Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ravi Mohan: காதல் இப்போது தான் புரிகிறது.. ரவி மோகனுடன் கெனிஷாவின் போஸ்ட்.. அடுத்த பஞ்சாயத்து ரெடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக எந்தவிதமான சர்ச்சைகளிலும் சிக்காமல் இருந்தவர்களில் ஒருவர் தான் ரவி மோகன். குடும்பத்தை முக்கியமாக பார்க்கும் நடிகர் என்ற பெயரும் அவருக்கு இருந்தது. ஆனால் சமீப காலங்களில் அவரது தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றி எழுந்த விஷயங்கள், அவரை மீண்டும் செய்தித் தலைப்புகளில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

தன்னுடன் பல வருடங்கள் வாழ்ந்த மனைவி ஆர்த்தியுடன் சட்டப்படி பிரிய முடிவு செய்ததாக ரவி மோகன் அறிவித்ததுதான் இந்த பரபரப்புக்கு தொடக்கம். இந்த அறிவிப்புக்குப் பிறகு, ஆர்த்தி சமூக வலைதளங்களில் மனவலி நிறைந்த பதிவுகளை பகிர்ந்ததால், இந்த விவகாரம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், சினிமா வட்டாரத்திலும் பெரும் பேசுபொருளாக மாறியது.

Ravi Mohan Tamil Cinema

ரவி மோகன் பதிவு

இரு தரப்பினரின் கருத்துகள் வெளியானதால், இது தனிப்பட்ட விஷயம் என்றாலும், பொதுவெளியில் விவாதமாகிப் போனது. இதனை தொடர்ந்து, இந்த விவகாரம் மேலும் பெரிதாகாமல் இருக்க, நீதிமன்றம் இருவரும் தங்களது கருத்துகளை பொது வெளியில் வெளியிட வேண்டாம் என்று உத்தரவிட்டது.

இந்த எல்லாவற்றுக்கும் இடையில், ரவி மோகன் தனது வாழ்க்கையை முன்னேற்றும் விதத்தில் தன்னுடைய பாதையில் பயணித்து வருகிறார். சமீப காலமாக அவர் பாடகி கெனிஷாவுடன் பல நிகழ்ச்சிகள் மற்றும் கோயில் விசிட்கள் போன்ற இடங்களில் ஒன்றாகவே தோன்றுவது கவனத்தை ஈர்த்தது.

நெருக்கமான நட்பு

இதனால் இருவருக்கும் இடையே நெருக்கமான நட்பு இருக்கிறது என்பதைக் கடந்தும், வேறு ஒரு உறவு இருக்குமோ என்ற சந்தேகங்கள் சமூக வலைதளங்களில் எழுந்தன. அதற்கு ஆரம்பத்திலேயே ரவி மோகன் கெனிஷா பற்றி விளக்கம் கொடுத்திருந்தார். அவர் என்னுடைய நெருங்கிய தோழி சோல்மேட் இவர் தான் என்னுடைய வாழ்க்கையில் விளக்கேற்றியவர் என்று எல்லாம் பேசி இருந்தார்.

கெனிஷா பிறந்தநாள்

இந்த நிலையில், கடந்த 7-ஆம் தேதி கெனிஷா தனது பிறந்தநாளை கொண்டாடிய போது, அதற்கான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அந்த படங்களில் ஒன்றில், ரவி மோகன் அவருக்கு பூங்கொத்து வழங்கும் காட்சி இடம்பெற்றது. இதைவிட அதிகமாக பேசப்பட்டது, அந்த புகைப்படங்களுடன் கெனிஷா பகிர்ந்த நீண்ட உணர்ச்சிப்பூர்வமான பதிவு.

கெனிஷா பதிவு

தன்னுடைய வாழ்க்கையில் பல நேரங்களில் புரிந்துகொள்ளப்படாமல் இருந்தது, அன்பும் மரியாதையும் எவ்வளவு முக்கியம் என்பதைக் குறித்து அவர் அந்த பதிவில் பகிர்ந்திருந்தார். ரவி மோகன் தனது வாழ்க்கையில் வந்த பிறகு, தன்னுடைய எண்ணங்களும் வாழ்க்கையைப் பார்க்கும் பார்வையும் மாறியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தது, பலரின் கவனத்தை ஈர்த்தது.

மேலும் அந்த பதிவில் என்றென்றும் அன்பு இருக்கும்... சின்ன வயசுல இருந்தே பல நேரங்களில் ஒரு ஆளாகவே நான் மதிக்கப்படவில்லை.. என்னை எல்லோரும் ஒதுக்கி வச்ச மாதிரி பீல் பண்ணி இருக்கிறேன். நான் பெருசா எதிர்பார்க்கிற மாதிரி எல்லோரும் நினைப்பாங்க.. ஆனா நான் எதிர்பார்த்தது எல்லாம் ஒரு சின்ன அன்புக்காகவோ, மதிப்புக்காகவும் தான்.

நான் என்னைக்கு நானாக வாழ ஆரம்பிச்சேனோ அன்னைக்கு இந்த உலகமே எனக்கு மரியாதை கொடுத்து நிறைய சந்தோஷங்களை கொடுத்துச்சு. அப்புறம் ரவி மோகன், நீ வந்த பிறகு என் உலகமே மாறிடுச்சு என்னோட எண்ணங்கள், செயல்கள், காதல் பத்தின என்னோட பார்வை எல்லாம் புதுசா இருந்துச்சு.. இதை மத்தவங்க எப்படி வேண்டும் என்றாலும் நினைக்கலாம்..

Ravi Mohan Tamil Cinema

ஆனால் நம்மளை தெரிந்தவர்களுக்கு நாம் எவ்வளவு உண்மையாக நிம்மதியாக இருக்கிறோம் என்று தெரியும். என்னோட கஷ்ட நேரங்களில் துணையாக இருந்த... சின்ன சின்ன வெற்றியை கூட உன்னோட வெற்றியை கொண்டாடி இருக்க.. அதற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.. என்னோட இந்த பிறந்த நாளை இவ்வளவு அழகாக அன்பால நிறைய வைத்ததற்கு ரொம்ப நன்றி.

“ரவிக்காக மட்டும்தான் பராசக்தி ஓடும்” – செகண்ட் ஹாஃப்பில் இருக்கும் சம்பவம்.. கெனிஷா இப்படி சொல்லிட்டாங்களே
உன்னோட கசப்பான விஷயங்கள் எத்தனையோ இருக்கலாம் ஆனால் நீ எனக்காக ஓடி ஓடி செய்த விஷயங்களை பார்த்தால் எனக்கு ஆச்சரியமாய் இருக்கிறது. இனி வரப்போற காலம் நமக்கானது அதை நினைச்சு எனக்கு பயம் இல்லை. அந்த எதிர்காலத்தில் இன்னும் உன் கூட சேர்ந்து ரொம்ப சந்தோஷமா ஜாலியா ஒரு ஆட்டம் போட்டுக்கிட்டே இருப்பேன் என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் சிலர், இருவருக்கும் இடையிலான உறவு நட்பைத் தாண்டி வேறொரு நிலைக்கு சென்றிருக்குமோ என்று கேள்வி எழுப்ப தொடங்கினர். தனிப்பட்ட வாழ்க்கையில் இப்படியான பேசுபொருள்கள் நடந்தாலும், நடிகராக ரவி மோகன் தொடர்ந்து தன்னை அப்டேட் செய்து கொண்டே இருக்கிறார்.

சமீபத்தில் அவர் நெகட்டிவாக நடித்த 'பராசக்தி' திரைப்படம், அவரது நடிப்பில் ஒரு புதிய முயற்சியாக பேசப்பட்டது. வழக்கமான கமர்ஷியல் கதாபாத்திரங்களில் இருந்து விலகி, கொஞ்சம் உள்ளார்ந்த உணர்ச்சிகளைக் கொண்ட கதாபாத்திரத்தில் அவர் நடித்தது ரசிகர்களிடையே கவனம் பெற்றது. அந்த படத்தில் அவரது நடிப்பு பலரால் பாராட்டப்பட்டதோடு, அவரது திரைப்பயணத்தில் ஒரு முக்கிய முயற்சியாகவும் பார்க்கப்பட்டது.

இதற்கிடையில், ரவி மோகன் தற்போது நடித்து வரும் மற்றும் தயாரிப்பில் இருக்கும் புதிய படங்களும் வரிசையாக தயாராகி வருகின்றன. ஒரு பக்கம், ஆக்ஷன் கலந்த மாஸ் கதையமைப்புள்ள படம் ஒன்றில் அவர் நடித்து வருகிறார். மறுபக்கம், கதை சார்ந்த, கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் ஒரு படத்தையும் அவர் தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு மட்டுமின்றி, தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் புதுமையான கதைகளை அடிப்படையாக கொண்ட சில புதிய படங்களை உருவாக்கும் பணிகளிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற எண்ணத்துடன், கதையை மையமாக வைத்து படங்களை தேர்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒருபுறம் தனிப்பட்ட வாழ்க்கையில் மாற்றங்களும், மறுபுறம் சினிமாவில் தொடர்ச்சியான பிஸியான பயணமும் - இந்த இரண்டுக்கும் நடுவே ரவி மோகன் தற்போது ஒரு மாற்றக் கட்டத்தில் பயணித்து வருகிறார். எதிர்மறை விமர்சனங்களையும் தாண்டி, நடிகராக தனது இடத்தை தக்கவைத்துக்கொண்டு, வரும் படங்களில் புதிய முயற்சிகளுடன் ரசிகர்களை சந்திக்க ரவி மோகன் தயாராகி வருகிறார் என்றே சொல்லலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+