Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Parashakthi Booking: பராசக்திக்கு அடித்த ஜாக்பாட், புக்கிங் எல்லாம் ஹவுஸ் ஃபுல்.. சிவகார்த்திகேயனுக்கு சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "இந்த பொங்கல் அண்ணன்-தம்பி பொங்கல்" என்று சிவகார்த்திகேயன் சொன்னபோது, அது சினிமா உலகில் ஒரு ஸ்போர்ட்ஸ்மேன் ஸ்பிரிட்டாகவே எடுத்துக் கொள்ளப்பட்டது. விஜய் - சிவகார்த்திகேயன் இருவரின் படங்களும் அடுத்தடுத்த நாட்களில் வெளியாக, பொங்கல் பாக்ஸ் ஆபீஸ் ரேஸ் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது கதை முழுக்க திரும்பி விட்டது. அண்ணன் இருக்க வேண்டிய இடத்தில்... அவர் கிட்டத்தட்ட ரேஸிலேயே இல்லாமல் போய்விட்டார்.

இதனால், "அண்ணன்-தம்பி பொங்கல்" என்பது இப்போது "அண்ணன் காணாமல் போக, தம்பிக்கு மட்டும் பொங்கல்" என்று மாற்றிக் கொள்ளப்பட்டுள்ளது. பெரிய போராட்டத்திற்கு பிறகு பராசக்திக்கு சென்சார் சர்டிபிகேட் கிடைத்ததும் நாளை படத்திற்கு அன்ன புக்கிங் அமோகமாக ஆட்டத்தை தொடங்கி இருக்கிறது.

Parashakthi Sivakarthikeyan Pongal

சிவகார்த்திகேயன் நடித்த 'பராசக்தி' படம், சாதாரண கமர்ஷியல் என்டர்டெய்னராக இருந்திருந்தால், விஜய் படத்துடன் நேரடியாக மோத தயாரிப்பாளர்களே தயங்கியிருப்பார்கள். ஆனால் இந்த படம் தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு, தற்போதைய அரசியல் சூழல், உணர்ச்சிவசப்பட்ட வசனங்கள் என கூர்மையான விஷயங்களை பேசுகிறது.

அதனால், "பொங்கல் ரேஸில் இருந்து விலகக்கூடாது" என்று தீர்க்கமான முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு மேல், சென்சார் சான்றிதழ் தொடர்பான பிரச்சனைகளும் ஒரு கட்டத்தில் படக்குழுவை பதற வைத்தன.

பராசக்தி டீம் கதறல்

படத்தின் முக்கியமான வசனங்கள், அரசியல் ரீதியாக பேசப்படும் காட்சிகள் மீது மியூட், கட், சைலன்ஸ் என சென்சார் குழு கத்தரிக்கோல் வீசியதாக படக்குழு தரப்பில் புலம்பல்கள் எழுந்தன. படத்தின் உயிரே புரட்சி பேசும் விஷயங்கள் தான்... அதையே பேச விடலையே என்று பராசக்தி டீம் உள்ளுக்குள் கதறிக் கொண்டிருக்கிறது என்பதே கோலிவுட் பேச்சு.

இத்தனை போராட்டங்களுக்குப் பிறகு தான், யு/ஏ சான்றிதழ் கிடைத்து, நாளை இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது

புக்கிங் புயல்

தொடக்கத்தில், ஜனநாயகன் - பராசக்தி இரண்டு படங்களுக்கும் தியேட்டர்கள் பிரிக்கப்படும், பராசக்திக்கு 30-40% தான் கிடைக்கும் என்று பேசப்பட்டது. ஆனால் இப்போது ஜனநாயகன் ரேஸிலேயே இல்லை. அதன் பலன்? மொத்த தியேட்டர்களையும் பராசக்தி கைப்பற்றியது.

தமிழ்நாட்டில், புக் மை ஷோ, டிஸ்ட்ரிக்ட், சிங்கிள் ஸ்கிரீன், மல்டிப்ளெக்ஸ் எங்க பார்த்தாலும் பராசக்தி டிக்கெட் மளமளவென புக் ஆகி வருகிறது.

இந்த பக்கம் பிரபாஸ்

ஒருபக்கம், தெலுங்கில் பிரபாஸ் நடித்த படம் சொன்ன தேதியில் சரியாக வந்து, ரசிகர்கள் பட்டாசு, பால்குடம், கொண்டாட்டம் என்று ஆட்டம் போட்டு வருகிறார்கள். பொங்கலுக்கு அண்ணனா? தம்பியா? என்று போட்டி இருந்த நிலையில் குறுக்க இந்த கௌசிக் வந்தா என்று பிரபாஸ் நின்று கொண்டிருக்கிறார். அவருடைய படத்திற்கு முதல் நாளே கலவையாக விமர்சனங்களும் கிடைத்திருக்கிறது.

மறுபக்கம், தமிழில் "ஜனநாயகனா... பராசக்தியா?" என்று போட்டி போட்டுக் கொண்டிருந்த நிலை, இப்போது பெரிய பஞ்சாயத்தாக முடிந்துள்ளது. அண்ணன்-தம்பி பொங்கல் என்று ஆரம்பித்த கதை, அண்ணன் காணாமல் போக, பல போராட்டங்களுக்குப் பிறகு தம்பி மட்டும் தனியாக பொங்கலை ரூல் செய்யும் கதையாக மாறியுள்ளது.

இந்த ஆண்டு பொங்கல், சிவகார்த்திகேயனுக்கு 25வது படம் - அரசியல் - சர்ச்சை - மாஸ் ஓபனிங் என்று ஒரு முழு பேக்கேஜாக மாறுமா? என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதை தீர்மானிக்கப்போவது, பொங்கல் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் தான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+