கன்னியாகுமரியில் விஜய் ஓட்டிய சைக்கிள்… விலை இவ்வளவு தானா? அதை வாங்கும் போது நடந்த சம்பவம்
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கன்னியாகுமரியில் நடத்திய ரோடு ஷோ தற்போது அரசியல் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக அவர் திடீரென சைக்கிள் ஓட்டி வாக்கு சேகரித்த சம்பவம் ரசிகர்களை மட்டுமல்ல பொதுமக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
காரைக்குடியில் சைக்கிள் ஓட்டிய காட்சிகள் வைரலானதற்குப் பிறகு, அதே ஸ்டைலை கன்னியாகுமரியிலும் தொடர்ந்த விஜய், கூட்டத்துக்குள் நேரடியாக சென்று மக்களுடன் கலந்துகொண்டது அவரது பிரச்சாரத்தில் ஒரு தனி திருப்பமாக பார்க்கப்படுகிறது.

சைக்கிள் பின்னணி
விஜய் சைக்கிள் ஓட்டியது ஒரு திடீர் முடிவு போல தெரிந்தாலும், அதற்குப் பின்னால் இருந்த ஏற்பாடுகள் தற்போது வெளியாகி சுவாரஸ்யத்தை கூட்டியிருக்கிறது.
கன்னியாகுமரியில் உள்ள ஒரு பிரபல சைக்கிள் கடைக்கு, விஜய்யின் நிர்வாகிகள் முன்னதாகவே சென்று மூன்று சைக்கிள்களை வாங்கியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எதற்காக வாங்குகிறோம் என்று கடைக்காரர்களிடம் சொல்லவில்லையாம்.
அப்போது சைக்கிளை உயரமான ஒருவருக்கு பொருத்தமாக செட் பண்ண சொல்லியிருக்கிறார்கள். இதை பார்த்த கடைக்காரர்களுக்கு "யாருக்காக இது இருக்கும்?" என்ற சந்தேகம் வந்தாலும், நேரடி பதில் எதுவும் கிடைக்கவில்லை.
பின்னர் அந்த மூன்று சைக்கிள்களையும் ஒரு டெம்போவில் வைத்து, முழுமையாக மூடி எடுத்துச் சென்றுள்ளனர். அதன் பிறகுதான் விஜய் சைக்கிள் ஓட்டிய வீடியோக்கள் வெளியானதும், "அது நம்ம கடையிலிருந்து போன சைக்கிள் தான்!" என்று கடைக்காரர்களுக்கே புரிந்ததாம்.
சைக்கிளின் விலை
பலர் எதிர்பார்த்த மாதிரி லட்சக்கணக்கில் இருக்கும் சைக்கிள் இல்லை. விஜய் ஓட்டிய அந்த சைக்கிளின் விலை சுமார் ₹20,000 தான் என்று கூறப்படுகிறது. அதாவது, ஒரு ஸ்டார் இமேஜ் இருந்தாலும், மக்களுடன் கலந்துகொள்ள விஜய் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்பதும் இதிலிருந்து தெரிகிறது.
குழந்தைகளுக்கே புதிய ஆசை
இந்த சம்பவத்துக்கு பிறகு அந்த சைக்கிள் கடையில் ஒரு சின்ன மாற்றமே நடந்திருக்கிறது. நேற்று மாலையே கடைக்கு வரும் சிறுவர்கள் பலரும், "எங்களுக்கும் விஜய் ஓட்டியது போல அந்த வெள்ளை கலர் சைக்கிள் வேண்டும்" என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்களாம்.
இதைக் குறித்து கடைக்காரர்கள், "இது எங்களுக்கு ரொம்ப பெரிய விஷயம்... விஜய் ஓட்டியதாலே டிமாண்ட் அதிகமா இருக்கு" என்று மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்கள்.
மக்கள் வெள்ளத்தில் விஜய்
விஜய் சைக்கிள் ஓட்டியதும், சாலையின் இருபுறமும் நின்றிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பரித்தனர். ஒரு கட்டத்தில் கூட்ட நெரிசல் அதிகரித்து, போக்குவரத்தே பாதிக்கப்பட்டது. முன்னதாக காரைக்குடியில் கூட்டத்தில் சற்று தடுமாறிய அனுபவம் இருந்ததால், இந்த முறை காவல்துறையும், தன்னார்வலர்களும் பாதுகாப்பை அதிகரித்திருந்தனர்.
-
“சாக்கு போக்கு சொல்லக்கூடாது”.. விஜய் பிறந்தநாளையொட்டி தவெக தொண்டர்களுக்கு அமைச்சர் ஆனந்த் அட்வைஸ்! -
“கரண்ட்டே இல்ல.. விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்” - எடப்பாடி கடும் தாக்கு! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
அம்மா கொடுத்த அனுமதி.. ரஜினியை போல் விஜய்யும் எனக்கு நெருக்கம்.. ராகவா லாரன்ஸ் சொன்ன வார்த்தை! -
விஜய் அதிரடி உத்தரவு! டெல்லி பயணம் முடித்த பின்பு முக்கியமான சேஞ்ச்! -
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
பேய் பிசாசு நலத்துறை அமைச்சர் ராகவா லாரன்ஸ்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. தெறிக்கும் மீம்ஸ்! -
கோவைக்கு எய்ம்ஸ் தேவை! நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வைத்த கோரிக்கைகள் என்ன? -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
"புரோட்டோகால் முக்கியம்!" சிங்கப்பெண் உடையில் கிண்டல் செய்த கூல் சுரேஷ்.. வலுக்கும் கண்டனம் -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: மீண்டும் சூடுபிடிக்கும் சிபிஐ விசாரணை.. 10 போலீசாருக்கு சம்மன்












Click it and Unblock the Notifications