Gold Rate Today: டிரம்ப்பால் இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை! ரேட்டை கேட்டால் தலை சுத்துதே
சென்னை: அதிபர் டிரம்ப் அமெரிக்க இப்போது ரெசிப்ரோகல் வரியை அறிவித்துள்ளார். இது சர்வதேச அளவில் ஒரு வணிக போருக்கு இணையானது என ஆய்வாளர்கள் பலரும் குறிப்பிடுகிறார்கள். சென்னையில் நேற்று 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 8,510க்கு விற்பனையான நிலையில், இன்று ஒரு கிராம் ரூ.50 உயர்ந்து ரூ.8560க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை கடந்த சில காலங்களாகவே தொடர்ந்து உயர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக ஒரு கிராம் ரூ.8400க்கு மேல் இருந்து வருகிறது. இதனால் ஏழை மற்றும் மிடில் கிளாஸ் மக்கள் தங்கத்தை வாங்கவே முடியாத சூழலே இருந்து வருகிறது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் ரெசிப்ரோகல் வரி காரணமாகவே தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் 31ம் தேதி தங்கம் விலை ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்தது. 22 கேரட் தங்கம் ஒரு சவரன் காலை ரூ.520 உயர்ந்த நிலையில் மாலை மீண்டும் ரூ.200 உயர்ந்து ரூ.67,600க்கு விற்பனையானது. ஒரு கிராம் ரூ.8450க்கு விற்பனையானது.
கடந்த ஏப்ரல் 1ம் தேதி ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.68,000 தாண்டியது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.85 உயர்ந்து ரூ.8510க்கு விற்பனையான நிலையில், ஒரு சவரன் ரூ.680 உயர்ந்து ரூ.68,080க்கு விற்பனையானது. நேற்றைய தினம் தங்கம் விலை எந்தவொரு மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து அதே விலையில் விற்பனையாகிறது.
இந்தச் சூழலில் தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று ரெசிப்ரோகல் வரி குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அமெரிக்க நேரப்படி புதன்கிழமை மாலை 4 மணிக்கு (இந்திய நேரப்படி ஏப்ரல் 3 அதிகாலை 1.30) டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதில் அவர் உலகின் பல்வேறு நாடுகள் மீதும் வரியை அறிவித்துள்ளார். இது சர்வதேச வணிகத்தைப் பாதிக்கும் நிலையில், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்தைக் கருதுகிறார்கள். இதனால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து அதன் விலை உயரவே வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் வல்லுநர்கள்.இதற்கிடையே இன்றைய தினம் மீண்டும் புதிய உச்சத்தை தங்கம் விலை தொட்டுள்ளது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.68,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஒரு கிராம் ரூ.50 உயர்ந்து ரூ.8560க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்
3.04.2025- ரூ.68,480
2.04.2025- ரூ.68,080
1.04.2025- ரூ.68,080
31.03.2025- ஒரு சவரன் ரூ.67,600 (மாலை)
31.03.2025- ஒரு சவரன் ரூ.67,400 (காலை)
30.03.2025- ஒரு சவரன் ரூ.66,880
29.03.2025- ஒரு சவரன் ரூ.66,880
28.03.2025- ஒரு சவரன் ரூ.66,720
27.03.2025- ஒரு சவரன் ரூ.65,880
26.03.2025- ஒரு சவரன் ரூ.66,560
25.03.2025- ஒரு சவரன் ரூ.65,480
24.03.2025- ஒரு சவரன் ரூ.65,720
23.03.2025- ஒரு சவரன் ரூ.66,840
22.03.2025- ஒரு சவரன் ரூ.66,840
21.03.2025- ஒரு சவரன் ரூ.66,160
20.03.2025- ஒரு சவரன் ரூ.66,480
19.03.2025- ஒரு சவரன் ரூ.66,320
18.03.2025- ஒரு சவரன் ரூ.66,000
17.03.2025- ஒரு சவரன் ரூ.65,680
16.03.2025- ஒரு சவரன் ரூ.65,760
15.03.2025- ஒரு சவரன் ரூ.65,760
14.03.2025- ஒரு சவரன் ரூ.66,400 (பகல்)
14.03.2025- ஒரு சவரன் ரூ.65,840 (காலை)
13.03.2025- ஒரு சவரன் ரூ.64,960
12.03.2025 (நேற்று) ஒரு சவரன் ரூ.64,520
11.03.2025- ஒரு சவரன் ரூ.64,120
10.03.2025- ஒரு சவரன் ரூ.64,400












Click it and Unblock the Notifications