வரலாற்றில் இல்லாத சரிவு.. தொடர்ந்து வீழும் தங்கம் விலை.. இப்போது தங்கம் வாங்கணுமா? விற்கணுமா?
சென்னை: சர்வதேச தங்க விலைகள் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து சரிவை சந்தித்தன. சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 காரட் தங்கம் விலை ₹12,588 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 காரட் தங்கம் விலை ₹11,539 ஆகவும், 1 கிராம் 18 காரட் தங்கம் விலை ₹9,699 ஆகவும் உள்ளது.
நேற்று மட்டும் சென்னையில் தங்கம் விலை கிட்டத்தட்ட 3000 ரூபாய் வரை சவரனுக்கு குறைந்துள்ளது. ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் மிகப்பெரிய வீழ்ச்சியை தங்கம் பதிவு செய்துள்ளது. சர்வதேச அளவில் நேற்று தங்கம் 5% க்கும் மேல் சரிந்ததாக ராய்ட்டர்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது. இது ஆகஸ்ட் 2020 க்குப் பிறகு ஏற்பட்ட மிகக் கடுமையான சரிவாகும்.

இன்று ஒரு அவுன்ஸ் ஸ்பாட் தங்கத்தின் விலை 0.4% குறைந்து $4,109.19 ஆக இருந்தது. இது திங்களன்று எட்டிய $4,381.21 என்ற அனைத்து கால உச்சநிலையிலிருந்து 6% க்கும் அதிகமான சரிவாகும்.
தங்க விலை சரிவுக்கு என்ன காரணம்?
சமீபத்திய தங்க விலை சரிவுக்கு, முதலீட்டாளர்கள் லாபத்தை எடுத்தது ஒரு காரணமாகும். தங்கம் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 60% லாபத்தை அளித்துள்ளது. நீண்டகால ஏற்றத்திற்குப் பிறகு பலர் லாபத்திற்காக தங்கத்தை விற்றது, அமெரிக்கா-சீனா வர்த்தக உறவுகள் போன்ற புவிசார் அரசியல் பதட்டங்கள் குறைதல், அமெரிக்க டாலர் வலுவடைதல், மற்றும் தங்கத்தின் கையிருப்பு அதிகரிப்பு , சில மத்திய வங்கிகள் தங்கத்தை விற்பது ஆகியவை காரணங்கள் ஆகும்.
தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களாக வேகமாக குறைந்து வருகிறது. சர்வதேச அளவில் 1.7 ட்ரில்லியன் டாலர் தங்க மார்க்கெட்டில் மட்டும் அழிந்துள்ளது. அதாவது தங்கம் வைத்துள்ள பலர் அதை விற்று காசாக மாற்றியதால் இந்த சரிவு ஏற்பட்டு உள்ளது.
மேலும், அமெரிக்கா-சீனா வர்த்தக உறவுகளில் ஒரு முன்னேற்றம் மற்றும் இந்தியா-அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஒரு சாதகமான முடிவு ஏற்படும் வாய்ப்பு ஆகியவை தங்கத்தின் விலையை குறைத்தன.
தங்கம் வாங்கலாமா வேண்டாமா?
இப்போது தங்கம் விலை குறைந்துவிட்டது. சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 காரட் தங்கம் விலை ₹12,588 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 காரட் தங்கம் விலை ₹11,539 ஆகவும், 1 கிராம் 18 காரட் தங்கம் விலை ₹9,699 ஆகவும் உள்ளது.
இப்படிப்பட்ட சூழலில் தங்கம் வாங்கலாமா வேண்டாமா என்ற கேள்விகள் பலருக்கும் வரலாம். ஆனால் பொருளாதார ஆலோசகர்கள் பலர்.. தங்கம் விலை சரிவது கெட்ட விஷயம் அல்ல.. நல்ல விஷயம்தான். இந்த நேரத்தில் தங்கம் வாங்குவது சரியாக இருக்கும்.
இப்படிப்பட்ட சூழலில் தங்கம் வாங்குவது நல்ல வாய்ப்பு. அதாவது விலை குறைவாக இருக்கும் நேரத்தில் தங்கம் வாங்கினால் அது வரும் காலத்தில் பலன் அளிக்கும். விலை குறைகிறது என்று பயந்து போய்.. பலர் தங்கத்தை போய் அவசரமாக போக விற்பனை செய்வார்கள். ஆனால் அது தவறான முடிவு. தங்கம் விலை குறைகிறது என்றால் அதற்கு பெயர் correction. பொதுவாக தொடர்ந்து விலை உயரும் சமயங்களில் கண்டிப்பாக இது போல correction நடக்கும்.
இப்படிப்பட்ட correction சமயங்களில் கூடுதலாக தங்கத்தில் முதலீடு செய்யலாம். அப்படி செய்யும் பட்சத்தில் வரும் காலங்களில் அது பெரிய அளவில் பொருளாதார ரீதியிலான பலன்களை கொடுக்கும் என்று பொருளாதார ஆலோசகர்கள் பலர் தெரிவிக்கின்றனர்.
-
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
கடன் vs முதலீடு.. நிம்மதியாக தூங்க இதுதான் பார்முலா.. எதை செய்தால் நமக்கு லாபம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications