கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.. தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி
சென்னை: கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை மோசமாக சரிந்து வருகிறது. சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹12,273 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹11,250 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹9,390 ஆகவும் உள்ளது.
தங்கத்தின் அடுத்த ஆண்டு குறையக்கூடும் என்று ANZ வங்கி கணித்துள்ளது. புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் தங்கத்தை ஒரு பாதுகாப்பான புகலிடமாகக் கருதியதால், அமெரிக்க வட்டி விகிதக் குறைப்பு மற்றும் பலவீனமான டாலர் போன்ற காரணிகளுடன் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை அடைந்தது. ஆனால் இதே நிலை நீடிக்காது.

தங்கத்தின் விலை
சர்வதேச சந்தையில், உடனடித் தங்கம் 0.4 சதவீதம் உயர்ந்து ஒரு அவுன்ஸ் $4,224.79 ஆக வர்த்தகமானது. இது முன்னதாக $4,225.69 என்ற புதிய உச்சத்தை தொட்டிருந்தது. டிசம்பர் மாதத்திற்கான அமெரிக்க தங்க எதிர்கால ஒப்பந்தங்கள் 0.9 சதவீதம் அதிகரித்து $4,239.70 ஆக இருந்தது.
பொதுவாக, நிச்சயமற்ற காலங்களில் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கம், குறைந்த வட்டி விகிதச் சூழல்களில் சிறப்பாகச் செயல்படும். இந்த ஆண்டு இதுவரை 61 சதவீதம் உயர்ந்துள்ளது. அமெரிக்க டாலர் குறியீடு 0.1 சதவீதம் சரிந்து, ஒரு வாரக் குறைந்த நிலைக்கு அருகில் வர்த்தகமாகிறது. இது டாலரில் விலை நிர்ணயிக்கப்படும் தங்கத்தை வெளிநாட்டு வாங்குபவர்களுக்கு மலிவானதாக மாற்றுகிறது.
இரண்டாம் பாதியில் தங்கம் சரியும்
ANZ வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ்க்கு $4,400 ஆக உயரும் என்று கணித்துள்ளது. மேலும், ஜூன் 2026-க்குள் $4,600 என்ற உச்சத்தை எட்டக்கூடும் என்றும், பின்னர் அமெரிக்க பெடரல் ரிசர்வ் தனது கொள்கைகளை தளர்த்தும் சுழற்சியை முடிக்கும்போது இரண்டாம் பாதியில் சரிவு ஏற்படலாம் என்றும் கூறியுள்ளது.
ANZ மேலும், "பெடரல் வங்கியின் சுதந்திரம், அரசியல் நிச்சயமற்ற தன்மை, வர்த்தக வரிகள், புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் அதிகரித்து வரும் கடன்கள் குறித்த கவலைகள் தங்கத்தில் முதலீட்டு ஆர்வத்தை தொடர்ந்து வலுவாக வைத்திருக்கும்" என்று தெரிவித்தது.
இந்த வங்கி, வெள்ளி விலையும் 2026-ம் ஆண்டு மத்தியப் பகுதிக்குள் ஒரு அவுன்ஸ்க்கு $57.50-ஐ எட்டும் என்று கணித்துள்ளது. இருப்பினும், அமெரிக்க பெடரல் வங்கியின் கடுமையான நிலைப்பாடு மற்றும் எதிர்பார்ப்பை விட வலுவான அமெரிக்க பொருளாதார வளர்ச்சி ஆகியவை தங்கத்தின் விலையை குறைக்கும் அபாயங்களை உருவாக்கலாம் என்று ANZ எச்சரித்துள்ளது.
டாலர் மதிப்பில் தங்கம் வாங்குவது
ANZ வங்கி தனது கணிப்பில், இந்த ஆண்டின் இறுதிக்குள் தங்கம் ஒரு அவுன்ஸ் $4,400 ஆக உயரும் என்றும், ஜூன் 2026-க்குள் $4,600 என்ற உச்சத்தை எட்டும் என்றும் தெரிவித்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கி அதன் வட்டி விகித குறைப்பு சுழற்சியை முடித்த பிறகு, அடுத்த ஆண்டில் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் ANZ குறிப்பிட்டது.அதாவது சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹12,983 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹11,901 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹9,831 ஆகவும் உள்ளது. இது 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹10000 ஆக குறைய நிறைய வாய்ப்புகள் உள்ளன,
மத்திய வங்கியின் தங்க கொள்முதல், அரசியல் நிச்சயமற்ற தன்மை, வர்த்தக தடைகள், புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் அதிகரித்து வரும் கடன்கள் ஆகியவை தங்கத்தின் மீதான முதலீட்டு ஆர்வத்தை தொடர்ந்து வலுவாக வைத்திருக்கும்.. ஆனால் அது நீடிக்காது. ஒரு course correction தேவைப்படும். அது கண்டிப்பாக அடுத்த வருடம் இரண்டாம் பாதியில் நடக்கும். இதனால் கண்டிப்பாக விலை குறையும் என்று ANZ வங்கி தெரிவித்தது.












Click it and Unblock the Notifications