Gold Rate Today: தங்கம் விலை இன்று கிடுகிடு! சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?
சென்னை: சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ 160 உயர்ந்துள்ளது. இதனால் சவரன் ரூ.64,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதன் விலை ஏறவும் செய்கிறது. இறங்கவும் செய்கிறது. அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டு முதலே தங்கத்தின் விலை முழம் ஏறுவதும் ஜான் சறுக்குவதுமாகவே இருந்தது. கடந்த ஆண்டு சவரன் 50 ஆயிரத்தில் வட்டமடித்துக் கொண்டிருந்த தங்கம் விலை, இந்த ஆண்டு 55 ஆயிரத்திலும் 60 ஆயிரத்திலும் இருந்தது.
தற்போது 60 ஆயிரத்தை தாண்டி தங்கத்தின் விலை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த பிப் 1 ஆம் தேதி தங்கம் விலை சவரன் ரூ 62 ஆயிரத்தை தாண்டியது. நேற்றைய தினம் தங்கத்தின் விலையில் சவரனுக்கு ரூ 360 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ 64,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ 109-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 160 உயர்ந்துள்ளது. இதனால் சவரன் தங்கம் ரூ 64,360-க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் ரூ .8,045-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது போல் வெள்ளி விலை ரூ 1 குறைந்து கிராம் ரூ 108-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த பிப். 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்.
22.02.2025- ஒரு சவரன் ரூ.64,360
21.02.2025- ஒரு சவரன் ரூ.64,200
20.02.2025- ஒரு சவரன் ரூ.64,520
19.02.2025- ஒரு சவரன் ரூ.64,280
18.02.2025- ஒரு சவரன் ரூ.63,760
17.02.2025- ஒரு சவரன் ரூ.63,520
16.02.2025- ஒரு சவரன் ரூ.63,120
15.02.2025- ஒரு சவரன் ரூ.63,120
14.02.2025- ஒரு சவரன் ரூ.63,920
13.02.2025- ஒரு சவரன் ரூ.63,840
12.02.2025- ஒரு சவரன் ரூ.63,520
11.02.2025- ஒரு சவரன் ரூ.64,080
10.02.2025- ஒரு சவரன் ரூ.63,840
09.02.2025- ஒரு சவரன் ரூ.63,560
08.02.2025- ஒரு சவரன் ரூ.63,560
07.02.2025- ஒரு சவரன் ரூ.63,440
06.02.2025- ஒரு சவரன் ரூ.63,440
05.02.2025- ஒரு சவரன் ரூ.63,240
04.02.2025- ஒரு சவரன் ரூ.62,480
03.02.2025- ஒரு சவரன் ரூ.61,640
02.02.2025- ஒரு சவரன் ரூ.62,320
01.02.2025- ஒரு சவரன் ரூ.62,320 (பட்ஜெட்டுக்கு பின்)
01.02.2025- ஒரு சவரன் ரூ.61,960 (பட்ஜெட்டுக்கு முன்)












Click it and Unblock the Notifications