நான் அப்பவே சொன்னேனே.. நயினார் வைத்து, விஜய் -சங்கீதா விவாகரத்து பற்றி ப்ளூ சட்டை மாறன் குதர்க்கமான போஸ்ட்
சென்னை: தமிழ்நாட்டிலேயே நேற்று முதல் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயம் என்றால் அது நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் - அவரது மனைவி சங்கீதா விவாகரத்து வழக்குதான். சினிமா, அரசியல், ரசிகர்கள் வட்டாரம் என எங்கு பார்த்தாலும் இதைப்பற்றிய பேச்சுதான் சூடாக ஓடிக் கொண்டிருக்கிறது.
கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கும் மேலாக சேர்ந்து வாழ்ந்த இந்த ஜோடி தமிழ் சினிமாவின் மிகவும் பிடித்தமான குடும்பமாகவே பார்க்கப்பட்டது. 1999-ல் நடந்த திருமணத்திற்கு பிறகு மகன் சஞ்சய், மகள் திவ்யா என இரண்டு குழந்தைகளுடன் அமைதியாக இருந்த குடும்பம் திடீரென நீதிமன்றம் வரை சென்றிருப்பது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாகி இருக்கிறது.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு
செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் சங்கீதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்தான் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ள குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளன.
சங்கீதா தனது மனுவில், 2021 ஏப்ரல் மாதம் விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பது தெரிந்தது. அது தன்னை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது. அந்த உறவை முறித்துக்கொள்வதாக விஜய் உறுதி அளித்தாலும் எந்த மாற்றமும் நடக்கவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளாக மனதளவிலும், உணர்ச்சியளவிலும் தன்னை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். அந்த நடிகையுடன் வெளிநாட்டு பயணங்கள் சென்றபோது எடுத்த புகைப்படங்கள் வெளியானது குடும்பத்துக்கு அவமானமாக இருந்தது என்று குறிப்பிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த தகவல்கள் வெளியானதும், "இது உண்மையா?", "அரசியல் பின்னணி ஏதாவது இருக்கிறதா?" என்று ரசிகர்கள் குழப்பத்திலும் அதிர்ச்சியிலும் மூழ்கியிருக்கிறார்கள்.
ரசிகர்களின் எதிர்வினை
விஜய்யை குடும்ப மனிதராகவே பார்த்த ரசிகர்கள் பலருக்கு இது நம்ப முடியாத விஷயமாக இருக்கிறது. சிலர் இது முழுக்க அரசியல் தாக்குதல் என்று கூற, இன்னொரு பகுதி "நீதிமன்ற விஷயம்... உண்மை வெளிவரும் வரை காத்திருக்கலாம்" என்ற மனநிலையில்தான் இருக்கிறது.
ப்ளூ சட்டை மாறன் பதிவு
இந்த சூழலில் திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் போட்டுள்ள பதிவு விவகாரத்தை இன்னும் சூடாக்கியது. தனது எக்ஸ் பக்கத்தில், நயினார் (மைண்ட் வாய்ஸ்): "இதைத்தானே நான் முன்னாடியே சொன்னேன்... அப்போ என்னை சுற்றி அடித்து மன்னிப்பு கேட்க வைத்தீங்களே... இப்போ ஏன் டா இப்படி?" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவு நேரடியாக ரசிகர்களை சுட்டது போல இருந்ததால், "வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல" என்ற ரியாக்ஷன்தான் அதிகமாக வந்தது.
நயினார் நாகேந்திரன் பேச்சு மீண்டும் வைரல்
இதற்கிடையில் சில வாரங்களுக்கு முன்பு நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறிய, "ஒரு நடிகையின் வீட்டில்தான் விஜய் இருக்கிறார்... அங்கிருந்து வெளியே வந்தால்தான் அரசியலில் நடமாட முடியும்" என்ற பேச்சும் மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த பேச்சுக்குப் பிறகு ஏற்பட்ட எதிர்ப்பால் அவர் மன்னிப்பு கேட்டிருந்தது குறிப்பிடப்பட்டது. இப்போது அந்த சம்பவம் மீண்டும் இழுக்கப்பட்டு பேசப்படுகிறது.
அரசியல் + சினிமா + தனிப்பட்ட வாழ்க்கை
சாதாரணமாக ஒரு நடிகரின் குடும்ப விஷயம் இவ்வளவு பெரிய அளவில் பேசப்படாது. ஆனால் இங்கே விஷயம் வேற மாதிரி.. விஜய் தற்போது அரசியலில் இருக்கிறார். கட்சி தொடங்கி இருக்கிறார், தேர்தல் அரசியல் சூழல் உள்ளது. எனவே இது முழுக்க தனிப்பட்ட விஷயமா? அரசியல் கோணம் உள்ளதா? என்ற கேள்வி தொடர்ந்து எழுகிறது.
அடுத்து என்ன?
மார்ச் 20-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. விஜய் நேரில் வருவாரா, வழக்கறிஞர் மட்டும் ஆஜராகுவாரா, அல்லது இரு தரப்பும் சமரசம் செய்ய முயற்சிப்பார்களா என்பது அடுத்த கட்ட கவனம்.
நயினார்:
— Blue Sattai Maran (@tamiltalkies) February 27, 2026
இதத்தானடா கொஞ்ச நாளைக்கி முன்னால சொன்னேன்? அதுக்கு ரவுண்டு கட்டி அடிச்சி மன்னிப்பெல்லாம் கேக்க வச்சீங்களே..
ஏன்டா இப்படி? https://t.co/1BhRQy5Aka
-
அடித்து ஆடும் விஜய்! லஞ்சம் வாங்குனா காலி! சென்னை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் -
விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்.. ரெடியாகும் ஃபைல்ஸ்.. எடுக்கப்படும் முக்கிய முடிவு? -
எதிர்க்கட்சிகள் தீர்ந்து போன சக்தி சரி.. அப்போ நீங்க? விஜய்யை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய வேல்முருகன் -
"விஜய் கோட் போடுவது பிரச்சனை இல்லை... எல்லாத்தையும் கோட்டை விடுவது தான் பிரச்சனை!" உதயநிதி தாக்கு -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய்











Click it and Unblock the Notifications