மேஷம், ரிஷபம் ராசிகளுக்கு பிரச்சனைகள் ஓவர்.. வேலையில் கிடைக்க போகும் செம மாற்றம்
வார ராசி பலன்: பங்குனி மாதத்தில் ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை மேஷம், ரிஷப ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும், எந்த தெய்வங்களை வழிபட வேண்டும், பரிகாரங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இயக்கத்தை மாற்றுவதும், ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவதும் வழக்கம். அதன்படி கடந்த மார்ச் 29 ஆம் தேதி ஜோதிடத்தின் முக்கிய நிகழ்வான சனிப்பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. அடுத்தடுத்து ராகு கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த வாரத்துக்கு பிறகு தமிழ் புத்தாண்டு பிறக்கவுள்ளது. இது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த வாரத்துடன் தமிழ் மாதமான பங்குனி மாதம் நிறைவடைந்து சித்திரை மாதம் பிறக்கவுள்ளது. இது அனைவருக்கும் நல்ல மாற்றத்தை கொடுக்கும். இந்நிலையில் 07.04.2025 - 13.04.2025 மேஷம், ரிஷபம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் மற்றும் வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாகவும், தெளிவாகவும் பார்க்கலாம்.
மேஷம் - உத்யோகம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். முதலீட்டில் லாபம் கிடைக்கும். நண்பர்கள், உறவுகளிடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கும். இறங்கிய காரியங்களில் எல்லாம் வெற்றிகள் குவியும். பயணங்களால் ஆதாயம் உண்டு. சமூகத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை உயரும். புதிய முயற்சி அணுகூலமாகும். தாய் தந்தை உறவால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் நல்ல உயர்வு காணப்படும்.
குழந்தைகளின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். அவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். வண்டி, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக இருந்த பிரச்னைகள் விலகும். மனக்கவலைகள் நீங்கி மனதில் நிம்மதி பிறக்கும். மனதில் இருந்த பதற்றம் குறையும். உங்களின் செல்வாக்கு உயரும்.
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இருப்பவர்கள் உரிய பரிசோதனை மேற்கொள்வது அவசியம். ஒவ்வாமை பிரச்னை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. வியாழக்கிழமை மதியம் குறைந்தது ஒருவருக்காவது உணவு தானம் செய்வது நல்ல பலன்களை கொடுக்கும். நவ கிரகத்தில் புதன் பகவான் வழிபாடு நல்ல மாற்றத்தை கொடுக்கும்.
ரிஷபம் - அருமையான பலன்களை தரும் வாரமாக இருக்கும். உத்யோகத்தில் புதிய பொறுப்புகள் வரும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. உத்யோகம் மற்றும் தொழிலில் எதிர்பார்த்த நல்ல மாற்றங்கள் நிகழும். கல்வியிலும் திட்டமிட்ட காரியங்கள் நல்லபடியாக நிறைவேறும். எதிர்பாராத இடத்தில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். தாய் மற்றும் தந்தை வழி உறவால் அணுகூலம் கிடைக்கும்.
நீண்ட கால தடைகள் தவிடு பொடியாகும். நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் பிரச்னைகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். சமூகத்தில் பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்ல ஆதாயம் உண்டு. முதலீடு சார்ந்த விஷயங்களில் நல்ல லாபம் கிடைக்கும். சுப காரியங்கள் நிறைவேறும். வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய மற்றும் ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள்.
மனதில் பட்டதை எந்த குழப்பமும் இல்லாமல் செய்யுங்கள். வார்த்தைகளில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. காது, மூக்கு, தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்புள்ளது. சளி, சைனஸ் பிரச்னைகள் இருப்போர் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குழந்தைகளின் ஆரோக்கியத்திலும் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது. மகான்கள் சம்பந்தப்பட்ட வழிபாடு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications