ரஸ்தாளி பெஸ்ட்.. மஞ்சள் காமாலை நோயை நெருங்கவிடாது காக்கும் உணவுகள் இதுதான். பலே வைட்டமின் C பழங்கள்
உணவு முறை, மன அழுத்தம், சமூக வாழ்க்கை முறையில் மாற்றம், துரித உணவு, போன்ற காரணங்களால் பல்வேறு நோய்களுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது. இதனால், நோயாளிகளின் எண்ணிக்கையும் பெருகிக்கொண்டே வருகின்றது..
அந்தவகையில் மஞ்சள் காமாலை பாதிப்பையும் சொல்லலாம்.. மலேரியா, சிரோஸிஸ், கல்லீரல் நோய், தேவையற்ற நச்சுப்பொருட்கள் ரத்தத்தில் கலப்பது போன்ற காரணங்களால் காமாலை ஏற்படலாம்.. மருந்துகள் மட்டுமே மஞ்சள் காமாலையை குணப்படுத்தாது, உணவுக் கட்டுப்பாடுகளும் நிலையை மேம்படுத்த உதவுகிறது.

அறிகுறிகள்: மஞ்சள் காமாலையின் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா? பசியின்மை என்பதே மஞ்சள் காமாலைக்கான ஆரம்ப அறிகுறியாக உள்ளது.. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டால் முகம், கண், நகம் போன்றவை மஞ்சள் நிறத்துக்கு மாறிவிடும்.
அடிவயிற்றில் வலி, தலைவலி, காய்ச்சல், குமட்டல், பசியின்மை, உடல் எடை இழப்பு, வாந்தி போன்றவையும் மஞ்சள் காமாலையின் அறிகுறிகளாகும்.
தவிர்க்க வேண்டியவை: எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை தவிர்த்துவிட்டு, அரிசிக்கஞ்சி, இட்லி போன்றவற்றை சாப்பிட்டால், ஜீரண கோளாறு ஏற்படாது.. உப்பு மற்றும் காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும்.
வறுத்த உணவுகள், சமைக்காத உணவுகள், அரைகுறையாக சமைத்த உணவுகளை தவிர்க்க வேண்டும். மாறாக உணவு விஷயத்தில் கவனமுடன் செயல்பட வேண்டும்.. எளிதில் செரிமானம் அடையக்கூடிய உணவுகளையே சாப்பிட வேண்டும்.. அதேபோல, ஒவ்வொருவரின் உடல்வெப்ப நிலையும் மாறுபடும் என்பதால், அதற்கேற்ற உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடவேண்டும்.
கீழாநெல்லி: கீழாநெல்லி வேர்களை, அரைத்து அதன் சாற்றை எடுத்து காலை மற்றும் மாலை உணவுக்கு முன்பு உட்கொண்டு வரலாம். வாரத்தில் 3 நாள்கள் நோயின் தாக்கத்துக்கு ஏற்றவாறு மோரில் கரைத்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.. ஆனால், இதையெல்லாம் மருத்துவர்களின் அனுமதியில்லாமல் மருந்தாக உட்கொள்ளக்கூடாது. உணவில் கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்வது நல்லது..
நெல்லிக்காய்கள் மிகவும் நல்லது.. காரணம், இதிலுள்ள ப்ளத்தோரா என்ற பொருள் மஞ்சள் காமாலையை போக்கக்கூடியது.. ஏராளமான வைட்டமின் C, ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளதால், கல்லீரலில் உள்ள செல்களை சுத்தம் செய்து, கல்லீரலை காக்கிறது.. எலுமிச்சம் பழமும் மிகச்சிறந்த மருந்தாகும்.. வெறும் வயிற்றில் எலுமிச்சம் சாறு குடித்து வரும்போது கல்லீரலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படும்.
ரஸ்தாளி தவிர, பைனாப்பிள், பப்பாளி, மாம்பழம் போன்ற பழங்களும் எளிதில் சீரணிக்கக் கூடிய என்சைம்கள் உள்ளன.
மஞ்சள் காமாலையின் பாதிப்பு உடலிலிருந்து அகன்றுவிட்டால் கண், நகம், முகத்திலிருக்கும் மஞ்சள் நிறம் மாறிவிடும்.. அத்துடன் உணவிலும் நாட்டம் கூடும் என்கிறார்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications