விஜயுடன் கல்யாணம்.. தாலி கட்டும் தேதி..! திரிஷா அம்மா கொடுத்த ரியாக்ஷன்..! அடுத்த பஞ்சாயத்து ஸ்டார்ட்
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தற்போது அரசியல் களத்திலும் தீவிரமாக செயல்பட்டு வரும் விஜய் குறித்து கடந்த சில நாட்களாக பரபரப்பான செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அவரது குடும்ப வாழ்க்கை, அரசியல் சூழ்நிலை, நடிகை திரிஷா உடன் இணைத்து கூறப்படும் சர்ச்சைகள்-இவை அனைத்தும் ஒன்றாக சேர்ந்து தற்போது பெரிய பேசுபொருளாக மாறியிருக்கிறது.

பரபரப்பான தகவல்
விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட சங்கீதா, தற்போது அவரிடமிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த மனுவில், தனது கணவருக்கு ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார் என கூறப்படுவது இந்த விவகாரத்தை மேலும் சர்ச்சைக்குரியதாக மாற்றியுள்ளது.
இந்த தகவல் வெளிவந்தவுடன், "அந்த நடிகை யார்?" என்ற கேள்வி சமூக வலைதளங்களில் பெரிய விவாதமாக மாறியது. ரசிகர்கள், நெட்டிசன்கள் என பலரும் பல்வேறு கணிப்புகளை முன்வைத்து பேசத் தொடங்கினர்.
ஏஜிஎஸ் திருமணத்தில் நடந்த சம்பவம்
இந்த விவாதங்கள் இன்னும் சூடுபிடித்துக் கொண்டிருந்த சமயத்தில், தயாரிப்பு நிறுவனமான AGS Entertainment குடும்பத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி மீண்டும் இந்த சர்ச்சையை தீவிரப்படுத்தியது. அந்த திருமணத்திற்கு எதிர்பாராத விதமாக நடிகை திரிஷாவுடன் ஜோடியாக வந்தார் விஜய்.
அதிலும் இருவரும் ஒரே மாதிரி மேட்சிங் உடைகள் அணிந்து வந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. திருமண மண்டபத்தில் இருந்தவர்களே அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. அந்த புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதும், "இருவருக்கும் ஏதாவது உறவு இருக்கிறதா?" என்ற கேள்வி மீண்டும் தீவிரமாக எழுந்தது.
ரசிகர்களின் குழப்பம்
விஜய்யின் ரசிகர்களும், அவரது கட்சியான தவெக (Tamilaga Vettri Kazhagam) தொண்டர்களும் இந்த சூழ்நிலையில் என்ன பேசுவது என்று தெரியாமல் இருந்தனர். வழக்கமாக சமூக வலைதளங்களில் நடிகர்களை பாதுகாப்பதாக பேசும் சிலர் கூட இந்த முறை அமைதியாக இருந்ததாக கூறப்படுகிறது.
சிலர் "இது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை" என்று கூறி விவாதத்திலிருந்து விலகினார்கள். ஆனால் சிலர் இதுபோன்ற சம்பவங்கள் அரசியல் வாழ்க்கையில் தாக்கம் ஏற்படுத்தும் எனவும் கருத்து தெரிவித்தனர்.
திரைத்துறையிலிருந்தும் எதிர்வினை
இந்த விவகாரம் குறித்து திரைத்துறையிலிருந்தும் சில குரல்கள் எழுந்தன. இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் ஒரு நிகழ்ச்சியில் இந்த விஷயத்தை குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை கிளப்பியது. அதற்கு நடிகை திரிஷா சமூக வலைதளத்தில் கடுமையான பதிலை பதிவு செய்தார். பின்னர் பார்த்திபனும் சில வீடியோக்கள் வெளியிட்டு தனது கருத்தை விளக்கினார். சில நாட்கள் இந்த விவாதம் சமூக வலைதளங்களில் தீவிரமாக நடந்தபோதும், அதன் பிறகு மெதுவாக அந்த விவகாரம் அமைதியாகிவிட்டது.
திரிஷா அமைதியான அணுகுமுறை
இத்தனை சர்ச்சைகள் நடக்கும்போதும், திரிஷா மிகவும் சில்லாகவே இருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. சமீபத்தில் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்விகள் கேட்டபோதும் அவர் எந்த பதிலும் சொல்லாமல் சிரித்தபடியே சென்றுவிட்டார்.
மேலும் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். சில புகைப்படங்களுக்கு அவர் வைத்திருக்கும் காதல் பாடல் பின்னணிகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. "திரிஷாவுக்கு திருமண ஆசை வந்துவிட்டதோ?" என்று சிலர் கமெண்ட்ஸ்களும் செய்து வருகின்றனர்.
