Parasakthi First Half Review: பராசக்தி ஃபர்ஸ்ட் ஹாஃப் எப்படி இருக்கு… ட்விட்டர் ரிவியூ இதோ
சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், நேற்றிரவு நடைபெற்ற ப்ரீமியர் ஷோவை பார்த்த ரசிகர்களின் கருத்துகள் சமூக வலைத்தளங்களில் வெளியாக தொடங்கியுள்ளது. அதில், படத்தின் முதல் பாதி (First Half) குறித்து கலவையான, ஆனால் சற்றே நம்பிக்கை தரும் கருத்துகள் பதிவாகி வருகின்றன.
பிரபல விமர்சகர் மிஸ்டர் பழவேட்டையார் (Mr. Palvettiyar) தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பராசக்தி படத்திற்கு 1.5 / 5 என்ற மதிப்பெண் வழங்கியுள்ளார். அதே நேரத்தில், "1st half ok... 2nd half drag, சோதப்பல்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விமர்சனம் ப்ரீமியர் ஷோவில் படம் பார்த்த பார்வையாளர்களின் நியூட்ரல் கருத்து என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதல் பாதி
ப்ரீமியர் ஷோவில் படம் பார்த்தவர்கள் கூறுவதன்படி, பராசக்தி படத்தின் முதல் பாதி, 1960-களின் அரசியல் மற்றும் சமூக சூழலை உருவாக்க முயற்சி செய்கிறது. மாணவர் அரசியல், இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்கள், அக்காலத்திய உணர்ச்சிகள் ஆகியவை முதல் பாதியில் அமைதியாக, ஆனால் சீராக முன்னெடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
சிவகார்த்திகேயனின் நடிப்பு, அவரது உடல் மொழி, வசன உச்சரிப்பு ஆகியவை முதல் பாதியில் கவனிக்கத்தக்கதாக இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். குறிப்பாக அவரது கேரக்டர் பில்ட்அப் மற்றும் அரசியல் சிந்தனைக்கு செல்லும் ஆரம்ப கட்டம் தான் முதல் பாதியின் முக்கிய பலம் என கூறப்படுகிறது.
பெரிய கனவு
ஆனால், வெளியான விமர்சனத்தில், "Parasakthi dreams big, but ultimately falls short" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, படம் ஒரு சக்திவாய்ந்த காலகட்டத்தை மீண்டும் திரையில் உருவாக்க முயற்சி செய்கிறது. ஆனால், பார்வையாளர்களை அந்த காலத்திற்குள் முழுமையாக கொண்டு செல்ல தவறிவிட்டதாக விமர்சனம் சுட்டிக்காட்டுகிறது.
இதன் அடிப்படையில் பார்க்கும்போது, பராசக்தி படத்தின் முதல் பாதி மோசமானதாக இல்லை என்றாலும், அது எதிர்பார்த்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதே ப்ரீமியர் ஷோ பார்வையாளர்களின் பொதுக் கருத்தாக தெரிகிறது.
#Parasakthi Rating: 1.5/5.. 1st half ok.. 2nd half, drag, சொதப்பல்.! 😔
— Mr.பழுவேட்டரையர் (@mrpaluvets) January 10, 2026
(Neutral Review from premier show audience)
Parasakthi dreams big, but ultimately falls short. The film aspires to recreate a powerful period setting, yet never truly transports the viewer into its time.… pic.twitter.com/UVNdFahOii
பராசக்தி ரிவ்யூ
மொத்தத்தில், சமூக வலைத்தளங்களில் வெளியாகும் ஆரம்ப கருத்துகளின் படி, பராசக்தி படத்தின் ஃபர்ஸ்ட் ஹாஃப் ஓரளவுக்கு பிடிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆனால், படத்தின் முழு அனுபவத்தை தீர்மானிக்கப்போகும் இரண்டாம் பாதி குறித்து தான் அதிகமான கேள்விக்குறிகள் எழுந்துள்ளன.
இன்று வெளியாகியுள்ள பொதுக் காட்சிகளுக்குப் பிறகு, ரசிகர்களின் முழுமையான கருத்துகள் மற்றும் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் தான் பராசக்தி உண்மையில் எங்கு நிற்கிறது என்பதை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications