சனி பெயர்ச்சி பலன் 2023: கும்பத்தில் ஆட்சி பெற்ற சனி.. 2024ல் யாரெல்லாம் ஆபிசர் ஆகப்போறீங்க
சென்னை: சனி பகவான் தொழில் காரகன். உழைப்பின் அதிபதி. சனிபகவானின் அருள் இருந்தால் நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருந்த சிக்கல்கள் பிரச்சினைகள் நீங்கும். கும்பத்தில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் சனிபகவானால் 2024ஆம் ஆண்டில் புது வேலை யாருக்கு கிடைக்கும். யாருடைய வேலையில் மாற்றம் ஏற்படும். புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
மேஷம்: உங்களுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. லாப சனி தொழில் வியாபாரத்தில் நிறைய லாபத்தை தரப்போகிறார். வேலையில் புரமோசனை தரப்போகிறார். வெளிநாடு வேலை, கல்வி வாய்ப்பினை தரப்போகிறார் சனி பகவான். ஏழைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுங்கள் 2024ஆம் ஆண்டில் புரமோசன் கிடைத்து ஆபிசர் ஆகும் யோகம் தேடி வரப்போகிறது.

ரிஷபம் : உங்கள் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் வியாபார ஸ்தானத்தில் சனி பகவான் பயணம் செய்வதால் உங்களுக்கு வேலையில் புரமோசன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். 2024 ஆம் ஆண்டில் அலுவலகத்தில் மதிப்பு மரியாதை கூடும். சனி அருளால் பதவிகளும் பட்டங்களும் தேடி வரப்போகிறது.
மிதுனம்: பாக்ய சனியால் வேலை இழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் பிரச்சினையை சந்தித்து வந்தவர்களுக்கு இனி எல்லாம் ஜெயமாகப்போகிறது. உழைப்பு உயர்வை தரப்போகிறது. வேலையில் இடமாற்றம் கிடைக்கும்.. உயரதிகாரிகளின் ஆதரவுடன் நல்ல புரமோசன் கிடைக்கும். சுப செலவுகள் அதிகரிக்கும். 2024ஆம் ஆண்டில் கை நிறைய சம்பளம் கிடைக்கப்போகிறது.
சிம்மம்: களத்திர ஸ்தானத்தில் சனி பகவான் பயணம் செய்கிறார். நேரடியாக சனிபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. நல்ல வேலை கிடைக்கும். வேலையில் புரமோசன் கிடைக்கும். பண வருமானம் அதிகரிக்கும். அரசு தேர்வு எழுதியவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். 2024ஆம் ஆண்டில் ஆபிசர் ஆகும் யோகம் தேடி வரப்போகிறது.
கன்னி: ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சனி பகவான் பயணம் செய்கிறார். இனி தொட்டதெல்லாம் பொன்னாகும். நல்ல வேலை கிடைக்கும் உங்களின் வருமானம் இரட்டிப்பாகும். சொந்த தொழில் செய்பவர்கள் தொழிலை விரிவுபடுத்தலாம். 2024ஆம் ஆண்டில் அள்ளித்தரப்போகிறார் சனிபகவான்.
தனுசு: 2024ஆம் ஆண்டில் தனுசு ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் தேடி வரப்போகிறது. மகிழ்ச்சியும் மன நிம்மதியும் அதிகரிக்கும். உங்களுடைய காட்டில் இனி பண மழை பொழியப்போகிறது. வேலையை இழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபட அற்புதங்கள் நடைபெறும். நல்ல வேலை வீடு தேடி வரும். 2024ல் பிரமோசன் உங்களுக்கு நிச்சயம்.












Click it and Unblock the Notifications