For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Fake News Buster: ஆன்லைன் பொதுத் தேர்வுகளை நடத்தவில்லை.. வதந்தியை நம்ப வேண்டாம்.. சிபிஎஸ்இ விளக்கம்

Google Oneindia Tamil News

டெல்லி: சிபிஎஸ்இ தேர்வுகள் இணையத்திலேயே ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என்று பொய்யான செய்தி உலா வருகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுக்க லாக் டவுன் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி பிறப்பிக்கப்பட்ட லாக் டவுன் மொத்தமாக மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும் ஜூன் இறுதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Fake News Buster: We are not conducting online board exam, says CBSE

கல்வி நிறுவனங்கள் மார்ச் 16ம் தேதியே மூடப்பட்டது. லாக் டவுன் காரணமாக தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் சிபிஎஸ்இ தேர்வுகள் ஜூலை 7 முதல் ஜூலை 15 வரை நடக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு இடையில் மகாராஷ்டிராவில் சிபிஎஸ்இ தேர்வுகள் இணையத்திலேயே ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என்று பொய்யான செய்த உலா வருகிறது. அந்த செய்தியில், மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. இதனால் சிபிஎஸ்இ தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்துகிறோம்.

V H Softwares என்ற நிறுவனம் மூலம் ePariksha என்ற ஆன்லைன் தேர்வை நடத்துகிறோம் என்றும், இதற்காக சிபிஎஸ்இ தேர்வு அமைச்சகம் டாக்டர் சாஹில் கொஹ்லட் என்ற நபரை நியமனம் செய்துள்ளது என்றும் செய்திகள் வெளியானது.

அண்ணன் முறை அண்ணன் முறை "உறவு".. அபார்ஷனுக்கு வந்த 17 வயது சிறுமி.. இளைஞரை போக்சோவில் தூக்கிய குளச்சல் போலீஸ்

ஆனால் இது முழுக்க முழுக்க பொய்யான செய்தியாகும். மகாராஷ்டிரா உள்ளிட்ட எந்த மாநிலங்களிலும் ஆன்லைன் மூலம் தேர்வுகளை நடத்த சிபிஎஸ்இ முயற்சி செய்யவில்லை. முக்கியமாக V H Softwares என்ற நிறுவனம் உடன் அரசு எந்த விதமான ஒப்பந்தமும் செய்யவில்லை. இதனால் பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம் என்று அரசு தெரிவித்துள்ளது.

English summary
Fake News Buster: We are not conducting online board exam, says CBSE on fake news.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X