Gold Price Today: அவ்ளோதான், இனி குறையாது போல.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி
சென்னை: தங்கம் விலை (Gold Price Today) கடந்த ஒரு மாதமாக தாறுமாறாக சரிந்து வந்த நிலையில் நேற்று திடீரென உயர்ந்தது. சவரன் ஒரு லட்சத்திற்கு கீழ் குறையும் என எதிர்பார்த்த நகை பிரியர்களுக்கு, இனி அவ்வளவு தான் குறையாதுங்க என்று சொல்கிற அளவுக்கு உயர தொடங்கியுள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.360 அதிகரித்த நிலையில் இன்றும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைந்து வருகிறது. கடந்த ஜனவரியில் ஒரு சவரன் தங்கம் ரூ.1.34 லட்சம் என்ற வரலாற்றில் இல்லாத அளவுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்து குறைந்து வந்தது. குறிப்பாக பிப்ரவரி மாத இறுதியில் இருந்து தங்கம் விலை சரிய தொடங்கியது.

திடீர் ஷாக் கொடுத்த தங்கம் விலை
இடையிடையே அதிகரித்தாலும் புது உச்சம் தொடாமல் இருந்து வந்தது. அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,05,760-க்கு விற்பனை ஆனது. அடுத்த மாதம் சற்றும் உயர்ந்தது. அதாவது கடந்த செப்டம்பர் மாதம் ஒரு சவரன் ரூ.1,15,080-க்கு விற்பனை ஆனது. இதன்பிறகு மீண்டும் குறைந்த தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.1,09,320 -க்கு விற்பனை ஆனது.
இது மேலும் குறைந்த நேற்று முன் தினம் அதாவது நவம்பர் 1 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.1,01,840 -க்கு விற்பனை ஆனது. இதனால் தங்கம் விலை கண்டிப்பாக ஒரு சவரன் ரூ.1 லட்சத்திற்கு கீழ் சென்றுவிடும் என நகை பிரியர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் நேற்றைய விலை நகை பிரியர்களுக்கு திடீர் ஷாக்கை கொடுத்தது. நேற்று ஒரு சவரன் ரூ.360 உயர்ந்தது.
இன்றைய தங்கம் விலை என்ன?
சென்னையில் நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,02,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.45 உயர்ந்து ரூ.12,775-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் நகை பிரியர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கம் விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.200 உயர்ந்து ரூ.1,02,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.25 உயர்ந்து ரூ.12,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மற்றும் இன்று என 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்துள்ளது. தங்கம் விலை மீண்டும் ரூ 1 லட்சத்திற்கு கீழ் செல்லும் என எதிர்பார்த்த நகை பிரியர்களுக்கு இது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
வெள்ளி விலை என்ன?
தங்கம் விலையை போன்றே வெள்ளி விலையும் அதிரடியாக சரிந்தது. உச்ச பட்சமாக கடந்த ஜனவரி மாதம் ஒரு கிராம் ரூ.425-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றும் வெள்ளி விலை எந்த வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றும் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்
3-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,02,400 (இன்று)
2-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,02,200 (நேற்று)
1-11-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,01,840
31-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,01,840
30-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,320
29-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,560
28-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,560
27-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,080
26-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,680
25-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,560
24-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,560
23-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,480
22-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,880
21-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,07,120
20-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,07,920
19-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,560
18-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,280
17-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,280
16-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,120
15-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,120
14-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,720
12-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,760
12-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,10,720
11-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,11,040
10-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,11,040
08-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,860
07-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,860
06-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,280
05-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,400
04-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,400
03-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,400
02-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,10,200
01-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,320
30-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,680
29-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,120
28-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,320 (மாலை)
28-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,10,120 (காலை)
27-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,12,000
26-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,12,000
25-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,12,080
24-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,12,000
23-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,13,080
21-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,13,480
20-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.114,280
19-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.114,280
18-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.113,240
17-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.112,080
1.09.2026 - ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,15,080
1.08.2026 - ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,760.





Click it and Unblock the Notifications
