கும்ப ராசிக்கு பணத்தை அள்ளிக் கொடுக்கும் குரு.. வீடு, நிலம், தொழில் எல்லாமே சூப்பர்.. கவனமும் தேவை
வார ராசி பலன்: ஆனி மாதம் 9 முதல் 15 ஆம் தேதி வரையிலான அதாவது ஜூன் 23 முதல் 29 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டில் சனி, குரு, ராகு கேது ஆகிய முக்கியமான கிரகப் பெயர்ச்சிகள் நடைபெற்றுள்ளன. ஜூன் 28 ஆம் தேதி சுக்கிரப் பெயர்ச்சியும் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

கிரகப் பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் ஜூன் 23 முதல் 29 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கும்ப ராசி பலன்
கும்ப ராசிக்காரர்கள் அதிக அளவிலான யோக பலன்களை அனுபவிக்கும் காலகட்டமாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே சண்டை, பிரச்சனைகளைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. அனுமன் சாலிஷா கேட்பது, அனுமனை வழிபாடு செய்வது அனைத்து விதமான நன்மையைும், நற்பலன்களையும் கொடுக்கும். அபிராமி அந்தாதியில் இருக்கும் 49, 50, 75 ஆவது பாடலை படித்து வருவது நிம்மதியை ஏற்படுத்தும்.
தொழிலில் முன்னேற்றம்
உத்தியோகம், வியாபாரம், படிப்பு, தொழிலில் முன்னேற்றமும், வளர்ச்சியும் உண்டாகும். ஆனி மாதமாக இருந்தாலும் நிச்சயமாக சுப காரியங்கள் நடக்கும். குடும்பத்தில் அடுத்தடுத்து நல்ல செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். திடீர் பண வரவு உண்டாகும். எதிர்பார்க்காத விஷயங்கள் அனைத்தும் கைகொடுக்கும் நேரமாக இருக்கும்.
ஆரோக்கியம்
இழுபறியாக இருந்த அனைத்து விஷயங்களும் இனி நடக்கத் தொடங்கும். நிலம், வீடு, மண், விவசாயம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல வளர்ச்சியும், அனுகூலமும் ஏற்படும். முதுகு, அடிவயிறு, கழிவுப் பாதை, வயிறு உறுப்புகள் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். தினந்தோறும் உடற்பயிற்சி கட்டாயமாக செய்வது நல்லது.
அனுகூலம்
படைப்பாளிகள், கலைத் துறையினர், மீடியா துறையினர் பெரும் புகழ் பெறுவார்கள். உங்கள் வாழ்க்கையில் அடுத்தடுத்து முன்னேற்றங்கள் ஏற்படும் காலகட்டமாக இருக்கும். குரு ஐந்தாம் இடத்தில் இருப்பதால் அனுகூலமான காலகட்டமாக இருக்கும். பொருளாதார விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். வீட்டில் தேவையில்லாத வாக்குவாதம், பிரச்சனைகளைத் தவிர்ப்பது நல்லது.
மாற்றங்கள்
கணவன், மனைவிக்கிடையே வெள்ளை கொடி காட்டிச் செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வீடு, நிலம் தொடர்பான விஷயங்களில் அடுத்தடுத்து மாற்றங்களும், முன்னேற்றங்களும் ஏற்படும். எடுத்த காரியங்களில் இருந்து வந்த தடைகள் எல்லாம் படிப்படியாக விலகக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications