விருச்சிகத்துக்கு குரு சனியால் கொட்டும் அதிர்ஷ்டம்.. தொட்டதெல்லாம் கரன்ஸி, தங்கம்.. என்ஜாய் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சனி வக்ர பெயர்ச்சி பலன்: ஜூலை 13 ஆம் தேதி சனி வக்ர பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த சனி வக்ர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் யோக பலன்கள், அதிர்ஷ்டங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

சனி பகவான் தற்போது மீன மனையில் அமர்ந்திருக்கிறார். காலசக்கரத்தின் 12 ஆவது வீட்டில் சனி பகவான் ஜூலை 13 முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரை வக்ர நிலையை அடையவுள்ளார். வரும் 138 நாட்களுக்கு வக்ர நிலையில் இருந்து சனி பகவான் பலனைத் தரப் போகிறார். இதுவரை சனி பகவான் கெடுதல்களை கொடுத்துக் கொண்டிருந்தால் இனிமேல் நல்ல பலன்களை உங்களுக்கு கொடுப்பார்.

Sani vakra peyarchi palan Viruchigam lucky zodiac signs

ஜூலை 13 முதல் அக்டோபர் 3 ஆம் தேதி வரையிலான 83 நாட்கள் தனது சொந்த நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். அதேபோல, அக்டோபர் 4 முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரை குருவின் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் பயணிக்கிறார். அந்த வகையில், இந்த சனி வக்ர பெயர்ச்சியா் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

விருச்சிக ராசி பலன்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனி பகவான் முயற்சி ஸ்தானத்தின் அதிபதி, 4க்கு உரியவர் சுகத்தை கொடுக்கக் கூடியவர். தற்போது பஞ்சம ஸ்தானத்தில் அமர்ந்து வக்கிர நிலையில் பயணிக்கப் போகிறார். வக்கிரம் என்பது இதுவரை கெடுதலைக் கொடுத்துக் கொண்டிருந்த விஷயங்களில் இருந்து மாறி இனி நன்மைகளைக் கொடுக்கும் காலகட்டமாக இருக்கும்.

சுறுசுறுப்பு

தைரிய, வீரியத்தைக் கொடுக்கக் கூடியவர் சனி பகவான். சனி என்பது மந்தன். இப்போது வக்கிரமாக இருப்பதால் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். 3 ஆம் அதிபதியாக இருப்பதால் நீங்கள் முயற்சி செய்யும் விஷயங்கள் அனைத்தும் நடக்கும். கடந்த சில மாதங்களாக தேங்கியிருந்த விஷயங்கள் அனைத்தும் எடுத்து செயல்படுத்தி வெற்றியடையக் கூடிய காலகட்டமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.

லாபம் கொட்டும்

வியாபாரம், தொழிலில் இருந்து வந்த மந்த நிலை மாறும், சுறுசுறுப்படையும். புதிய திட்டங்களை வகுத்து வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். அதன் மூலம் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். கலைத் துறையில் இசை, எழுத்து, பாட்டு தொடர்பான விஷயங்களில் ஈடுபடுவோருக்கு அற்புதமான ஏற்றம், வளர்ச்சிமிக்க காலகட்டமாக இருக்கும். வீடு கட்டுவதில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். எந்த வேலைகளை எல்லாம் நிறுத்தி வைத்திருந்தீர்களோ அதை எல்லாம் அடுத்தடுத்து செய்வீர்கள்.

வீடு கட்டும் யோகம்

வீட்டை புனரமைப்பது, வீடு கட்டுவது, வீட்டை புதுப்பிப்பது, பாதியில் நின்ற வீட்டை கட்டி முடிக்கும் யோகம் உண்டாகும். பழைய வாகனங்களை விற்றுவிட்டு புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய வீடு, புதிய வாகனம், புதிய நிலம் வாங்க உகந்த காலகட்டமாக இருக்கும். தாய், உறவு சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த பகைகள் அனைத்தும் நீங்கும். உறவுகளை புதுப்பிக்கக் கூடிய காலகட்டமாக இருக்கும். சிறிய சிறிய கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒன்று சேருவீர்கள்.

பூர்வீகம்

5 ஆம் இடத்தில் சனி இருப்பதால் பூர்வீகப் பிரச்சனைகள் உண்டாகும். அதற்கு ஒரு தீர்வில்லாமல் போகும். இந்த வக்கிர காலத்தில் 138 நாட்களில் பூர்வீகம் சார்ந்த விஷயத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். ஆலய வழிபாடு, ஆலய திருப்பணிகளை எடுத்துச் செய்வீர்கள். 5 ஆம் இடம் என்பது பதவி. பதவியில் இருந்து வந்த தடைகள் நீங்கி, பதவி உயர்வு கிடைக்கும்.

திருமணம், குழந்தை பாக்கியம்

படிப்பில் மந்தமாக இருந்த மாணவர்கள் இனி சுறுசுறுப்பாகச் செயல்பாடுவார்கள். நீண்ட நாட்களாக காத்திருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குருவின் நட்சத்திரமான பூராட்டாதியில் சனி பயணிக்கும்போது கட்டாயம் குழந்தை பாக்கியம் உண்டாகும். திருமணத்தில் இருந்த தடைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கி திருமண பாக்கியம் கிடைக்கும். காதலில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். அதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

முன்னேற்றம்

11 ஆம் இடத்தை சனி பார்ப்பதால் சந்தோஷத்தை கொடுக்கக் கூடிய காலகட்டமாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் லாபம் ஏற்படும். தன வரவு உண்டாகும். 2 ஆம் இடத்தை சனி பார்ப்பதால் குடும்பப் பிரச்சனைகள் நிவர்த்தியாகும். தனத்தால் இருந்து வந்த பிரச்சனை நீங்கும். உங்கள் பேச்சை அனைவரும் கேட்கும் நிலை உருவாகும். நிறைய நல்ல செய்திகள் உங்களைத் தேடி வரும். புகழும், கீர்த்தியும் உண்டாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+