ஜாவா சுந்தரேஷனாக மாறும் கும்ப ராசி.. தொட்டதெல்லாம் பணம், பொன்.. பேச்சில் மட்டும் கவனம் கவனம்

Subscribe to Oneindia Tamil

தமிழ் புத்தாண்டு: தமிழ் புத்தாண்டு தொடங்கியுள்ளது. கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு கிடைக்கப் போகும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

2025 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் மாற்றங்கள் நடைபெறவுள்ளன. உலக மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த சனிப்பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. ராகு கேது பெயர்ச்சி மற்றும் குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இதற்கிடையே ஏப்ரல் 14 ஆம் தேதி விசுவாவசு தமிழ்ப் புத்தாண்டு பிறந்துள்ளது. இந்தப் புத்தாண்டில் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து பார்க்கலாம்.

Tamil puthandu palan kumbam

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு ஜாவா சுந்தரேஷன் போல அபாரமான வளர்ச்சியைக் கொடுக்கும் காலகட்டமாக இருக்கும். யாரால் மேல் வந்தார்களோ அவர்களையே தள்ளிவிட்டு விட்டு மேலே வரக்கூடிய காலகட்டம் இது. நிறைய பேருக்கு வேறு மொழி, வேறு மதத்தினருடன் திருமணமாகக் கூடிய யோகம் உண்டாகும். அந்நிய மொழி பேசக்கூடிய நபர்கள் மூலமாக வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

குரு பார்வை

குருவின் பார்வை பலத்தால் மே 20 ஆம் தேதிக்குப் பிறகு கண்டிப்பாக வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். வெளியூர் செல்லும் வாய்ப்பு உண்டாகும். மிகப்பெரிய தொகை உங்களிடம் வந்து சேரும். மே 20 ஆம் தேதிக்குப் பிறகு அருமையான வெற்றி உண்டாகும். கடந்த இரண்டரை ஆண்டுகளாக இருந்த நிலைமை எல்லாம் மாறி. அமோகமான மாற்றம் உண்டாகும்.

பேச்சில் கவனம்

சனி 2 ஆம் இடத்தில் கிளம்பியுள்ள நிலையில் ராகு வந்து அமர்ந்துள்ளார். ராகுவுக்கு குரு பார்வை உண்டாவதால் டாப் கிளாஸான யோகம் உண்டாகும். 2 ஆம் இடத்தில் சனி அமருவதால் பேச்சில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சனி, புதன், ராகு, சுக்கிரன் இணைவதால் 2 மாதங்களுக்கு பேசுவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உங்களுடைய பணம், நகைகள் திருட்டுப் போவதற்கான வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் பேச்சினால் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

பெரிதினும் பெரிது

2 மாதத்துக்குப் பிறகு அருமையான காலகட்டமாக இருக்கும். ராகு ராசிக்கு வருவதால் தான் செய்வது தான் சரி என்ற எண்ணம் தோன்றும். நாம் செய்யும் விஷயங்களை பெரிதாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். மற்றவர்களுக்கு கீழ் வேலை செய்யக் கூடாது என்ற எண்ணம் தோன்றும். குரு பார்வை இருப்பதால் ஆண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புள்ளது. குழந்தைகளுக்கு மருந்து, மாத்திரைகளை சரியாக கொடுக்கவில்லை என்றால் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

தெய்வ அனுக்கிரகம்

பாக்கிய ஸ்தானத்துக்கு குரு பார்வை இருப்பதால் அதிர்ஷ்டமான காலகட்டமாக இருக்கும். தெய்வ அனுக்கிரகம் உண்டாகும். தாய், தந்தையின் உறுதுணை, ஆசி கிடைக்கும். திவ்யமான காலகட்டமாக இருக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். எந்த விஷயத்தில் கை வைத்தாலும் பணமாக மாறும். தொட்டதெல்லாம் துலங்கும். வாழ்க்கையில் ஒவ்வொரு மாற்றமும் அதிர்ஷ்டம் நிறைந்ததாக மாறும்.

பூர்ண கும்ப மரியாதை கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளில் மாலை மரியாதை கிடைக்கும். சான்றிதழ்கள், முனைவர் பட்டம் கிடைக்கும். கலைஞர்களுக்கு அபாரமான சிறந்த காலகட்டமாக இருக்கும். பேச்சை மட்டும் குறைத்துக் கொள்வது நல்லது. பேச்சினால் பணத்தை இழக்கும் நிலை ஏற்படும்.

மதிப்பெண், வழிபாடு

கும்ப ராசிக்காரர்களுக்கு சந்தோஷத்தின் அடிப்படையில் 80 சதவீதமும், பொருளாதாரத்தின் அடிப்படையில் 100 சதவீதமும் நன்மை ஏற்படும். நாகராஜரின் கோயிலுக்குச் சென்று வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். அரச மரத்தின் கீழ் இருக்கும் விநாயகர், ராகு கேதுவை வழிபடுவது அமோகமான நற்பலன்களைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+