Rasi Palan This Week: விருச்சிக ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் யோகம்.. எதில் கவனம் தேவை?
Viruchigam Rasi Palan: பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரையிலான, மாசி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் [Viruchigam Rasi Palan].
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

கும்ப மாதம் என்று அழைக்கப்படும் இந்த அற்புதமான மாசி மாதத்தில் பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரையிலான, மாசி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
விருச்சிகம் ராசி பலன் (Viruchigam Rasi Palan)
விருச்சிகம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய அற்புதமான காலகட்டம். தோல் அலர்ஜி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பண வரவில் சந்தோஷமும், அனுகூலமும் ஏற்றமும் ஏற்படும். புதிய முயற்சியில் இருந்த சிக்கல்கள் பரிபூரணமாகத் தீரக்கூடிய காலகட்டம்.
ஏற்றம், நம்பிக்கை
தொடர்ச்சியாக இருந்து வந்த மன தாங்கல்கள் பரிபூரணமாக நீங்கும். ரத்த பந்த உறவுகளில் இருந்த சிக்கல்கள் மாறும். பெற்றோர், பெரியோரின் நீண்டநாள் கனவுகள் மாறக்கூடிய அமைப்பு ஏற்படும். உத்தியோகத்தில், தொழிலில், வியாபாரத்தில், படிப்பில் இருந்த தடைகள் விநாயகர் வழிபாட்டால் விலகும். புதிய உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் அடுத்தடுத்து ஏற்றங்களும், நம்பிக்கையும், அனுகூலமும் ஏற்படும்.
அனுகூலம்
இழுபறியாக இருந்த நிலைமைகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். தொடர்ந்து இருந்து வந்த சங்கடங்கள் நீங்கும். தனிப்பட்ட முறையில் உங்கள் செல்வாக்கு கூடும். உத்தியோகம் ரீதியாக தனிப்பட்ட எல்லா விஷயமும் நன்மையை ஏற்படுத்தும். அம்மாவினால் பிரச்சனை ஏற்பாடும். அம்மாவின் ஆரோக்கியத்தில் கடும் பின்னடைவு, ரத்த அழுத்தம், சர்க்கரை தொடர்பான பிரச்சனைகள், கேன்சர், கட்டி போன்றவை தென்படும் சூழல் ஏற்படும்.
பிரச்சனைகள்
பிப்ரவரி 24, 25 ஆம் தேதி தேவையில்லாத பிரச்சனைகள் மற்றவர்களால், நண்பர்களால், மனைவியால், கூட்டாளிகள் வரும் வாய்ப்புள்ளது. அஷ்டமத்தில் குரு இருப்பதால் தேவையில்லாத கோர்ட், கேஸ், வம்பு, வழக்குகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும். இந்த மாதம் முழுவதும் வீட்டில் ரணகளமாக இருக்கக்கூடிய சூழல் ஏற்படும்.
வழிபாடு
பணம், பொருளாதாரத்திற்குப் பிரச்சனை இருக்காது. பிள்ளைகளை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, முதல் குழந்தையை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். சந்தோஷம் 70 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 90 சதவீதமும் நன்றாக இருக்கும். ஆதிசேசன் வழிபாடு,
துர்க்கை வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications