மாதம்பட்டி ரங்கராஜனிடம் இருந்து கைமாறும் ராஜாங்கம்.. மகன் போட்டோவோடு ஜாய் கிரிஸில்டா பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் - ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா விவகாரம் கடந்த சில மாதங்களாக சோசியல் மீடியாவிலும், சினிமா வட்டாரங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. திருமணம், கர்ப்பம், டிஎன்ஏ டெஸ்ட், சட்ட நடவடிக்கை என பல திருப்பங்களுடன் சென்ற இந்த விவகாரம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இன்று ஜாய் தன்னுடைய மகனின் புகைப்படத்தை சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு பின்னர் விட்டு சென்றுவிட்டதாக ஜாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அந்த புகாரின் அடிப்படையில் மகளிர் ஆணையம் கூட தலையிட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தது.

இதற்கிடையில், "திருமணம் மிரட்டலின் பேரில் தான் நடந்தது என்றும் ஜாய் குழந்தைக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க வேண்டும்" என்று மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்ட அறிக்கையும் இந்த விவகாரத்தை இன்னும் தீவிரப்படுத்தியது. அதற்கு ஜாய் "நான் டிஎன்ஏ டெஸ்டுக்கு தயாராக இருக்கிறேன்" என்று சவால் விட்டதும் அனைவரும் கவனித்த சம்பவமாக இருந்தது.

Madhampatty Rangaraj Joy Criziladaa vijay tv

ஜாய் கிரிஸில்டா பதிவு

இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து பதிவிட்டு வரும் ஜாய், சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் "ஒரு பெண்ணின் வாழ்க்கையை சிதைத்து, ஒரு குழந்தையின் எதிர்காலத்தை கைவிட்டவன் ஆண் அல்ல... ஒரு குழந்தைக்கு பெயர் கொடுக்க தைரியம் இல்லாதவன் தந்தை என்ற உண்மையை விட்டு ஓட முடியாது... 2026ல் பெரிய சப்ரைஸ்" என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

ஜாய் கிரிஸில்டா மகன் புகைப்படம்

இதற்கிடையில் தற்போது அவர் பகிர்ந்துள்ள புதிய பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது மகனுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் போலவே செஃப் உடை அணிவித்து ஒரு போட்டோஷூட் நடத்தி உள்ளார். அந்த புகைப்படத்தில் குழந்தையின் கையில் சிறிய மர கரண்டி கொடுக்கப்பட்டிருக்கிறது.

அந்த போட்டோவுக்கு ஜாய் எழுதியிருக்கும் பதிவு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது: "Continuing my father #madhampattyrangaraj culinary legacy... Legacy lives on from my father to me... Ps: Next pic face reveal" என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது - தந்தையின் சமையல் பாரம்பரியம் தனது மகன் மூலம் தொடரும் என்று உணர்ச்சி பூர்வமாக தெரிவித்துள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, அடுத்த பதிவில் தான் தனது மகனின் முகத்தை ரிவீல் செய்யப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே லவ்வர்ஸ் டே அன்று என்னுடைய மகனின் முகத்தை ரிவீல் செய்து மாதம்பட்டி ரங்கராஜனின் அடையாளத்தை தெரியப்படுத்துவேன் என்று போஸ்ட் போட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தந்தை - மகன் தொடர்பான சென்டிமென்ட்டை முன்வைத்து, தனது மகனை செஃப் லுக்கில் காட்டியிருக்கும் இந்த பதிவு ஒரு பதிலடி மட்டுமல்ல; "என் குழந்தைக்கு அடையாளம் இருக்கிறது" என்ற அமைதியான ஆனால் வலுவான செய்தி என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சட்ட வழக்கு இன்னும் நடைபெற்று கொண்டிருக்க, சமூக வலைதளங்களில் ஜாய் வெளியிடும் ஒவ்வொரு பதிவும் இந்த விவகாரத்தை மீண்டும் மீண்டும் பேச வைக்கிறது. குறிப்பாக மகனின் முகம் விரைவில் வெளியாகும் என்ற தகவல் தற்போது இணையத்தில் அதிகம் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+