மேஷம், ரிஷப ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை கொட்டும் தேவதை.. இந்த விஷயத்தில் கவனம்
வார ராசி பலன்: சித்திரை 22 முதல் 28 வரையிலான மே 5 முதல் 11 ஆம் தேதி வரை மேஷம் மற்றும் ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்திற்கான பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் மேஷம் மற்றும் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு பெருமாள் வழிபாடுகள் தடைகளை தவிடு பொடியாக்கும். மேலதிகாரிகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பயணங்கள் அனுகூலத்தை ஏற்படுத்தி தரும். தொலைதூர பயணங்கள், சுற்றுலா பயணங்கள், குடும்பத்தாருடன் பயணம் செய்வது அனுகூலத்தை தரும். எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு, பொறுமையாக செல்லும் அமைப்பு பெரிய வெற்றிகளைத் தரும்.
சுறுசுறுப்புடன் இருப்பது நல்லது. தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது நல்லது. எடுத்த காரியத்தில் வெற்றி, அனுகூலம் உண்டாகும். சளி, அலர்ஜி தொந்தரவு ஏற்படுத்தும், குடும்பத்தில், துணைவியாரிடம், பிள்ளைகளிடம் கோபதாபத்தை தவிர்ப்பது நல்லது. நண்பர்கள் தான் முக்கியம் என்று பிள்ளைகள் பேசினால் அவர்களிடம் கடும் சொற்களைப் பயன்படுத்தாமல், பாசமாக இருப்பது நல்லது.
தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். குடும்பத்துடன் நேரத்தை ஒதுக்குவது நல்லது. பெண்டிங் வேலைகளை செய்து முடிப்பது நல்லது. அதன் மூலம் நிறைய விஷயங்களை சாதிப்பீர்கள். இறுக்கமான மன நிலை மாறும். வேலைகளை பகிர்ந்து கொள்வது நல்லது. வேலை வேலை என்று தலைமேல் ஏற்றிக் கொள்ளாமல் சந்தோஷமாக இருப்பது நல்லது. உடம்புக்கு ஓய்வு கொடுப்பது நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் தனிப்பட்ட முறையில் அனைத்து விஷயங்களும் நல்ல பலன்களைக் கொடுக்கும். துர்கை வழிபாடு அனுகூலத்தை தரும். வெளியிடம், உத்தியோகம், தொழில், வியாபாரம் சாதகமாக இருக்கும். பண வரவு உண்டாகும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். பிள்ளைகளால் சிறு சிறு சந்தோஷ செலவுகள் உண்டாகும்.
வாக்கு கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. தனிப்பட்ட முறையில் ஏற்றம், சந்தோஷம், எதிர்பார்க்காத நன்மைகள் நடக்கும். ரத்தத்தில் பரவும் தொற்று நோய் உபத்திரவத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. வாகனத்தில் சந்தோஷம் உண்டாகும். விடுபட்ட குலதெய்வ வழிபாடுகளை செய்வீர்கள்.
சமூகத்தில் பெரிய மனிதர்களை சந்திப்பது ஆனந்தத்தை கொடுக்கும். யோகமும், அனுகூலமும் ஒன்றன்பின் ஒன்றாக வரும். வயிற்றில், கழிவுப் பாதையில் சுக்கிரனால் சிறு சிறு உபத்திரவம் ஏற்படும். கவனமாக கையாளுவது நல்லது. குடும்பத்தினருடன், நண்பர்களுடன் பயணங்கள் செய்வீர்கள். தியானத்துக்கு செல்வீர்கள். யோக பயிற்சியில் ஈடுபடுவீர்கள். நன்மைகள் அதிகரிக்கக்கூடிய காலகட்டம். யோகம், நம்பிக்கை, சந்தோஷமும் மிகப்பெரிய பலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். புதிய வாகனங்களை உடனடியாக வாங்கிக் கொள்வது நல்லது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications