Gold Rate Today: மொத்தமாக சரியும் தங்கம் விலை! இன்றும் பெரியளவில் வீழ்ச்சி! பொதுமக்கள் ஹேப்பி
சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த நிலையில், நேற்றைய தினம் அது மிக பெரியளவில் சரிந்தது. இந்தச் சூழலில் இன்றிரவு அமெரிக்க பெடரல் ரிசர்வும் கூட வட்டி விகிதம் குறித்த தனது முடிவை அறிவிக்கிறது. இதனால் தங்கம் விலை மேலும் சரியும் சூழல் உருவாகியுள்ளது. அதன்படி இன்றைய தினம் சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, சட்டென பிப்ரவரி மாதம் முதலே சரிய ஆரம்பித்தது. இதற்கு டிரம்ப் ஆரம்பித்த வளைகுடா போர் தான் முக்கிய காரணமாக இருக்கிறது. இது நகை பிரியர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்தது. தங்கம் வாங்குவதை மக்கள் அதிகரித்தனர்.

தங்கம்
இந்தச் சூழலில் தான் கடந்த ஒரு வாரமாக திடீரென தங்கம் விலை உயர ஆரம்பித்தது. எங்கு மீண்டும் தங்கம் விலை உச்சம் தொடுமோ என பொதுமக்கள் அஞ்சினர். ஆனால், நேற்றைய தினமே தங்கம் விலை பெரியளவில் சரிந்தது. இதற்கு அமெரிக்க பெடரல் ரிசர்வ் மீதான எதிர்பார்ப்பே முக்கிய காரணமாகும். அதாவது அமெரிக்க வட்டி விகிதம் குறித்த ஆலோசனை கூட்டத்தை அமெரிக்க மத்திய வங்கி நடத்துகிறது. இன்றிரவு வட்டி விகிதம் குறித்த முடிவை அமெரிக்கா எடுக்கும்.
வட்டி விகிதம்
இன்றைய தினம் வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்காது என்பதே மார்கெட்டின் கணிப்பு. ஆனால், பெடரல் ரிசர்வ் செய்திக்குறிப்பில் என்ன மாதிரியான கருத்துகள் உள்ளது என்பதே முக்கியத்துவம் பெறும்! ஒருவேளை பணவீக்கம் குறித்து கவலை தெரிவித்து இருந்தாலோ அல்லது வட்டி விகிதம் எதிர்காலத்தில் உயர்த்தப்படும் என்பது போன்ற கருத்துகள் இடம்பெற்றிருந்தால் தங்கம் விலை சரியும்.
இப்போது சர்வதேச சந்தையில் ஸ்பாட் தங்கத்தின் விலை 1.2 சதவீதம் சரிந்து அவுன்ஸுக்கு 4,026.21 டாலராக வர்த்தகமானது. ஆகஸ்ட் மாத டெலிவரிக்கான கோல்ட் ப்யூச்சர்ஸ் 1.3 சதவீதம் சரிந்து 4,025.70 டாலராக இருந்தது.
வல்லுநர்கள் சொல்வது என்ன
தங்கம் விலை தொடர்பாக வல்லுநர் ரோனா ஓ'கானெல் கூறுகையில், "தங்கம் விலைக்கு இப்போது 4,000 டாலர் என்பது வலிமையான சப்போர்ட்டாக இருக்கிறது. சீக்கிரமே இதை உடைத்துக் கொண்டு கீழே போக வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. எண்ணெய் விலை, அமெரிக்க வட்டி விகிதம் மற்றும் டாலரின் மதிப்பு ஆகியவற்றை பொறுத்தே தங்கம் விலையில் மாற்றம் இருக்கும்" என்றார்.
நேற்றைய தினம் சென்னையில் தங்கம் விலை பெரிய அளவில் சரிந்தது. சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,240 குறைந்து ரூ.1,05,720-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.155 குறைந்து ரூ. 13,125-க்கு விற்பனையானது. அதேபோல சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.235க்கு விற்கப்பட்டது.
இன்று தங்கம் விலை
இன்றைய தினம் சென்னையில் தங்கம் விலை சரிந்துள்ளது. 22 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூ.480 குறைந்து, ரூ.1,05,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.60 குறைந்து, ரூ.13,155க்கு விற்கப்படுகிறது. அதேபோல வெள்ளி விலை மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ.235க்கு விற்கப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:
29.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,240
28.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,720
27.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,960
26-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,06,400
25-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,06,400
24-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,840
23-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,08,000
22-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,07,440
21-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760


Click it and Unblock the Notifications
