Gold Rate Today: நிற்காமல் சரியும் தங்கம் விலை.. இன்றும் விலை மளமளவென குறைந்தது! மக்கள் பயங்கர ஹேப்பி
சென்னை: கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. குறிப்பாக நேற்றைய தினம் ஒரே நாளில் இரண்டு முறை கூட தங்கம் விலை குறைந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் சந்தோஷத்தில் உள்ளனர். சர்வதேச மார்கெட்டில் தங்கம் விலை சற்று குறைந்துள்ள நிலையில், இந்தியாவில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 ரூபாய் குறைந்துள்ளது.
தங்கம் விலை கடந்த சில காலமாகவே தொடர்ந்து உயர்ந்து உச்சம் தொட்டு வந்தது. குறிப்பாக இந்தாண்டு தொடக்கம் முதல் வரலாறு காணாத அளவுக்குத் தங்கம் விலை உயர்ந்தது. இதற்கு டிரம்ப்பும் அவர் எடுத்த நிலைப்பாடுகளும் தான் பிரதானக் காரணம்.. டிரம்பின் பல சர்ச்சைக்குரிய முடிவுகள் தங்கம் விலையை எங்கோ உச்சத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டது.

தங்கம் விலை
மிடில் கிளாஸ் மக்கள் கூட சீக்கிரம் தங்கத்தை வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. குறுகிய காலத்தில் எல்லாமே மெல்ல மாற ஆரம்பித்தது. ஒரு சவரன் தங்கம் ஒரு லட்ச ரூபாய் என்ற மார்க்கை நோக்கி நகர்ந்தது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலையை இரண்டு முறை உயர்த்தும் அளவுக்கு நிலைமை மோசமாகப் போனது.
இந்த சூழலில் தான் கடந்த சில நாட்களாக நிலைமை மெல்ல மாறி வருகிறது. யூடர்ன் போடும் தங்கம் விலை, மெல்லக் குறைய ஆரம்பித்துள்ளது. குறிப்பாக நேற்றைய தினம் ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,680 குறைந்தது. இது பொதுமக்களுக்கு மிகப் பெரியளவில் மகிழ்ச்சியைத் தரும் விஷயமாகவே இருக்கிறது.
மூன்று காரணங்கள்
தங்கம் விலை இந்தளவுக்குக் குறைய மூன்று விஷயங்கள் பிரதானமாகச் சொல்லப்படுகிறது. முதலில் தங்கம் விலை எக்குத்தப்பாக எகிறிவிட்ட நிலையில், இதில் முதலீடு செய்தவர்கள் லாபத்தை எடுக்கத் தங்கள் கையிருப்பை விற்கிறார்கள். அடுத்து வர்த்தக விவகாரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை நேரில் சந்தித்துப் பேசவுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். அதேபோல உக்ரைன் போர் விவகாரத்திலும் ரஷ்ய அதிபர் புதினை சந்திக்கவுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். இதுபோல நிலைமை மாற ஆரம்பித்துள்ளதே தங்கம் விலை குறையப் பிரதானக் காரணமாகும்.
குறையும் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் இன்றும் தங்கம் விலை குறைந்தே இருக்கிறது. நேற்று போலப் பெரியளவில் தடாலடியாக விழவில்லை என்றாலும் கூட இன்றும் ஓரளவுக்குத் தங்கம் விலை குறைந்தே இருக்கிறது. அது இந்திய சந்தையிலும் எதிரொலித்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.320 குறைந்து, ரூ.92,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.40 குறைந்து, ரூ.11,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.. அதேபோல சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து, ரூ.174க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை
22.10.2025- ஒரு சவரன் ரூ.92,000
21.10.2025 (மாலை)- ஒரு சவரன் ரூ.92,320
21.10.2025 (காலை)- ஒரு சவரன் ரூ.93,600
20.10.2025- ஒரு சவரன் ரூ.96,000
19.10.2025 - ஒரு சவரன் ரூ.95,360
18.10.2025 - ஒரு சவரன் ரூ.96,000
17.10.2025- ஒரு சவரன் ரூ.97,600
16.10.2025 - ஒரு சவரன் ரூ.95,200
15.10.2025 - ஒரு சவரன் ரூ.94,880
14.10.2025 - ஒரு சவரன் ரூ.94,600
13.10.2025 - ஒரு சவரன் ரூ.92,640 (மாலை)
13.10.2025 - ஒரு சவரன் ரூ.92,200 (காலை)
12.10.2025 - ஒரு சவரன் ரூ.92,000
11.10.2025 - ஒரு சவரன் ரூ.92,000 (மாலை)
11.10.2025 - ஒரு சவரன் ரூ.91,400 (காலை)












Click it and Unblock the Notifications