Rasi Palan This Week: விருச்சிகத்துக்கு நல்ல நேரம் ஆரம்பம்.. ஜாவா சுந்தரேஷனாக மாறப் போறீங்க
வார ராசி பலன்: ஆகஸ்ட் 25 முதல் 31 ஆம் தேதி வரையிலான ஆவணி 9 முதல் ஆவணி 15 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இந்த மாதத்தில் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும். வீடு வாங்குவோருக்கு
அந்த வகையில், ஆகஸ்ட் 25 முதல் 31 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த அனைத்து நல்ல விஷயங்களும் நடக்கும் காலகட்டமாக இருக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்லவை நடக்கும் நேரம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வில் இருந்த தடைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சிகள் செய்யாமல் இருப்பது நல்லது.
தடைகள் நீங்கும்
தாய் வழி, தந்தை வழி உறவில் இருந்து வந்த பாதிப்புகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடக்கும். திட்டமிட்டு எடுக்கக் கூடிய முடிவுகள் அனைத்திலும் வெற்றி பெறும் யோகம் உள்ளது. இதுவரை சில விஷயங்கள் நடைபெறாமல் தடை ஏற்பட்டுக் கொண்டே இருந்திருக்கும். இனி அந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.
மாற்றங்களால் அனுகூலம்
தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். யோக பலம் அதிகளவில் கிடைக்கும். தொடர்ச்சியாக இருந்து வந்த மனத் தாங்கல்கள் நீங்கும். புதிய அறிமுகத்தில் பிரச்சனைகள் எதுவும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உத்தியோக மாற்றம், தொழில் மாற்றம், வியாபார மாற்றம், அரசாங்கத் துறையில் அனுகூலங்கள், பெரிய பெரிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
முன்னேற்றம்
நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் தீரும். வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக வெற்றிகள் பெறுவீர்கள். பாகப் பிரிவினைகள் சரியாகிக் கொள்ளும். எல்லா விஷயங்களும் உங்களுக்கு நடைபெறக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும்.
ஆரோக்கியம், வழிபாடு
ஆரோக்கியத்தில் முதுகுதண்டுவடப் பிரச்சனைகள், கழிவுப் பாதையில் வரும் சிறு சிறு பிரச்சனைகள் வரும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். நரசிம்மர் வழிபாடு சகல விதமான பிரச்சனைகளில் இருந்தும் உங்களுக்கு மன பயங்களையும் நீக்கும்.












Click it and Unblock the Notifications