For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Fact Check: நேபாள விமான விபத்துக்கு முன்பு விமான பணிப்பெண் எடுத்த வீடியோவா இது?

Google Oneindia Tamil News

சென்னை: நேபாள விமான விபத்துக்கு முன்பாக விமான பணிப்பெண் ஒருவர் ஜாலியாக வெளியிட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் 68 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்கள் உள்பட 72 பேருடன் சென்ற எட்டி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. தொழில்நுட்ப கோளாறுகளால் விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானது என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Fact Check சபரிமலையில் அரவணை பாயாசம் தயாரிக்கும் ஆலையில் நுழைந்ததா சிறுத்தை? Fact Check சபரிமலையில் அரவணை பாயாசம் தயாரிக்கும் ஆலையில் நுழைந்ததா சிறுத்தை?

விமானத்தில் காக்பிட்

விமானத்தில் காக்பிட்

இந்த நிலையில் விமானத்தில் உள்ள காக்பிட் குரல் பதிவு கருவி மற்றும் விமானத்தின் டேட்டா பதிவு கருவி ஆகிய இரண்டையும் மீட்பு குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த இந்தியர்கள் அபிஷேக் குஷ்வாலா, பிஷால் சர்மா, அனழில் குமார் ராஜ்பர், சோனு ஜெய்ஸ்வால், சஞ்சயா ஜெய்ஸ்வால் ஆகியோர் உயிரிழந்தனர்.

 உத்தரப்பிரதேசம்

உத்தரப்பிரதேசம்

அந்த 5 பேரில் 4 பேர் உத்தரப்பிரதேசத்தின் காசிபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது முகநூலில் நேரலை செய்த இறுதி காட்சிகள் வெளியாகியுள்ளன. அது போல் விமான விபத்திற்கு முன்பு விமான பணிப்பெண் ஜாலியாக வெளியிட்டதாக தகவல்கள் வெளியாகின.

வீடியோ

வீடியோ

இது தொடர்பான வீடியோவையும் சில ஊடகங்கள் வெளியிட்டன. இது குறித்து ஆய்வு செய்ததில் இந்த விமானத்தில் விமானபணிப்பெண்ணாக பணியாற்றி வந்தவர் ஒஷின் அலே. இவர் டிக்டாக் பிரபலம் என தெரிகிறது. இவர் விமான விபத்துக்கு முன்பு டிக்டாக்கில் மிகவும் மகிழ்ச்சியாக வீடியோ வெளியிட்டதாகவே சொல்லப்படுகிறது.

ஆய்வு

ஆய்வு

ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்தில் விமானத்தில் யாரும் இல்லை. விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு பதிவிடப்பட்டது என்றால் பயணிகள் இல்லாமல் எடுத்திருக்க வாய்ப்பில்லை என்பதால் இந்த செய்தி உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்றே கருதப்பட்டது.

டிக்டாக் செயலி

டிக்டாக் செயலி

இது குறித்த ஆய்வில் டிக்டாக் செயலி இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என ஆய்வு செய்ததில் அது செப்டம்பர் 11, 2022 இல் எடுக்கப்பட்டது. விமானப் பணிப்பெண்ணின் கடைசி வீடியோ என குறிப்பிட்டதால் இதை பார்க்கும் நபர்கள் அந்த பணிப்பெண்ணின் இறப்பு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் உண்மையில் அந்த வீடியோ எடுக்கப்பட்டது கடந்த ஆண்டு.

Fact Check

வெளியான செய்தி

நேபாள விமான விபத்துக்கு முன் டிக்டாக்கில் ஏர் ஹோஸ்டஸ் வெளியிட்ட ஜாலியான வீடியோ

முடிவு

இந்த வீடியோ நேபாள விமான விபத்துக்கு முன்பு எடுக்கப்பட்டது அல்ல. இது 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எடுக்கப்பட்டது.

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
English summary
Fact Check: Is this the last footage of airhostess before Nepal Plane Crash? What is the truth?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X