Gold Price Today: போச்சு! மீண்டும் ராக்கெட் வேகத்தில் ஏறிய தங்கம் விலை! அமெரிக்க தேர்தல் முடிவால் கிடுகிடுவென உயர்வு
சென்னை: தங்கம் விலை (Gold Price Today) மீண்டும் ராக்கெட் வேகத்தில் பறந்துள்ளது. காலையில் சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்த நிலையில் தற்போது ரூ.2,200 அதிகரித்து மிகப்பெரிய ஷாக் கொடுத்துள்ளது. அமெரிக்க தேர்தலில் டிரம்பின் குடியரசு கட்சி பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் சர்வதேச சந்தையில் தங்கம் விலை தடாலடியாக உயர்ந்தது. இது நம்மூர் சந்தையிலும் எதிரொலித்துள்ளது.
தங்கம் விலை எப்போது தான் குறையும் என எதிர்பார்த்த நகை பிரியர்களுக்கு கடந்த சில மாதங்களாகவே தாறுமாறாக சரிந்துள்ளது. கடந்த ஜனவரியில் ஒரு சவரன் தங்கம் ரூ.1.34 லட்சம் என்ற வரலாற்றில் இல்லாத உச்சம் தொட்ட நிலையில், தற்போது ரூ.1.02 லட்சத்திற்கு குறைந்துவிட்டது. அதாவது கடந்த 10 மாதங்களில் சவரனுக்கு ரூ.32 ஆயிரம் குறைந்து விட்டது.

குறிப்பாக கடந்த மூன்று மாதங்களாகவே தங்கம் விலை பெரியளவில் உயராமல் ரூ.1.10 லட்சம் என்ற அளவில் நீடித்து வந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,05,760-க்கு விற்பனை ஆனது. அடுத்த மாதம் சற்று உயர்ந்து ரூ.1,15,080-க்கு விற்பனை ஆனது. மீண்டும் குறைந்த தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் ரூ.1,09,320-க்கு விற்பனை ஆனது. இது மேலும் குறைந்து நேற்று முன் தினம் ரூ.1,01,840-க்கு விற்பனை ஆனது.
3வது நாளாக உயர்ந்த தங்கம் விலை
தாறுமாறாக சரிந்து வரும் தங்கம் விலையால் நகை பிரியர்களும் குஷியடைந்தனர். எனினும் தங்கம் விலை ஒரு லட்சத்திற்கு கீழ் சென்றுவிடுமா என எதிர்பார்த்தனர். ஆனால் நேற்று முன் தினம் திடீரென தங்கம் விலை அதிகரித்தது. வாரத்தின் முதல் நாளே சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.1,02,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.45 உயர்ந்து ரூ.12,775-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.1,02,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.25 உயர்ந்து ரூ.12,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து இருப்பது நகை பிரியர்களுக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்து இருந்தது.
இன்றாவது மீண்டும் தங்கம் விலை குறைந்து இன்ப அதிர்ச்சி தருமா என நகை பிரியர்கள் எதிர்பார்த்த நிலையில் இன்றும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. சர்வதேச சந்தையில் இன்று ஒரு அவுன்ஸ் 33.62 டாலர் குறைந்து உள்ளது. எனவே நம் ஊர் சந்தையிலும் இது எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ச்சியாக 3வது நாளாக தங்கம் விலை இன்றும் அதிகரித்தது.
மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை
சென்னையில் இன்று காலை ஒரு சவரன் தங்கம் விலை ரூ.200 உயர்ந்து, ரூ.1,02,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.25 உயர்ந்து ரூ.12,825-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் அமெரிக்க தேர்தலில் டிரம்பின் குடியரசு கட்சி பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் சர்வதேச சந்தையில் தங்கம் விலை தடாலடியாக உயர்ந்தது. இது நம்மூர் சந்தையிலும் எதிரொலித்தது.
இதன்படி காலையில் 200 ரூபாய் அதிகரித்த நிலையில் தற்போது ரூ.2,200 அதிகரித்து மிகப்பெரிய ஷாக் கொடுத்துள்ளது. இதனால் சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,04,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.275 உயர்ந்து ரூ.13,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. திடீரென தங்கம் விலை உயர்ந்து இருப்பது நகை பிரியர்களை கலங்கடித்துள்ளது.
வெள்ளி விலையும் தடாலடி உயர்வு
தங்கம் விலையை போன்றே வெள்ளி விலையும் தாறுமாறாக சரிந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் கிராம் ரூ.425-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று ஒரு கிராம் ரூ.200க்கு விற்பனை ஆனது. இன்று காலையிலும் எந்த வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் மதியம் இன்று தங்கம் விலையை போன்று வெள்ளி விலையும் கிடுகிடுவென உயர்ந்தது. அதன்படி மதியம் ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.210-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்
4-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,02,600 (இன்று மதியம்)
4-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,02,600 (இன்று காலை)
3-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,02,400 (நேற்று)
2-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,02,200
1-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,01,840
31-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,01,840
30-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,320
29-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,560
28-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,560
27-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,080
26-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,680
25-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,560
24-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,560
23-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,480
22-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,880
21-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,07,120
20-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,07,920
19-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,560
18-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,280
17-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,280
16-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,120
15-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,120
14-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,720
12-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,760
12-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,10,720
11-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,11,040
10-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,11,040
08-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,860
07-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,860
06-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,280
05-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,400
04-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,400
03-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,400
02-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,10,200
01-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,320
30-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,680
29-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,120
28-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,320 (மாலை)
28-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,10,120 (காலை)
27-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,12,000
26-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,12,000
25-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,12,080
24-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,12,000
23-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,13,080
21-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,13,480
20-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.114,280
19-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.114,280
18-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.113,240
17-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.112,080
1.09.2026 - ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,15,080
1.08.2026 - ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,760.


Click it and Unblock the Notifications
