For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்த 'மாயா' உலகம் டிசம்பர் 21ல் அழியப் போகுதாம், தப்பிக்க பிரான்ஸ் கிராமத்துக்கு ஓடும் மக்கள்!

By A K Khan
Google Oneindia Tamil News

-ஏ.கே.கான்

மாயா நாகரீகம்...

மாயா நாகரீகம்...

சுமார் 4,600 ஆண்டு பழமை வாய்ந்ததாகக் கருதப்படுவது மாயா நாகரீகம் (Mayan civilization). பிரேசில், எல் சால்வடோர், கெளதமாலா பகுதிகளில் இந்த நாகரீகம் துவங்கி, தென் அமெரிக்கா முழுவதும் பரவி, வியாபித்து இருந்தது.

8ம் நூற்றாண்டில் இந்த நாகரீகம் அழியத் துவங்கி, 9ம் நூற்றாண்டில் காணாமலேயே போய்விட்டது. உலக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு சுமார் 200 ஆண்டுகாலம் நீடித்த வறட்சியால் இந்த நாகரீகமே அழிந்து போனதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

முக்கா முக்கா 3 முறை தோற்ற கடவுள்...

முக்கா முக்கா 3 முறை தோற்ற கடவுள்...

இந்த நாகரீகத்தின் நம்பிக்கைகளும் கேலண்டரும் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த நாகரீகத்தின் புராண நம்பிக்கைகளின்படி, கடவுள் இதுவரை 4 முறை பூமியைப் படைத்துள்ளார். அதில் மூன்று முறையும் பூமியை முழுமையாக உருவாக்க முடியாமல் கடவுளே தோற்றுவிட்டார். 4வதாக அவர் உருவாக்கிய 'சக்சஸ்புல்' பூமி தான் இப்போது நாம் வாழும் இந்த உலகம். அதில் தான் மனிதர்களையும் அறிமுகப்படுத்தினார் கடவுள்.

மாயா கேலண்டர்....

மாயா கேலண்டர்....

ஆனால், மாயா மொழியில் 13 பக்டூன்கள் (தோராயமாக சொன்னால் 5,125 வருடங்கள்) தான் இந்த உலகத்துக்கு லைப் பீரியட். அதன் பின்னர் இந்த உலகம் செத்துவிடும் (apocalypse). மாயா கேலண்டரின்படி, இந்த பூமி வரும் டிசம்பர் 21ம் தேதியோடு தனது 13 பக்டூன்களைக் கடந்து, காணாமல் போகப் போகிறது. மாயா கேலண்டர்படி இந்தத் தேதி 13.0.0.0.0.

இந்த மலை தான் நம்மை காப்பாற்றும்...

இந்த மலை தான் நம்மை காப்பாற்றும்...

இதை வைத்து ஜோதிடர்கள் இந்த உலகத்துக்கு மூடுவிழா ஆருடங்களை அள்ளிவிட ஆரம்பித்துள்ளனர். இந்த மாயா ஜோதிடத்துடன் தங்களது கற்பனைகளையும் சேர்த்து சில மாடர்ன் ஜோதிடர்கள் ஒரு புதிய கதையை விட்டுள்ளனர். இவர்களின் கூற்றுப்படி பிரான்ஸ் நாட்டின் தென் மேற்கே Bugarach என்ற சிறிய கிராமத்தில் உள்ள ஒரு மலை வரும் டிசம்பர் 21ம் தேதி அப்படியே பிளக்கும்.

Close Encounters of the Third Kind படம் பார்த்தீங்களா?...

Close Encounters of the Third Kind படம் பார்த்தீங்களா?...

