For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Fact check: கோவாக்சின் தடுப்பூசியில் கன்றுக்குட்டியின் சீரம் உள்ளதா? அரசு தரும் விளக்கம் இதுதான்

Google Oneindia Tamil News

டெல்லி: கோவாக்சின் தடுப்பூசியில் 20 நாட்களே ஆன கன்றுக்குட்டியின் சீரம் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவலைச் சுகாதார துறை அமைச்சகம் முற்றிலுமாக மறுத்துள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனா தடுப்பூசி பணிகளுக்கு கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

8 மணி நேர திக்திக் போராட்டம்.. உபியில் 180 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த.. 4 வயது சிறுவன் மீட்பு8 மணி நேர திக்திக் போராட்டம்.. உபியில் 180 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த.. 4 வயது சிறுவன் மீட்பு

இதில் கோவாக்சின் தடுப்பூசியின் பிறந்து 20 நாட்களே ஆன கன்றுக்குட்டியின் சீரம் இருப்பதாக இன்று சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது.

மத்திய அரசு விளக்கம்

மத்திய அரசு விளக்கம்

இந்தத் தகவலை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் முற்றிலுமாக மறுத்துள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கோவாக்சின் தடுப்பூசியின் பிறந்து 20 நாட்களே ஆன கன்றுக்குட்டியின் சீரம் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. இதில் உண்மைகள் திரிக்கப்பட்டு தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.

வெரோ செல்கள்

வெரோ செல்கள்

கோவாக்சினை உருவாக்க முதலில் வெரோ செல்கள் ( vero cell ) செல்களை உருவாக்க வேண்டும். அதில் தான் கன்றுக்குட்டியின் சீரம் பயன்படுத்தப்படுகிறது. உலகளவில் வெரோ செல்களை வளர்க்க இந்த முறையே பின்பற்றப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தான் போலியோ, ரேபிஸ், இன்ஃப்ளூயன்ஸா உள்ளிட்ட நோய்களுக்குப் பல ஆண்டுகளாகத் தடுப்பூசிகளை உற்பத்தி செய்துள்ளோம்.

Buffer முறை

Buffer முறை

அதன் பிறகு Buffer என்ற தொழில்நுட்பத்தைப் பின்பற்றி வெரோ செல்களில் இருக்கும் கன்றுக்குட்டியின் சீரம், தண்ணீர் மற்றும் சில குறிப்பிட்ட கெமிக்கல்கள் மூலம் நீக்கப்படும். அதன் பின்னரே, இந்த வெரோ செல்களில் பலவீனமான கொரோனா வைரஸ் செலுத்த்படும். Buffer முறையிலும் வைரஸ் வளர்ச்சியிலும் கன்றுக்குட்டியின் சீரம் முற்றிலுமாக அழிக்கப்படும்.

கன்றுக்குட்டியின் சீரம் இல்லை

கன்றுக்குட்டியின் சீரம் இல்லை

அதன் பிறகு கொரோனா வைரஸ் கொல்லப்பட்டு, மீண்டும் சுத்தம் செய்யப்படும். சுருங்கச் சொன்னால் இறுதியாக வரும் வேக்சினில் கன்றுக்குட்டி சீரம் இருக்காது" என்று அதில் கூறப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் கோவாக்சின் குறித்துப் பரவும் தகவல் உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கொண்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது.

Fact Check

வெளியான செய்தி

கோவாக்சின் தடுப்பூசியில் கன்றுக்குட்டியின் சீரம் உள்ளதா? அரசு தரும் விளக்கம் இதுதான்

முடிவு

வெளியான செய்திகோவாகிசன் தடுப்பூசியில் கன்றுக்குட்டியின் சீரம் உள்ளதுமுடிவுஇதில் உண்மைகள் திரிக்கப்பட்டு தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. கடைசியாகக் கிடைக்கும் கோவாக்சின் தடுப்பூசியில் கன்றுக்குட்டி

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
English summary
Union Health Ministry on Wednesday dismissed social media posts suggesting COVAXIN contains the newborn calf serum. Recently, Twitter was flooed with several posts claiming "newborn calf serum is used in revival process of vero cells which is used for the production of coronavirus during the manufacturing of Covaxin bulk vaccine".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X