“வச்சிக்கவா உன்ன மட்டும் நெஞ்சுகுள்ள..” ரஜினியுடன் ஆடிய கல்பனா! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க!
சென்னை: சமூக வலைதளங்களில் சமீப நாட்களாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. புடவையில், மிக நேர்த்தியான வியக்கும் படி ஸ்டேப் போட்டு, 70 வயதை நெருங்கிய ஒரு பெண் "ரம்பா ஹோ" பாடலுக்கு அற்புதமாக நடனமாடும் அந்த காட்சி, பலருக்கும் ஆச்சரியமும் நெகிழ்ச்சியும் கலந்த உணர்வை கொடுத்தது. "80-ஸ் ஓஜி", "காலம் கடந்த அழகு" என்று நெட்டிசன்கள் கமெண்ட்களில் பாராட்டுகளை குவித்தனர். அவர் யார் என்பது பற்றி இப்போ பார்க்கலாம்.
அந்த வீடியோவில் தெரிந்த முகம் - 80-களில் பாலிவுட் ரசிகர்களை கவர்ந்த நடிகை கல்பனா ஐயர் (Kalpana Iyer ) தான்.

ரம்பா ஹோ பாடல்
1981-ம் ஆண்டு வெளியான Armaan திரைப்படத்தில் வந்த "ரம்பா ஹோ" பாடல், அந்த காலத்தில் பெரும் ஹிட். அந்தப் பாடலுக்கு கல்பனா ஆடிய டான்ஸ் தான் அவரை அடையாளப்படுத்தியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தப் பாடல் மீண்டும் ரீமேக் செய்யப்பட்டு துரந்தர் படத்திற்கு பிறகு சோசியல் மீடியாவில் ட்ரெண்டானது.
அந்த பரபரப்பு அடங்கும் முன்பே, 45 வருடங்கள் கழித்து கல்பனா, ஒரு திருமண வீட்டில் அதே "ரம்பா ஹோ" பாடலுக்கு மீண்டும் டான்ஸ் ஆடி, அதைத் தன் சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்தார். அந்த ஒரு வீடியோ - பழைய நினைவுகளை இன்றைய தலைமுறையுடன் இணைத்த ஒரு பாலமாக மாறியது.
மிஸ் இந்தியா மேடையிலிருந்து சினிமா வரை
கல்பனாவின் பயணம் சினிமாவிலிருந்து தொடங்கியதல்ல. 1978-ம் ஆண்டு நடந்த மிஸ் இந்தியா (Miss India) போட்டியில் முதல் ரன்னர்-அப் ஆகி கவனம் பெற்றார். அதனைத் தொடர்ந்து Miss World போட்டியிலும் டாப் 15 இடத்துக்குள் சென்றார்.
மாடலிங் மூலம் திரைத்துறைக்கு நுழைந்த கல்பனா, "ரம்பா ஹோ", "நாச்சே நாச்சே" போன்ற ஹிட் பாடல்களால் 80-களில் பாலிவுட் ரசிகர்களிடையே பரிச்சயமான முகமாக மாறினார். 100-க்கும் மேற்பட்ட ஹிந்தி திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.
69 வயதில் கிடைத்த பெரிய பரிசு
இந்த நிலையில் இப்போது அவர் ஆடி வைரலான வீடியோ குறித்து கல்பனா அளித்த பேட்டிகளில், "69 வயதில் எனக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய பரிசு இந்த அன்பு தான். சொந்தக்காரங்க வீட்டு திருமணத்திற்கு சென்றிருந்தேன். அங்கு மாப்பிள்ளையின் அப்பா என்னை டான்ஸ் ஆட சொன்னார். எந்த முன்னேற்பாடும் இல்லாமல் ஆடினேன். நீண்ட காலத்துக்கு பிறகு அந்தப் பாடலை கேட்கும் போது பழைய நாட்கள் கண்முன்னே வந்தது" என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
Dushara Vijayan: சொந்த ஊரு திண்டுக்கல்லில் விவசாயம் செய்யும் நடிகை துஷாரா விஜயன்.. பஞ்ச் டயலாக் தான் செம!
அடுத்த நாள் காலை, உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் போன் செய்து பாராட்டிய போது தான் அந்த வீடியோ வைரலாகி வருவது அவருக்குத் தெரிய வந்ததாம். "மிஸ் இந்தியா போட்டியில் இருந்த புகைப்படத்தையும் இப்போதைய புகைப்படத்தையும் ஒப்பிட்டு பலர் பகிர்கிறார்கள். இது கனவு போல இருக்கிறது" என்றும் அவர் கூறியிருந்தார்.

ரஜினிகாந்துடன் இணைந்த நினைவுகள்
பலருக்குத் தெரியாத ஒரு சுவாரஸ்ய தகவல், கல்பனா, Rajinikanth நடித்த "நல்லவனுக்கு நல்லவன்" படத்தில், "வச்சிக்கவா உன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள" என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடியவர் என்பதையும் இப்போது ரசிகர்கள் மீண்டும் கண்டுபிடித்து பகிர்ந்து வருகிறார்கள். அந்த காலத்து போட்டோக்களும், இன்றைய கல்பனாவின் புகைப்படங்களும் சேர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. "காலம் ஓடியாலும், கலைஞனின் ஒளி மங்காது" என்பதை நினைவூட்டுகிறது.
ரசிகர்களின் அன்பே ஊக்கம்
"மீண்டும் திரைத்துறைக்கு வர ஆர்வமாக இருக்கிறேன். மக்கள் கொடுக்கும் இந்த அன்பு தான் எனக்கு பெரிய ஊக்கம்" என்று கல்பனா கூறியிருப்பது, அவரது மனதில் இன்னும் கலையின் தீ அணையவில்லை என்பதை காட்டுகிறது. தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இவர், ஹிந்தி சினிமாவில் பெரும் பயணம் செய்தாலும், இப்போது தமிழ் ரசிகர்களும் அவரை மீண்டும் கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications