Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Viruchigam: விருச்சிகம் ராசிக்கு முயற்சிகளில் வெற்றி.. டாப் கியரில் பறக்கப் போறீங்க

Subscribe to Oneindia Tamil

Viruchigam Rasi Palan: மார்ச் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, பங்குனி 2 ஆம் தேதி முதல் பங்குனி 8 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

viruchigam-rasi-palan-what-kind-of-benefits-will-get-viruchigam-rasi-people-from-march-16-to-22

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். இந்த வாரத்தில் பங்குனி மாதம் பிறக்கவுள்ளது. பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.

அந்த வகையில், மார்ச் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, பங்குனி 2 ஆம் தேதி முதல் பங்குனி 8 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

விருச்சிகம் ராசி பலன் (Viruchigam Rasi Palan)

விருச்சிகம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு பெரிய நன்மைகள் ஏற்படும் நல்ல காலகட்டம். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. பண வரவு நன்றாக இருக்கும். நிறைய செலவுகளும் ஏற்படும். எதிர்பார்க்காத நன்மைகள் நடக்கும். குடும்பத்தில் தாய் வழி உறவு, தந்தை வழி உறவு மேன்மை அடையும்.

சிக்கல் தீரும்

எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் நடக்கும். உறவு முறையில் இருந்த சிக்கல்கள் தீரும். புதிய முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். மனதில் ஏதோ ஒரு இறுக்கம் இருந்து கொண்டே இருக்கும். பங்குனி மாதம் முழுவதும் அதுபோன்ற மன நிலை இருக்கும். இரவு 7 மணிக்குள் உணவை முடித்துக் கொள்வது நன்மை பயக்கும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். நீர் குறைவதால் கால் பிரச்சனை, கை பிரச்சனை வருவதற்கான வாய்ப்புள்ளது.

ஆரோக்கியம்

ரத்தத்தில் பரவும் தொற்றுநோய், சளி, டைபாய்டு, காய்ச்சல், மலேரியா போன்ற பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்கி வேண்டும். பிள்ளைகளை திட்டிக் கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. மனக் குழப்பம் ஏற்படுத்திக் கொள்ளாமல் இருப்பது நல்லது. வெளியிடம், தொழில், வேலை, வியாபாரம், படிப்பு நன்றாக இருக்கும்.

பணவரவு

பண வரவு அற்புதமாக இருக்கும். நல்ல முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். தொட்டது துலங்கும் காலகட்டம். இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் படிப்படியாக மாறும். இதுவரை இருந்த தடைகள், தாமதங்கள் பனிபோல விலகும்.

வழிபாடு

ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. நிறைய செலவுகள் ஏற்பட்டாலும் அதற்கான பண வரவு இருந்து கொண்டே இருக்கும். அபிராமி அந்தாதியில் இருக்கும் 40, 59, 75 ஆவது பாடல்களை அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு படிப்பது நன்மை பயக்கும். நவக்கிரகத்தில் இருக்கும் செவ்வாய் வழிபாடு அனுகூலத்தைத் தரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+