Gold Rate Today: தங்கம் விலை ரூ.90,000க்கு கீழே குறையுமா? அடுத்து என்ன நடக்கும்? வியாபாரிகள் கணிப்பு
சென்னை: தங்கம் விலை மிகக் கடுமையான வேகத்தில் உயர்ந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக சற்று வேகம் குறைந்தது. இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மார்க்கெட் விடுமுறை. நாளை தங்கம் விலை மீண்டும் உயருமா அல்லது, குறையுமா? இந்த நேரத்தில் தங்கம் வாங்குவது சரியாக இருக்குமா? என்ற கேள்வி பலர் மனதிலும் எழுந்துள்ளது.
சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே இருக்கிறது. ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடை, சீனா- இந்தியா மீதான வரி உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் அனைத்து நாடுகளும் தங்கத்தை வாங்கிக் குவிக்கின்றன. சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கள் நிதி பாதுகாப்பு கருதி, தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்கின்றனர். இதன் காரணமாக தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் எகிறி வருகிறது.

தங்கம் விலை தாறுமாறு உயர்வு
அக்டோபர் மாத தொடக்கத்திலிருந்து தொடர்ச்சியாக உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை நெருங்கிய தங்கம் விலை, கடந்த 17 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்து 600-க்கு விற்பனை ஆனது. இது இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சமாக இருந்தது. அக்டோபர் 18 ஆம் தேதி அதிரடியாக இறங்கியது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.11,950-ஆகவும், சவரனுக்கு ரூ.95,600-ஆகவும் விற்பனை ஆனது. ஆனால், அன்று மாலையே சவரனுக்கு ரூபாய் 400 அதிகரித்தது.
அக்டோபர் 24 ஆம் தேதி மாலை 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 குறைந்து ரூ.11,400க்கும் சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.91,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று (அக்டோபர் 25) தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. நேற்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு அதிரடியாக ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,500க்கும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.92,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை இனி என்ன ஆகும்?
இன்று மார்க்கெட் விடுமுறை என்பதால் நேற்றைய விலையிலேயே மாற்றம் ஏதுமின்றி இன்று விற்பனை ஆகிறது. நாளை தங்கம் விலை மீண்டும் உயருமா அல்லது, குறையுமா? இந்த நேரத்தில் தங்கம் வாங்குவது சரியாக இருக்குமா? என்ற கேள்வி பலர் மனதிலும் எழுந்துள்ளது.
இதுகுறித்து சென்னை வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானி கூறுகையில், தங்கம் விலை அதிகரிக்கும்போது, ஒருநேரத்தில் மிதமான நிலைக்கு வரும். அப்படிப்பட்ட ஒரு இடைவேளைதான் இந்த விலை சரிவு. இது பின்னர் மீண்டும் வேகம் எடுக்கும். தற்போது உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் (31.1 கிராம்) 4,100 டாலர் என்ற அளவில் இருக்கிறது.
தங்கம் விலை உயரும்
இது விரைவில் 4,500 டாலர் முதல் 4,800 டாலர் வரை செல்ல வாய்ப்பு அதிகம்.
இதற்கு 2 முதல் 3 மாதங்கள் காலம் எடுக்கும். ஆகவே தங்கம் விலை நிச்சயம் உயரும். அதேசமயம் ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்துக்கு கீழ் குறைய வாய்ப்பே கிடையாது. அமெரிக்காவின் பெடரல் வங்கியில் வைப்பு நிதிக்கான வட்டிவிகிதம் நவம்பர் மாதம் குறைந்தால், முதலீட்டாளர்கள் அதில் இருந்து பணத்தை எடுத்தும் தங்கத்தில் முதலீடு செய்வார்கள்.
அப்படி பார்க்கையில் தங்கத்தின் தேவை வருங்காலங்களில் அதிகரிக்கும். தங்கத்தை பொறுத்தவரையில் நீண்டகால முதலீட்டாகவே பார்க்கவேண்டும். குறுகிய கால முதலீட்டுக்கு தங்கம் ஏற்றது இல்லை. தங்கத்தில் இப்போது முதலீடு செய்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது" எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை
26.10.2025- ஒரு சவரன் ரூ.92,000
25.10.2025- ஒரு சவரன் ரூ.92,000
24.10.2025 (மாலை) - ஒரு சவரன் ரூ.91,200
24.10.2025 (காலை) - ஒரு சவரன் ரூ.92,320
23.10.2025- ஒரு சவரன் ரூ.92,000
22.10.2025 (மாலை) - ஒரு சவரன் ரூ.92,320
22.10.2025 (காலை)- ஒரு சவரன் ரூ.93,600
21.10.2025 (மாலை)- ஒரு சவரன் ரூ.92,320
21.10.2025 (காலை)- ஒரு சவரன் ரூ.93,600
20.10.2025- ஒரு சவரன் ரூ.96,000
19.10.2025 - ஒரு சவரன் ரூ.96,000
18.10.2025 - ஒரு சவரன் ரூ.96,000 (மாலை)
18.10.2025 - ஒரு சவரன் ரூ.95,600 (காலை)
17.10.2025- ஒரு சவரன் ரூ.97,600
16.10.2025 - ஒரு சவரன் ரூ.95,200
15.10.2025 - ஒரு சவரன் ரூ.94,880
14.10.2025 - ஒரு சவரன் ரூ.94,600
13.10.2025 - ஒரு சவரன் ரூ.92,640 (மாலை)
13.10.2025 - ஒரு சவரன் ரூ.92,200 (காலை)
12.10.2025 - ஒரு சவரன் ரூ.92,000
11.10.2025 - ஒரு சவரன் ரூ.92,000 (மாலை)
11.10.2025 - ஒரு சவரன் ரூ.91,400 (காலை)
10.10.2025 - ஒரு சவரன் ரூ.90,720 (மாலை)
10.10.2025 - ஒரு சவரன் ரூ.90,080 (காலை)
09.10.2025 - ஒரு சவரன் ரூ.91,400 (மாலை)
09.10.2025 - ஒரு சவரன் ரூ.91,200 (காலை)
08.10.2025 - ஒரு சவரன் ரூ.91,080 (பிற்பகல்)
08.10.2025 - ஒரு சவரன் ரூ.90,400 (காலை)
07.10.2025 - ஒரு சவரன் ரூ.89,600
06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000 (மாலை)
06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000 (காலை)
05.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600
04.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600
03.10.2025- ஒரு சவரன் ரூ 86,720
02.10.2025- ஒரு சவரன் ரூ 87,600 (மாலை)
02.10.2025- ஒரு சவரன் ரூ 87,040 (காலை)
01.10.2025- ஒரு சவரன் ரூ.87,600 (மாலை)
01.10.2025- ஒரு சவரன் ரூ.87,120 (காலை)
-
Gold Price Today: தங்கம் விலை 2-வது நாளாக இன்றும் உயர்வு.. நகை பிரியர்களுக்கு மீண்டும் ஷாக்! ஒரு சவரன் ரேட் என்ன? -
தங்கத்தை எந்த இடத்தில் மறைத்து கடத்துவதுனு விவஸ்தையே இல்லாம போச்சே! ஆடி போன அகமதாபாத் சுங்கத் துறை -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம்












Click it and Unblock the Notifications