தனுசு ராசிக்கு கோடிகளில் புரளும் யோகம்.. குரு சனி ராகுவின் அருளால் எண்ணி 30 நாளில் நடக்கும் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

மாத பலன்: ஜூன் மாதம் நிறைவடைந்து ஜூலை மாதம் தொடங்கவுள்ளது. இந்த ஜூலை மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஒன்பது கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகப் பெயர்ச்சிகளானது ஒவ்வொரு ராசியிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த மாதத்தில் ரிஷப ராசியில் சுக்கிரனும், மிதுனத்தில் குருவும், சூரியனும் இணைந்திருக்கின்றனர். கடகத்தில் புதனும், சிம்மத்தில் கேதுவும், செவ்வாயும் உள்ளனர்.

what-kind-of-benefits-fortunes-will-get-dhanusu-sagittarius-rasi-people-during-this-july-month

கும்பத்தில் ராகு பகவானும், மீனத்தில் சனி பகவானும், மாதத் தொடக்கத்தில் சிம்ம ராசியில் சந்திர பகவானும் உள்ளனர். இந்த மாதத்தின் 17 ஆம் தேதி சூரியன் கடக ராசிக்கு வருகிறார். கடக ராசியில் இருக்கும் புதன் பகவான் மிதுன ராசிக்குச் செல்கிறார். 26 ஆம் தேதி சுக்கிர பகவான் மிதுன ராசிக்கும், 29 ஆம் தேதி சிம்மத்தில் இருக்கும் செவ்வாய் துலாம் ராசிக்குள் வருகிறார்.

அந்த வகையில், இந்த ஜூலை மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், தெய்வ வழிபாடுகள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசிக்காரர்களுக்கு 10 ஆம் இடத்தின் அதிபதியான புதன் பகவான் 8 ஆம் இடம் எனும் அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். வேலையில் வலி, வேதனையை சந்தித்து வந்திருப்பீர்கள். ஜூலை 16 ஆம் தேதியன்று சூரிய பகவான் 8 இல் அமர்வதால், 6க்கு உரியவர் ஆட்சி பலத்தோடு 6 இல் வலிமையாக இருப்பதால் வேலை இருந்தாலும் அதில் ஒரு அழுத்தத்தை சந்தித்து வந்திருப்பீர்கள். வேலைப் பளு, ஒத்துழைப்பு இல்லாமை, மேலதிகாரிகளால் தொல்லை போன்றவை இருக்கும். இருந்தாலும் கோபம், ஆக்ரோஷத்தை தவிர்ப்பது நல்லது.

திடீர் அதிர்ஷ்டம்

8 என்பது திடீர் அதிர்ஷ்டத்தையும் கொடுக்கக் கூடிய இடம் என்பதால் இடமாற்றம் உண்டாகும். கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு நிச்சயமாக உண்டு. ராசி அதிபதியாக இருக்கக்கூடிய குரு பகவான் ராசியைப் பார்த்து வலுப்படுத்துவதாலும், 4 ஆம் இடத்தில் இருக்கும் சனி பகவான் ராசியைப் பார்ப்பதாலும் பண வரவுக்கு குறை இருக்காது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

பண வரவு அதிகரிக்கும்

திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்து சேரும். பங்குச் சந்தை, லாட்டரியில் திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். பணம் ஏதாவதொரு ரூபத்தில் வந்து சேரும் நல்ல மாதமாக இருக்கும். புதன் 8 இல் இருப்பதால் புத்திசாலித்தனத்துடன் செயல்படுவீர்கள். மறைந்த புதன் நிறைந்த அறிவைத் தருவார். எந்த இடத்தில் எதைப் பேச வேண்டும் என்று புத்திசாலித்தனத்துடன் செயல்படுவார். முயற்சி ஸ்தானத்தில் ராகு பகவான் அமர்ந்திருப்பது நல்ல தன்மையாகும்.

