Gold Rate Today: போனா வராது மார்க்கெட் திறந்தா கிடைக்காது! சென்னையில் தங்கம் விலை பெரும் சரிவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 7) சவரனுக்கு ரூ 1200 குறைந்து ஒரு சவரன் ரூ 71,840-க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் தங்கம் விலையில் இத்தனை ரூபாய் குறைந்துள்ளதால் இன்றும் நாளையும் நகைக் கடைக்கு அதிகம் பேர் படையெடுப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

gold rate

சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதன் விலை ஏறவும் செய்கிறது. இறங்கவும் செய்கிறது. இதற்கு காரணமாக அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

கடந்த மே மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 15 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.68,880-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 8ஆம் தேதி ஒரு சவரன் ரூ.73,040 க்கு விற்பனையாகிறது. கடந்த ஏப்ரல் மாதம் ரூ 75 ஆயிரத்தை தங்கம் விலை நெருங்கிய நிலையில் இந்த மாதம் அது போன்று எதுவும் நடக்கவில்லை.

ஜூன் 7 ஆம் தேதியான இன்று சவரனுக்கு ரூ 1200 குறைந்து ஒரு கிராம் ரூ 8,980-க்கும் ஒரு சவரன் ரூ 71,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை நேற்றைய தினம் மாறாமல் இருந்தது. இன்று மக்களுக்கு டபுள் டமாகா போல் விலை குறைந்துவிட்டது. நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் மாற்றமிருக்காது. திங்கள்கிழமை மார்க்கெட் திறந்தால் என்ன நடக்குமோ என தெரியவில்லை.

கடந்த ஜூன் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:

07.06.2025- ஒரு சவரன் ரூ.71,840
06.06.2025- ஒரு சவரன் ரூ.73,040
05.06.2025- ஒரு சவரன் ரூ.73,040
04.06.2025- ஒரு சவரன் ரூ.72,720
03.06.2025- ஒரு சவரன் ரூ.72,640
02.06.2025- ஒரு சவரன் ரூ.71,600
01.06.2025- ஒரு சவரன் ரூ.71,360
31.05.2025- ஒரு சவரன் ரூ.71,360
30.05.2025- ஒரு சவரன் ரூ.71,360
29.05.2025- ஒரு சவரன் ரூ.71,160

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+