"தடை அதை உடை" கடகத்துக்கு நல்ல நேரம் ஸ்டார்ட்.. விலையுயர்ந்த பொருட்களில் மிகுந்த கவனமாக இருங்க
வார ராசி பலன்: சூரியன் மிதுனத்துக்கு வரும் மாதமே ஆனி மாதம். இந்த வாரம் ஜூன் 30 முதல் ஜூலை 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
நவக்கிரகங்களில் உள்ள ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கடகம் வார ராசி பலன்
கடக ராசிக்காரர்களுக்கு எடுத்த அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். லாபம், பண வரவு உண்டாகும். கடன்களைத் தீர்க்கும் எண்ணங்கள், முயற்சிகள் வெற்றி பெறும். ஆரோக்கியத்தில் கால், முதுகு தொடர்பான விசயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
தடைகள் நீங்கும்
பிறரிடம் பேசும்போது கோபத்தை தவிர்ப்பது நல்லது. அலர்ஜி, ஜாயிண்ட் பெயின் வருவதற்கான வாய்ப்புள்ளது. நகை, பணம், ஆவணங்கள் போன்ற விலை உயர்ந்த பொருள்களை கையாளும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கோபத்தில் கையாளுவதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. நீங்கள் செய்யும் காரியங்களில் தோன்றும் அனைத்து தடைகளும் படிப்படியாக குறையும். ஆடி மாதம் வரை பொறுமையாக செயல்படுவது நல்லது. வாகனங்கள் மாற்றம் அனுகூலத்தை தரும்.
அனுகூலம்
உத்தியோகத்தில் முன்னேற்றம் வளர்ச்சி உண்டாகும் காலகட்டமாக இருக்கும். இருந்தாலும் உங்களுக்கென்று இருந்த விஷயங்கள் சிலவை கிடைக்காமல் போவதற்கான வாய்ப்புள்ளது. புதிய தெம்பு, அனுகூலம் கிடைக்கும். பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும் தன்மை உண்டாகும். படைப்பாளிகள், கலைத் துறையினர், மீடியா துறையினர் உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது.
கவனம்
பணப் பட்டுவாடாவில் மிகுந்த எச்சரிக்கை தேவை. ஜிஎஸ்டி, வருமான வரி போன்றவற்றில் விழிப்புணர்வுடன் இருந்தால் பிரச்சனைகள் பெரிதாகாமல் இருக்கும். கோளார் பதிகத்தை சொல்லி வருவது தடைகளை நிவர்த்தி செய்யும். தெய்வ கடாட்சம் உண்டாகும் காலகட்டமாக இருக்கும். கடக ராசியினருக்கு ராகவேந்திரர் வழிபாடு மேன்மையை உண்டாக்கும்.
பேச்சில் கவனம்
நகை, ஆவணங்கள், பணம், விலையுயர்ந்த பொருட்கள் விஷயத்தில் கவனம் தேவை. கோபத்தை தவிர்த்து பிறரிடம் பேசும்போது இனிமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவது நல்லது. மற்றபடி நல்லவை நடக்கும் காலகட்டமாக இந்த வாரம் உங்களுக்கு அமையும். பொருளாதாரத்திலும் நல்ல ஏற்றம் உண்டாகும் காலகட்டமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications