For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

FACT CHECK: இப்படி ஒரு உத்தரவா? ராணி எலிசபெத் இறுதி சடங்கு நாளில் மற்ற உடல்களை அடக்கம் செய்ய தடையா?

Google Oneindia Tamil News

லண்டன்: பிரிட்டன் மகாராணி இரண்டாவது எலிசபெத் உடல் அடக்கம் செய்யப்படும் செப்டம்பர் 19 ஆம் தேதி வேறு யாருக்கும் இறுதிச்சடங்குகள் நடைபெறக் கூடாது என்று உத்தரவிடப்பட்டதாக வெளியான செய்தியின் உண்மைத் தன்மை பற்றி அலசுவோம்.

பிரிட்டன் ராணி 2 வது எலிசபெத்துக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட எலிசபெத் ராணி கடந்த 8 ஆம் தேதி லண்டனில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

எலிசபெத் மரணத்தை தொடர்ந்து அவரது மகன் சார்லஸ் பிரிட்டன் மன்னராக முடிசூட்டிக் கொண்டார். எலிசபெத் மரணத்தை தொடர்ந்து பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவிக்க இது தொடர்பான செய்திகளே சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தன.

Fact check: ராணி எலிசபெத் இறுதி சடங்கில் சமஸ்கிருதத்தில் மரியாதை? மதுவந்தி பகிர்ந்த வீடியோ உண்மையாFact check: ராணி எலிசபெத் இறுதி சடங்கில் சமஸ்கிருதத்தில் மரியாதை? மதுவந்தி பகிர்ந்த வீடியோ உண்மையா

செப்டம்பர் 19

செப்டம்பர் 19

ஸ்காட்லாந்தில் உள்ள அரண்மனையில் உயிரிழந்த எலிசபெத்தின் உடல் நேற்று லண்டனுக்கு எடுத்து செல்லப்பட்டது. அடுத்த சில நாட்கள் ராணி எலிசபெத் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்படும். ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு வரும் செப்டம்பர் 19 அன்று வெஸ்ட்மின்ஸ்டரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இப்படி ஒரு உத்தரவா?

இப்படி ஒரு உத்தரவா?


இந்த நிலையில், மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல் அடக்கம் செய்யப்படும் செப்டம்பர் 19 ஆம் தேதி வேறு யாருக்கும் இறுதிச் சடங்கு செய்யக் கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக செப்டம்பர் 19 ஆம் தேதி இறுதிச் சடங்கிற்கு திட்டமிட்டிருப்பவர்கள் வேறு நாளுக்கு தள்ளி வைக்குமாறும் சிலர் தெரிவித்து வருகின்றனர்.

குழப்பமும் கேள்வியும்

குழப்பமும் கேள்வியும்

முக்கிய ஊடகங்கள் எதிலும் வெளியாகமல் சமூக வலைதளங்களில் மட்டும் வெளியான இந்த செய்தி காட்டுத்தீ போல பரவியது. பலரும் இதற்கு எதிராக எதிர்ப்பை பதிவு செய்து இருக்கின்றனர். ஆனால், எலிசபெத் மரணம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில், "பொதுமக்கள் மற்றும் அமைப்புகள் பிரத்யேகமாக எந்த கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டாம்." என்று குறிப்பிட்டுள்ளது.

உண்மை என்ன?

உண்மை என்ன?

இதுகுறித்து இறுதிச் சடங்கு இயக்குநர்களின் தேசிய சங்கம் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது, "இறுதிச் சடங்கு சேவை 24 மணி நேரமும் நடக்கக்கூடியவை. அனைத்து குடும்பங்களுக்கும் சம உரிமையும் அக்கறையும் உதவியும் அவசியம். செப்டம்பர் 19ம் தேதி இறுதிச் சடங்குகள் நடக்கின்றனர். சிலர் தங்களின் சொந்த காரணங்களுக்காக வேறு நாட்களுக்கு ஒத்திவைக்கிறார்கள்." என்று குறிப்பிட்டுள்ளது. எனவே சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி தவறானது என உறுதியாகிறது.

Fact Check

வெளியான செய்தி

பிரிட்டன் மகாராணி 2வது எலிசபெத் உடல் அடக்கம் செய்யப்படும் செப். 19 அன்று வேறு யாருக்கும் இறுதிச்சடங்குகள் நடைபெறக் கூடாது என்று அரசு உத்தரவு

முடிவு

இதுபோன்ற எந்த உத்தரவுகளும் அரசு தரப்பில் வெளியிடப்படவில்லை

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
English summary
Is other funerals are banned on the date of Queen Elizabeth funeral? Britian Queen Elizabeth II funeral to be conducting on London Westminister on September 19th. Britain officials refused the news spreading on social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X