திரிஷா அம்மா 'லைக்' சர்ச்சை
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் இன்னொரு சம்பவம் பேசுபொருளானது. ஒரு ரசிகர், விஜய்யும் திரிஷாவும் ஒன்றாக வரும் வீடியோவை பகிர்ந்து, "தாலி கட்டுவது உறுதி... தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என்று எழுதியிருந்தார்.
அந்த பதிவுக்கு திரிஷாவின் அம்மாவான Uma Krishnan லைக் போட்டதாக கூறி ஒரு ஸ்க்ரீன்ஷாட் பரவி வருகிறது. இதைப் பார்த்த சிலர் "இருவரின் திருமணத்திற்கு இது ஹிண்ட் ஆக இருக்குமா?" என்று கேள்வி எழுப்பினர். ஆனால் மற்றவர்கள், "அது தவறுதலாக லைக் செய்யப்பட்டிருக்கலாம். அந்த பதிவின் லைக் பட்டியலில் அவர் பெயரே இல்லை" என்றும் கூறி வருகின்றனர்.
அரசியல் சூழ்நிலையில் எழும் கேள்விகள்
இந்த குடும்ப சர்ச்சைகள் எல்லாம் நடக்கும்போதே விஜய் அரசியலிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அவரது கட்சி தமிழ்நாடு அரசியலில் பெரிய எதிர்பார்ப்புடன் களமிறங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. குறிப்பாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் இந்த விவகாரம் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அரசியல் வட்டாரங்களில் ஆர்வமாக கவனிக்கப்படுகிறது.
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு
விஜய்-சங்கீதா விவாகரத்து மனு, திரிஷாவுடன் இணைந்துகொண்டதாக கூறப்படும் சம்பவங்கள், சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகள்-இவை அனைத்தும் தற்போது தமிழ் சினிமாவையும் அரசியல் வட்டாரங்களையும் ஒரே நேரத்தில் பரபரப்பாக வைத்திருக்கிறது.
ஆனால் இந்த விவகாரங்களில் எந்த தகவல்கள் உண்மை, எது வதந்தி என்பதற்கு இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் நேரடியாக விளக்கம் அளிக்கவில்லை. அதனால் இந்த சர்ச்சைகள் இன்னும் சில நாட்கள் தொடரும் எனவே பலரும் கூறி வருகின்றனர்.
-
காரைக்குடியில் விஜய் பரப்புரை செய்ய.. 37 நிபந்தனைகள்! லிஸ்ட் போட்ட தேர்தல் ஆணையம்! -
விஜய்க்கு ‘மெச்சூரிட்டி' இல்லை.. விளாசிய கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார்! கோபத்தின் பின்னணி -
விஜய் இந்த தேர்தலில் ஆட்டக்காரர் தான்.. மே 4 தவெகவுக்கு பல பாடங்களை கற்பிக்கும்.. இயக்குநர் அமீர்! -
லீக்கான ‘ஜனநாயகன்’.. இஸ்லாமியர்களுக்கு எதிரான வசனங்கள்.. பற்றிக்கொண்ட நெருப்பு.. விஜய்க்கு செக்! -
'காப்பி-கேட்' கிங்? அரசியலிலும் ரஜினி பாணி.. பாடலை வாரி சுருட்டி விஜய்? -
விஜய் நாளை காரைக்குடியில் பிரச்சாரம்.. மரங்களுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு.. ப்ளூ சட்டை மாறன் -
Jana nayagan: லீக் ஆன ஜனநாயகன் படம்.. இயக்குநர் ஹெச் வினோத்தின் உருக்கமான பதிவு! வெளியான அதிர்ச்சி தகவல் -
திருட்டு சைட்டை பாராட்டும் விஜய் ரசிகர்கள்.. "ஜனநாயகன்" லீக் விவகாரத்தில் இதை யாருமே எதிர்பார்க்கல -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
Praveen: காங்கிரஸ் தலைமை அனுமதியுடனே விஜய்யை சந்தித்தேன்! வெடிகுண்டு வீசிய பிரவீன் சக்கரவர்த்தி! -
நைஸா பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு.. தவெக விஜய் அரசியலில் அடுத்தடுத்த அதிர்ச்சி திருப்பம் -
ஜனநாயகன் விஷயத்தில் நடந்தது இதுதான்! எல்லாமே வதந்தி! ஓபனாக உடைத்த ஜீ5 கௌஷிக்












Click it and Unblock the Notifications