அதிலிருந்து ஒரு வேற்று கிரக விண்கலம் வெளியே வரும். அந்த விண்கலத்தில் ஏறிக் கொள்கிறவர்கள் மட்டுமே தப்புவார்கள். மற்றவர்கள் எல்லோருமே இந்த பூமியோடு சேர்ந்து காலியாகப் போகிறார்கள். இது தான் இவர்கள் சொல்லும் ஜோசியம். மலை மீது வேற்று கிரக விண்கலம் வந்திறங்கி, வேற்றுகிரகவாசிகளும் வந்திறங்குவதை ''Close Encounters of the Third Kind'' படத்தில் நமக்குக் காட்டியிருந்தார் ஸ்டீவன் ஸ்பீல்பர்க். அதே போல 2012 படத்தில் உலக அழிவிலிருந்து மக்களைக் காக்க மாபெரும் நீர்மூழ்கிகள் ஒரு மலையைக் குடைந்து தான் கட்டப்படும். ஹாலிவுட்டுக்கு 'மாயா' ரொம்ப உதவியா இருக்கு போலிருக்கு!

பாதுகாப்புப் படையினர் முற்றுகையில் கிராமம்...

பாதுகாப்புப் படையினர் முற்றுகையில் கிராமம்...

இந்த ஜோதிடத்தையும் நம்பும் ஆட்களும் இருப்பதால், Bugarach பகுதிக்கு வரும் ஆட்களின் எண்ணிக்கை சமீபகாலத்தில் பல மடங்கு அதிகரித்துள்ளது. டிசம்பர் 21 நெருங்க நெருங்க இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து, பெரும் பிரச்சனையாகிவிடலாம் என்று பிரான்ஸ் உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து இப்போதே அங்கு பாதுகாப்புப் படையினரை பிரான்ஸ் குவிக்க ஆரம்பித்துள்ளது. மேலும் Bugarach பகுதிக்குள் வெளியாட்கள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

'மாயா கதைக்கு' மசாலா....

'மாயா கதைக்கு' மசாலா....

இது போதாது என்று டிசம்பர் 21ம் தேதி சூரியனிலிருந்து பெரும் கதிர்வீச்சு கிளம்பி பூமியை சுட்டுப் பொசுக்கும், பூமியின் காந்தப் புலமே (magnetic field) வடக்கு-தெற்கு என்பதற்குப் பதிலாக கிழக்கு-மேற்கு என்று மாறப் போகிறது என்றெல்லாம் கூட Conspiracy theorists-கள் இந்த 'மாயா கதைக்கு' மசாலா சேர்த்து வருகின்றனர்.

இது கெளதமாலா ஸ்டைல்!

இது கெளதமாலா ஸ்டைல்!

மாயா நாகரீத்தின் வழித் தோன்றல்கள் மிக அதிகமாக வசிக்கும் கெளதமாலா நாட்டில் அந் நாட்டு அரசே உலகத்தின் முடிவை எதிர்நோக்கி நிகழ்ச்சிகளை நடத்தப் போகிறதாம். ரொம்ப நல்லா இருக்கு!!.

இந்தப் படத்தைப் பாருங்கள்..

இந்தப் படத்தைப் பாருங்கள்..

இந்த மாயா நாகரீகத்தை பின்புலமாக வைத்து ஹாலிவுட் இயக்குனர் மெல் கிப்சன் 'Apocalypto' என்ற ஒரு படத்தை இயக்கியிருந்தார். அதை அடிக்கடி ஸ்டார் மூவிஸ், எச்பிஓவில் போடுகிறார்கள். சீரியல் ஆண்டிகளை விட்டுவிட்டு இந்தப் படம் பக்கமாக ரிமோட்டை தட்டி விடுங்கள்.. இந்த மாயா ஸ்டோரியைப் படித்த பின்னர் இந்தப் படம் இன்னும் ரொம்பப் பிடிக்கும்.

English summary
Local officials in Bugarach, in southwestern France, will temporarily bar access to the town’s mountain to prevent it from being overrun by visitors looking for a haven in the event of an apocalypse that some people believe will occur on Dec. 21, 2012, based on a particular interpretation of the Mayan calendar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X