கிற இடத்தை காலி செய்வது உங்களுக்கு யோகத்தை தரும். சந்திரன் நீச்சமாக இருப்பதால் தாய் மூலமாக, பெண் மூலமாக பிரச்சனைகள் ஏற்படும். ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது.
அஷ்டமத்தில் குரு
அஷ்டமத்தில் குரு இருப்பதால் பெயர் கெடும் வாய்ப்புள்ளது. வங்கிக்காரர்கள் பணம் வசூலிப்பதற்காக வீட்டிற்கே வரும் நிலை ஏற்படும். புதன்கிழமை முதல் வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி வரை விரதம் இருப்பது நன்மை பயக்கும். யானையிடம் இருந்து ஆசிர்வாதம் வாங்குவது உங்களுக்கு மேன்மையைக் கொடுக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்தினால் அற்புதமான யோகம் ஏற்படும்.
பணவரவு
விரயத்தில் புதன் இருப்பதால் நிறைய விஷயங்களில் நன்மை ஏற்படும். காது, மூக்கு, தொண்டை, ஒற்றை தலைவலி தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. ராகவேந்திரர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். அனந்தபத்மநாபன், குருவாயூர் கிருஷ்ணரை வழிபாடு செய்வது உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுத்தும். பொருளாதாரம் ரீதியாக நிறைய நன்மைகள் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications