டோல் கேட்களில் பல கிமீக்கு அணிவகுக்கும் வாகனங்கள்.. சொந்த ஊருக்கு போறீங்களா? முதலில் இதை பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொடர் விடுமுறை காரணமாக தமிழ்நாடு உள்ளே நுழையும், வெளியே செல்லும் பல டோல் கேட்டுகளில் கடுமையான டிராபிக் நிலவுகிறது. பல கிலோ மீட்டர் தூரத்திற்கு டிராபிக் நிலவுகிறது. இதை தவிர்க்க பின்வரும் முறைகளை கடைபிடியுங்கள்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு உட்பட பல்வேறு விடுமுறைகளுக்காக மக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். பெரும்பாலும் சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களுக்கு பலர் செல்கின்றனர். அதேபோல் சென்னையில் இருந்து பெங்களூருக்கு பலர் இதேபோல் பயணம் செய்கின்றனர்.

Heavy traffic in toll gates near Chennai and Bangalore: What are the ways to avoid it?

மேலும் பெங்களூரில் இருந்து ஓசூர் வழியாக தமிழ்நாட்டிற்கும் பலர் வருகின்றனர். இதனால் பல்வேறு சுங்கச்சாவடிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கூடுவாஞ்சேரி வெளியே உள்ள சாவடி, பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி சாவடி, ஓசூர் உள்ளே நுழையும் சாவடி, தொப்பூர் கணவாய் அருகே உள்ள சாவடி என்று பல இடங்களில் வரிசையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

ஆமை வேகத்தில் செல்லும் வாகனங்கள்:சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று ஏற்பட்ட சம்பவம் வாகன ஓட்டிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர் விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்களால் அந்த சாலை முழுக்க போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு சாலையில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. அதிலும் டோல்கேட் இருக்கும் பகுதிகளில் மிக மிக மெதுவாக வாகனங்கள் சென்றன. ஓசூர் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் காரணமாக 6 மணி நேர பயணம் 9 மணி நேரம் ஆகியது.

4 வழி சாலை என்பதால் பல இடங்களில் வாகனங்கள் அப்படியே ஆமை வேகத்தில் சென்றது. டிரைவர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் மெதுவாக வாகனத்தை செலுத்தினர். எக்ஸ்பிரஸ் வேயின் அவசியத்தை உணர்த்தும் விதமாக சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கடும் நெரிசல் ஏற்பட்டது.

கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்: பல கிலோ மீட்டர் தூரத்திற்கு டிராபிக் நிலவுகிறது. இதை தவிர்க்க பின்வரும் முறைகளை கடைபிடியுங்கள்.

1. அதிகாலையில் வேகமாக புறப்பட வேண்டும். சீக்கிரமே புறப்படுவதன் மூலம் டோல் கேட் நெரிசலை தவிர்க்க முடியும்.

2. பாஸ்ட் டாக்கில் போதுமான அளவு பணம் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

3. மாலை நேர பயணத்தை தவிர்க்க வேண்டும்.

4. டோல் கேட்டை தவிர்க்கும் மாநில சாலைகள் இருந்தால் அதில் பயணிக்கலாம். தமிழ்நாடு உள்ளே மாநில நெடுஞ்சாலையில் பெரும்பாலும் டிராபிக் இருக்காது. டோல் கேட்டும் கிடையாது.

5. டோல் கூட்டத்தை தவிர்க்க முடியாத பட்சத்தில் ரோடு டிரிப்பை தவிர்த்து ரயில் போன்ற பொது போக்குவரத்தை பயன்படுத்தலாம்.

டோல் கேட்டுகளில் மாற்றம்: விரைவில், இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் செயற்கைக்கோள் அடிப்படையிலான டோல் கட்டண முறைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. டோல் கட்டண முறைகேடுகளை தவிர்ப்பது, பொய்யான டோல் கட்டண முறையை தடுப்பதற்காக இந்த முறை கொண்டு வரப்பட்டு உள்ளது.

நாடு முழுக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ) விரைவில் புதிய முறையை அறிமுகப்படுத்தும் என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். மார்ச், 2024க்குள் தேசிய நெடுஞ்சாலைகளில் செயற்கைக்கோள் அடிப்படையிலான கட்டண முறையை NHAI அறிமுகப்படுத்தும் என்று அமைச்சர் நிதின் கட்கரி ராஜ்யசபாவில் தெரிவித்தார்.

சுங்கச்சாவடி: சமீபத்தில், சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு காலத்தை குறைப்பது மற்றும் துறைமுகங்களில் ஏற்றுமதி, இறக்குமதி நேரத்தை எளிதாக்குவது போன்ற குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் குறித்து இந்தியா உலக வங்கியிடம் பல விவரங்களை தெரிவித்தது. FASTag செயல்படுத்தப்பட்டதன் மூலம், சுங்கச்சாவடிகளில் சராசரி காத்திருப்பு நேரம் வியத்தகு முறையில் குறைந்துள்ளது. தற்போது காத்திருப்பு நேரம் வெறும் 47 வினாடிகளாகக் குறைந்துள்ளது, இது முந்தைய 714-வினாடி காத்திருப்பில் இருந்து கணிசமான முன்னேற்றம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+