முயற்சிகளில் வெற்றி

ராகுவின் மூலமாக அனுகூலம் கிடைக்கும். அந்நியர்கள், மாற்று மதத்தினரால் ஆதாயம் உண்டாகும். சிறு தூர பிரயாணம், தூர தேசப் பிராயணங்கள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். விற்பனை அற்புதமாக நடக்கும். ரியல் எஸ்டேட் சார்ந்த விஷயத்தில் இருக்கும் தனுசு ராசிக்காரர்கள் இந்த மாதம் கூடுதல் நன்மையைத் தரும் மாதமாக இருக்கும். எடுத்த முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். சுறுசுறுப்பு தெம்பு அதிகரிக்கும். ராசியாதிபதி பாக்கியாதிபதி இணைவு பெற்றிருப்பது பலத்தைக் கொடுக்கும்.

வீடு, வாகன யோகம்

ராசிநாதன் லாப ஸ்தானத்தை பார்ப்பதால் உங்களுடைய மதிப்பு, மரியாதை கூடும். நீங்கள் யாரென்று மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும் வாய்ப்பு ஏற்படும். சூரிய பகவான் ராசியைப் பார்ப்பதால் தன்னம்பிக்கை கூடும் நல்ல மாதமாக இருக்கும். வீடு, வண்டி, வாகனங்கள் வாங்குவதற்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். 4 ஆம் இடத்தில் தனாதிபதி சனி பகவான் அமர்ந்திருப்பதாலும், ஜூலை 13 ஆம் தேதி வக்கிரமடைவதாலும் மந்தமாக இருந்த விஷயங்கள் அனைத்தும் வேகமாக விரைவுபடுத்தக்கூடிய அமைப்பு ஏற்படும். வாங்க வேண்டும் என்று நினைக்கும் அனைத்தையும் வாங்கும் அமைப்பு உண்டாகும்.

ஆரோக்கியத்தில் கவனம்

வீடு புனரமைப்பது, புதுப்பிக்கும் வாய்ப்புகள் ஏற்படும். ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உணவுக் கட்டுப்பாட்டில் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சுக்கிரன் தன் வீட்டை தானே பார்ப்பதால் எதிரி தொல்லை அதிகரிக்கும். நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும். நரம்பு தொடர்பான பிரச்சனை ஏற்படுத்தும் புதன் 8 இல் மறைவதால் நரம்பு தொடர்பான பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. சூரியனும் வந்து 8 இல் அமர்கிறது. இதனால், கூடுதல் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது.

மாணவர்கள்

5க்கு உரியவரான செவ்வாய் 8 ம் இடத்தில் நீச்சமாக அமர்ந்திருந்தார். இப்போது 9 ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்துள்ளதால் பூர்வீகம், சகோதர சகோதரிகளுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளை நீக்குவதற்கான வாய்ப்பு ஏற்படும். குழந்தைகள் ஆசைப்பட்டது நிறைவேறும் காலகட்டமாக இருக்கும். படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். மந்தமான மாணவர்கள் சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள்.

வெளிநாடு யோகம்

கடவுளின் அனுக்கிரகம் நிச்சயமாக இருக்கும். கேது பகவான் 9 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். அனுகூலம், பாக்கியங்கள் கிடைக்கும். கோயில் திருப்பணிகளை செய்வதற்கான உகந்த காலகட்டமாக இருக்கும். ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் எண்ண ஓட்டம் அதிகரிக்கும். வெளிநாட்டுக்கு காரண கிரகமான ராகு 3 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். கடல் கடந்து பயணம் செய்வது, வெளிநாட்டு வேலைவாய்ப்பு சிறப்பு பெறும்.

யோகம்

11 ஆம் இடத்தை குரு பார்ப்பது மகிழ்ச்சி பெருகும். குடும்ப உறுப்பினர்களுக்காக முன்னின்று செயல்படுத்துவார்கள். எதையும் எடுத்துச் செய்யும் அதில் வெற்றி பெறும் யோகத்தை உண்டாக்கும் மாதமாக இந்த மாதம் உங்களுக்கு இருக்கும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்கலாம். புதன் 8 இல் மறைவதால் புதன்கிழமை தோறும் பெருமாள் வழிபாடு செய்வது அற்புதத்தை ஏற்படுத்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+