Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கமல், ரஜினி கூட்டணியில் இருந்து விலக காரணமே இதுதான்! ஓபனாக மேடையில் பேசிய லோகேஷ் கனகராஜ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்த ரஜினிகாந்த் - கமல்ஹாசன் கூட்டணிப் பட விவகாரத்திற்கு லோகேஷ் கனகராஜ் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தான் எதற்காக ரஜினிகாந்த் கமல்ஹாசன் கூட்டணியில் இருந்து விலகினேன் என்பது பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

மிகக் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக மாறிய லோகேஷ் கனகராஜ், தனது படங்களின் பாணி, வன்முறை நிறைந்த காட்சிகள், யதார்த்தமான ஆக்‌ஷன் ட்ரீட்மெண்ட் ஆகியவற்றால் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர்.

Lokesh Kanagaraj Rajinikanth Kamal Haasan

"மாநகரம்" என்ற சிறிய பட்ஜெட் படத்தில் தொடங்கிய அவரது பயணம், "கைதி", "விக்ரம்" போன்ற மெகா ஹிட் படங்களின் மூலம் இந்திய அளவிற்கு விரிந்தது. குறிப்பாக, கமல்ஹாசனுடன் இணைந்து உருவாக்கிய "விக்ரம்" படம், லோகேஷை 'பான் இந்தியா' இயக்குநராக உயர்த்தியது.

இந்த நிலையில்தான், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரையும் ஒன்றாக வைத்து ஒரு படம் இயக்கும் வாய்ப்பு, லோகேஷ் கனகராஜுக்கு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். அந்த காலகட்டத்தில் அவர் "கைதி 2" பணிகளில் முழுமையாக ஈடுபட்டிருந்ததால், சில வாரங்கள் கழித்து தான் இரு நடிகர்களையும் தனித்தனியாக சந்தித்து கதை சொன்னதாக கூறியுள்ளார்.

அந்த கதை இருவருக்கும் பிடித்திருந்தாலும், தொடர்ந்து ஆக்‌ஷன் படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால், இந்த முறை அவர்கள் "லைட் ஹார்ட், எளிமையான, பொழுதுபோக்கு படம்" ஒன்றை எதிர்பார்த்ததாக லோகேஷ் விளக்கியுள்ளார்.

அந்த இடத்தில்தான், தன்னுடைய வரம்புகளை உணர்ந்ததாக லோகேஷ் கனகராஜ் சொல்கிறார். "நான் செய்யும் சினிமா, என் உலகம், என் டோன் எல்லாமே சற்று சீரியஸானது. லைட் ஹார்ட் படம் எனக்கு இயல்பாக வராது. அதனால், நான் அந்தப் படத்தை எடுத்தால், அது அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் போய்விடும். அதனாலேயே நானே விலக முடிவு செய்தேன்" என்ற அவரது பதில், பல சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

இதனுடன் சேர்ந்து, லோகேஷ் கனகராஜ் மீது தொடர்ந்து எழுந்துவரும் விமர்சனங்களும் மீண்டும் கவனத்திற்கு வந்துள்ளன. அவரது படங்களில் அதிக அளவில் வன்முறை, போதைப்பொருள் தொடர்பான காட்சிகள் இடம்பெறுவதாக சமூக ஆர்வலர்களும், சில அரசியல் தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.

இதற்கு முன்பும் இதுகுறித்து விளக்கம் அளித்த லோகேஷ், "எனது படங்கள் போதையை ஊக்குவிப்பதற்காக அல்ல; அதற்கு எதிராகத்தான் பேசுகின்றன" என ஆதங்கத்துடன் கூறியிருந்தார். மேலும், போதைக்கு எதிரான பிரசாரங்களில் மாணவர்களை ஈடுபடுத்தியதும், குறும்படங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதாகவும் பேசி இருந்தார்.

ஒருபுறம், சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்கள்; மறுபுறம், மெகா ஹிட் படங்கள், எல்சியூ யூனிவர்ஸ், பாலிவுட் வரை விரிந்த வாய்ப்புகள்-இந்த எல்லாவற்றுக்கும் நடுவே, ரஜினி - கமல் கூட்டணியில் இருந்து விலகிய லோகேஷ் கனகராஜின் முடிவு, அவரது சினிமா பயணத்தில் ஒரு முக்கியமான தருணமாகவே பார்க்கப்படுகிறது. இது ஒரு வாய்ப்பை தவிர்த்த சம்பவமாக அல்ல; "எனக்கு வராததை செய்ய மாட்டேன்" என்ற ஒரு இயக்குநரின் தைரியமான முடிவாக ரசிகர்கள் இதை பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+